No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டில் உணவு அருந்தும் அறை எங்கு வர வேண்டும்?

Jun 26, 2018   Dharani   505    வாஸ்து 

🏠 நமது வீட்டில் உணவு அருந்தும் அறை என்கிற Dinning Room எங்கு வர வேண்டும். அதனால் நமக்கு ஏதேனும் நன்மைகள் உண்டா என்பது பற்றி அறிந்து கொள்வோம்.

🏠 பொதுவாக நமது ஊரில் கட்டக்கூடிய கட்டிடங்களில் டைனிங் ரூம்மை சமையலறை அருகிலேயே வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளோம். அந்த வகையில் தென் கிழக்கு பகுதியில் சமையலறை வரும்போது சமையலறைக்கு மேற்கு புறமாவோ அல்லது வடக்கு புறமாகவோ டைனிங் அமைப்பது மிக சிறப்பு. இந்த டைனிங் அறையை பொருத்தவரை நீங்கள் சமையலறையிலிருந்து போய்வர ஏதுவாகவும், ஹால்லில் இருந்தும் போய் வருவதற்கு ஏதுவாகவும் வாசல் அமைப்பது சிறப்பு.

🏠 உங்களது வீட்டில் சமையலறை வடமேற்கு பகுதியில் ஒரு வேலை இருந்தால் அந்த சமையலறைக்கு தெற்கு புறமாகவோ அல்லது கிழக்கு பகுதியிலோ டைனிங் வைத்துக் கொள்வது சிறப்பு. வடமேற்கு சமையலறை வரும்போது, வடகிழக்கில் டைனிங் வர வாய்ப்புள்ளது. அதுபோல வரும் பட்சத்தில் வடகிழக்கு அறையை டைனிங்காக பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் வடகிழக்கு நன்றாக திறப்பு இருக்க வேண்டும் என்பதை மறந்துவிட கூடாது.

🏠 உங்களுடைய மொத்த வீட்டில் தென்மேற்கில் டைனிங் வரும்போது அதை தவிர்ப்பது மிக சிறப்பு. அதாவது அந்த பகுதியை மாற்றி அந்த அறையை மாஸ்டர் பெட்ரூமாக வைப்பதே சிறப்பு.

🏠 தென்மேற்கில் டைனிங்கை தவிர்க்க முடியாத பட்சத்தில் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு கெடுதலான பலன்களே ஏற்படுகிறது. அதில்

1. கணவன், மனைவி உறவில் விரிசல்

2. பொருளாதார நிலை கையை மீறி சென்றுவிடுதல்

3. பெண்கள் வருமானத்தில் குடும்ப நடத்த வேண்டிய நிர்பந்தம்

4. குறித்த வயதில் திருமணம் நடைபெறாமல் தள்ளிபோகுதல்

5. விருப்ப ஓய்வு வாங்கி கொள்ளுதல்

6. வீட்டிலேயே சமைக்க முடியாத சூழ்நிலை உருவாகி மூன்று வேளையும் ஹோட்டல் சாப்பாட்டை வாங்கி சாப்பிட கூடிய நிலை உருவாகுதல்.

🏠 இதுபோல் இன்னும் பல பிரச்சனைகள் உருவாக காரணம் இதுபோன்ற தவறான அமைப்பே ஆகும். டைனிங்கை பொறுத்தவரை நீங்கள் உங்களது வீட்டில் சௌகரியத்திற்கு ஏற்ப வைத்து கொள்ளுங்கள். அதற்கும் வாஸ்துவுக்கும் தொடர்பில்லை. தென் மேற்கு அறையை தவிர எல்லா அறைகளிலும் உங்களது விருப்பத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளுங்கள்.


Share this valuable content with your friends