No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டின் உட்பகுதியில் எந்தெந்த பகுதியில் சமையலறை வரவேண்டும்?

Jun 26, 2018   Dharani   599    வாஸ்து 

🏠 நமது வீட்டின் உட்பகுதியில் எந்தெந்த பகுதியில் சமையலறை வரவேண்டும். அதனால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை பற்றி அறிவோம். நாம் குடியிருக்கும் வீட்டில் முக்கிய பங்கினை வகிப்பது சமையலறையே. அதை நாம் நம் வீட்டில் அமைக்கக்கூடிய இடத்தை பொறுத்து அதனுடைய பலன் மாறுபடுகிறது.

தென் கிழக்கு :

🏠 நமது வீட்டில் மொத்த இடத்திற்கும், தென் கிழக்கு பகுதியில் மட்டுமே சமையலறை வர வேண்டும். அதுவும் கிழக்கு முகமாக சமைக்கும் அமைப்பு இருக்க வேண்டும். சமையலறையை பொருத்த வரைக்கும் கிழக்கும் தெற்கும் இருபுறமும் ஜன்னல் இருப்பது சால சிறந்தது.

வட கிழக்கு :

🏠 நமது வீட்டில் மொத்த இடத்திற்கு வடகிழக்கு பகுதியில் சமையலறை வரக்கூடாது. அப்படியும் தவறுதலாக சமையலறை வரும் பட்சத்தில் அந்த வீட்டில் பல கெடுதலான பலன்களே ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

1. குடும்பத்தில் எப்போதுமே நிம்மதியற்ற நிலை.

2. குடும்ப உறவில் விரிசல்.

3. மன நலம் கெடும்.

4. வறுமை ஏற்படும்.

5. குடும்பத்தலைவர் பாதிக்கப்படுவார்.

6. விபத்து ஏற்பட்டால் தலைப்பகுதியில் மட்டுமே ஏற்படும்.

7. தந்தை மகன் உறவு பாதிக்கப்படும்.

8. நிரந்தர வருமானம் இராது.

வடமேற்கு :

🏠 நமது வீட்டில் மொத்த பகுதியில் வடமேற்கு பகுதியில் சமையலறை வரும்பட்சத்தில் தாராளமாக வைத்துக் கொள்ளலாம். இதனால் எதுவும் தவறோ அல்லது தீமைகளோ ஏற்படாது. இதுபோல் வடமேற்கு சமையலறை இடங்கள் பெரும்பாலும் ஹோட்டல் அல்லது மடம் அல்லது அன்னதான கூடங்களுக்கு மேலும் சிறப்பை தரும். அதே அமைப்பை வீட்டில் நாம் வைக்கும்போது அந்த வீட்டில் உள்ள பெண்கள் எந்நேரமும் சமையலறையிலேயே இருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டு எப்பொழுதுமே சமைத்துக் கொண்டே இருப்பார்கள்.

தென்மேற்கு :

🏠 நமது மொத்த வீட்டில் தென்மேற்கு பகுதியில் சமையலறை எக்காரணம் கொண்டும் வரக்கூடாது. அப்படியும் தவறுதலாக வரும்பட்சத்தில் அந்த வீட்டில் மிக கெடுதலான பலன்களே ஏற்படும்.

1. கணவன், மனைவி பிரிவு ஏற்படும். அதில் பல வகைகள் உண்டு.

2. ஆண்களுக்கு உடல் ரீதியிலான பாதிப்புகள் ஏற்படும்.

3. திருமணத்தடை ஏற்படும்.

4. குழந்தை பிறப்பு தள்ளி போகும். சில சமயம் வாரிசு அற்ற நிலைகள் ஏற்பட வாய்ப்புண்டு.

5. தற்கொலை எண்ணம் ஏற்படும்.

6. பொருளாதார இழப்பு, வறுமை, கடன் சுமை ஏற்பட வாய்ப்புண்டு.

🏠 இதில் குறிப்பிட்ட நான்கு உள் மூளையைத் தவிர வீட்டின் மத்திய பகுதியான வடக்கு மத்திய பகுதி, மேற்கு மத்திய பகுதி, கிழக்கு மத்திய பகுதி, தெற்கு மத்திய பகுதி என நான்கு இடங்கள் உண்டு. அதுபோன்ற இடங்களில் சமையலறை வரும்பட்சத்தில் இந்த பலன்கள் மொத்தமாக வேறுபடும். எனவே அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரின் உதவியால் மட்டுமே உங்களுடைய வீட்டு அமைப்பில் உள்ள சமையலறைக்கு தீர்வு காண முடியும்.


Share this valuable content with your friends