No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வடகிழக்கு மூடிய அமைப்பில் இருந்தால் என்ன தீமைகள் வரும்?

Jun 26, 2018   Dharani   483    வாஸ்து 

🏠 நாம் வசிக்கும் வீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு சேருமிடத்தை வடகிழக்கு என்போம். இதற்கு ஈசான்ய மூலை என்றும் பெயர் உண்டு. இந்த வடகிழக்கு மூலையை எப்போழுதுமே திறந்தே வைக்க வேண்டும். அதில் குறிப்பாக மெயின் வாசல் வரலாம். இரண்டு பக்கமும் ஜன்னல்கள் வர வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் சூரிய வெளிச்சம் வரக்கூடிய அளவிற்கு திறந்து இருப்பது சிறப்பு. நீங்கள் ஜன்னலை திறந்தால் வானம் தெரியும்படியாக அமைப்பு இருப்பது சிறப்பு.

🏠 வடகிழக்கு திறந்த அமைப்பில் உள்ள வீட்டில் வசிப்பவர்கள் தங்கள் தங்களுடைய வேலைகளை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். எண்ணிலடங்கா நன்மைகள் வந்து சேரும். வடகிழக்கு மூடிய அமைப்பில் இருந்தால் என்ன தீமைகள் வரும் என்பதைப் பற்றி அறிவோம்.

1. உடல் நலம் கெடும்.

2. முன்னேற்றம் தடைபடும். செல்வ இழப்பு ஏற்படும்.

3. செய்யக்கூடிய அனைத்து வேலைகளிலும் தடங்கல்கள் ஏற்படும்.

4. வறுமை வந்து சேரும்.

5. விபத்து ஏற்படாமல் தலையில் மட்டுமே அடிபடும்.

6. மன நிம்மதி கெடும்.

7. ஆண்களுக்கு வேலையில் அதிக நாட்டம் இருக்காது.

8. குழந்தை பாக்கியம் இராது.

9. உறவுகளில் விரிசல் ஏற்படும்.

10. இதுபோல உள்ள வீடுகளில் உள்ளவரின் நிலைமை கோமா நிலையில் உள்ளதுபோல் தோன்றக்கூடும்.

11. வீட்டின் முதல் வாரிசு ஆண் என்றால் தந்தை மகன் உறவில் விரிசல் ஏற்படும்.

12. வீட்டின் முதல் வாரிசு பெண் என்றால், அந்த பெண்ணின் கணவர் கடுமையாக பாதிக்கப்படுவார்.

🏠 ஈசான்யம் என்பது நமக்கு தலைப்பகுதிக்கு ஒப்பானது. தலையில் எப்படி கண், காது, மூக்கு, வாய், மூளை இதுபோல மிக முக்கியமான பாகங்கள் உள்ளதோ அதுபோல் ஒரு வீட்டிற்கு மிக முக்கிய பங்கினை கொண்டது இந்த வடகிழக்கு ஈசான்ய இடம் ஆகும்.


Share this valuable content with your friends


Tags

கடன் பிரச்சனைக்கும் வாஸ்து தான் காரணமா? நினைத்ததை நிறைவேற்றும் ஆவணி சதுர்த்தி! எலுமிச்சைப்பழம் உருண்டு ஓடுவது போலவும் குடில் today rasipalan 04.05.2022 buffellow kuthuvilakku கோவில் கோபுரத்தை எடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சுக்கிராச்சாரியார் உலக கடவுச்சொல் தினம் தினசரி ராசிபலன் (19.12.2021) பள்ளிக்கூடத்தினை கனவில் கண்டால் என்ன பலன்? kirakangal சானியா மிர்சா மகனுக்கும் ராகு திசை நடந்தால் என்ன பலன்? march 25 கனவில் அன்னப்பறவை என் தலையில் அமர்ந்து கொண்டு இறங்கவில்லை. இதற்கு என்ன பலன்? மூன்றாவது குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் 4. குளிகை நேரத்தில் குழந்தை பிறக்கலாமா? நிருதி மூலையில் பள்ளம் இருக்கலாமா?