No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




வீட்டிற்கு தலைவாசல் என்கிற வாசற்படி அமைப்பு எங்கு வர வேண்டும்?

Jun 26, 2018   Dharani   688    வாஸ்து 

🏠 நாம் வாழும் வீட்டிற்கு தலைவாசல் என்கிற வாசற்படி அமைப்பு எங்கு வர வேண்டும். அதனால் என்ன நன்மை, தீமைகள் பற்றி அறிவோம்.

🏠 வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் எந்த மாதிரி வீடானாலும், நான் முன்பே குறிப்பிட்ட 10 விதிமுறைகள்தான் பொருந்தும். ஆனாலும் இன்று தலைவாசல் அமைப்பைப் பற்றி குறிப்பிட வைப்பதில் பல குழப்பங்கள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.

வடக்கு வாசல் :

🏠 நம்முடைய வீட்டில் வடக்கு பகுதியில், அதாவது கிழக்கிலிருந்து மேற்கு வரை உள்ள வடக்கு சுவற்றில் 50மூ கிழக்கு பகுதியில் மட்டுமே வாசல் வைக்க வேண்டும். இதுவே உச்ச வாசல் அல்லது சரியான வாசல் என்போம்.

கிழக்கு வாசல் :

🏠 நம்முடைய வீட்டில் கிழக்கு வாசல் என்பது, கிழக்கு சுவற்றில் வடக்கிலிருந்து தெற்கு வரை உள்ள பகுதியில் 50மூ வடக்கு சார்ந்து வைப்பது சிறப்பு.

தெற்கு வாசல் :

🏠 நம்முடைய வீட்டில் தெற்கு வாசல் என்பது தெற்கு சுவற்றில் கிழக்கிலிருந்து மேற்கு வரை உள்ள சுவரில் 50மூ கிழக்கு பகுதியில் வாசல் வைப்பது சிறப்பு. அதேபோல் தெற்கு வாசல் வைக்கும்போது நேர் எதிரில் வடக்குப்புறமும் வாசல் அமைப்பது மிக சரியான முறை.

மேற்கு வாசல் :

🏠 நமது வீட்டிற்கு மேற்கு பகுதி வாசல் என்பது மேற்கு சுவரில் வடக்கிலிருந்து தெற்கு வரை உள்ள பகுதியில் 50மூ வடக்கு சார்ந்து வாசல் அமைப்பது மிக சரியானதே. மேற்கு பகுதியில் வாசல் வைக்கும்போது வாசலுக்கு நேர் எதிராக கிழக்கு பகுதியிலும் வாசல் வைப்பது மிக சிறப்பு.

🏠 நான் மேலே குறிப்பிட்ட அமைப்புகளை சரியாக கையாள வேண்டுமானால் திசைக்காட்டி கருவியின் உதவியால் மட்டுமே முடியும். அதேபோல் நாம் கட்டக்கூடிய வீட்டிற்கு அருகில் வரக்கூடிய ரோடு அமைப்பை பொருத்தே வாசல் வைப்பது சிறந்தது.

பொதுவான தீமைகள் :

🏠 நான் மேலே குறிப்பிட்ட பகுதிகளில் வராமல் அதற்கு எதிரான பகுதியில் வாசல் அமைப்புகள் வரும்போது அந்த வீட்டில் பல கெடுதலான விஷயங்கள் நடைபெறுகிறது.

1. தொழில் நஷ்டம்

2. கணவன், மனைவி உறவு பிரிவு

3. விருப்ப ஓய்வு

4. சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாத நிலைமை

5. உறவுகளில் விரிசல்

6. வெளிநாடு அல்லது வெளியூரிலேயே இருந்து விடுதல்

7. அடிக்கடி விபத்து

8. தற்கொலை எண்ணம் வருதல்

9. கடன்சுமை அதிகமாகி விடுதல்

10. காதல் திருமணம் அல்லது திருமணமே ஆகாமல் போய் விடுதல்

11. சில சமயம் கணவன், மனைவிக்குள் நிரந்தர பிரிவு ஏற்படுதல்

🏠 இதுபோல இன்னும் பல கெடுதலான பலன்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே வாசல்படி என்பது மிக மிக முக்கியமான ஒரு பகுதி. அதை அமைக்கும்போது அனுபவம் வாய்ந்த வாஸ்து நிபுணரின் உதவியால் செய்வது சிறப்பு.


Share this valuable content with your friends