No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




தென்கிழக்கை மூடிய கட்டிட அமைப்பினால் வரக்கூடிய தீமைகள்!!

Jun 26, 2018   Dharani   505    வாஸ்து 

🏠 நாம் குடியிருக்கும் வீட்டில் தெற்கு மற்றும் கிழக்கு பகுதி சேருமிடத்தை தென்கிழக்கு என்போம். அதை ஆக்கினேயம் என்றும், அக்னி மூலை என்றும் பல பெயர்களில் கூறுவார்கள். இப்பகுதியை பற்றிய சிறப்புகளைப் பற்றி பார்ப்போம்.

🏠 தென்கிழக்கு பகுதியை மூடாமல் கட்ட வேண்டும். அதாவது வீட்டையும் காம்பவுண்டையும் மூடாமல் கட்ட வேண்டும். காம்பவுண்ட் இல்லாத பட்சத்தில் மற்றொரு வீட்டுடன் சேர்த்து கட்டுவது கூடாது.

🏠 நம்முடைய வீட்டில் தென் கிழக்கில் எப்பொழுதுமே இரண்டு பக்கமும் சமையலறையிலிருந்து ஜன்னலை திறக்கும்போது வானம் தெரியும்படியான அமைப்பு இருந்தால் மிக நல்லது. தென்கிழக்கு நமது வீட்டிற்கு பாதுகாப்புக்கு மற்றும் பெண்களின் மனநிலை மற்றும் ஆண், பெண் இருவருக்கும் ஆரோக்கியத்தை குறிக்கக் கூடியது. தென்கிழக்கை மூடிய கட்டிட அமைப்பினால் வரக்கூடிய தீமைகளை பற்றி அறிவோம்.

1. திருட்டு போக வாய்ப்புண்டு.

2. தீ விபத்து ஏற்பட வாய்ப்புண்டு.

3. கோர்ட் கேஸ், ஜெயில் வாழ்க்கைக்கு தொடர்புண்டு.

4. பெண்களின் மனநிலை கெடும்.

5. குழந்தைகளுக்கு தீய பழக்கங்கள் ஏற்படும்.

6. ஆண், பெண் இருவருக்குமே இரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வரக்கூடும்.

7. பெண்களுக்கு கருசிதைவு ஏற்படும். குறைபிரசவம் ஏற்பட வாய்ப்புண்டு.

8. குழந்தை பாக்கியம் இல்லாமல் போக வாய்ப்புண்டு.

9. பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கக்கூடிய வீடாக மாறிவிடும்.

🏠 மேலே குறிப்பிடப்பட்டுள்ள தீமைகள் அனைத்தும் இடத்திற்கு இடம், ஆட்களுக்கு ஆட்கள் வாஸ்து மாறி வேலை செய்கிறது. இது பொதுவான பலன்கள் ஆகும்.


Share this valuable content with your friends