No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஐப்பசி மாதத்தில் கிரகப்பிரவேசம் வைக்கலாமா?

Jun 25, 2018   Suganya   591    ஜோதிடர் பதில்கள் 

1. ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம்.

🌟 இருப்பினும் கோச்சார பலன்கள் யாவும் இருவருக்கும் ஒரே மாதிரி அதாவது நன்மை என்றாலும் தீமை என்றாலும் இரு மடங்கு உண்டாகும்.

🌟 எனவே, ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் திருமணம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

2. ஐப்பசி மாதத்தில் கிரகப்பிரவேசம் வைக்கலாமா?

🌟 ஐப்பசி மாதத்தில் கிரகப்பிரவேசம் வைக்கலாம்.

3. பெண் பிள்ளைகள் திதி கொடுக்கலாமா?

🌟 திருமணம் ஆகாத பட்சத்தில் ஆண் வாரிசுகள் இல்லை என்னும் நிலையில் பெண் பிள்ளைகள் தாராளமாக திதி கொடுக்கலாம்.

4. ஒருவருக்கு பிள்ளை இல்லையென்றால் இறுதி சடங்கு யார் செய்யலாம்?

🌟 ஒருவருக்கு பிள்ளை இல்லையென்றால் இறுதி சடங்கை உடன் பிறந்தோர் வாரிசுகளும், உடன் பங்காளிகளும் செய்ய கடமைப்பட்டவர்கள்.

5. ஒரே திசை நடந்தால் திருமணம் செய்யக்கூடாதா? மகரம் -சிம்மம் ராசி திருமணம் செய்து கொள்ளலாமா?

🌟 மணமக்கள் இருவருக்கும் ஒரே திசை என்பது ஒருவருக்கு ஆதியாகவும், மற்றொருவருக்கு அந்தமாக இருக்கும் பட்சத்தில் திருமணம் செய்யலாம்.

🌟 மற்ற பொருத்தங்கள் அமைந்து வருமாயின் மகரம்-சிம்மம் ராசி திருமணம் செய்து கொள்ளலாம்.

6. பிரதோஷம், சதுர்த்தி, சஷ்டி மற்றும் ஏகாதசி ஆகிய தினங்களில் முடி வெட்டலாமா?

🌟 சதுர்த்தி, சதுர்தசி, சஷ்டி, நவமி மற்றும் பௌர்ணமி ஆகிய திதிகளை விடுத்து மற்ற திதிகளில் முடி வெட்டிக் கொள்ளலாம்.

🌟 மேற்கூறிய திதிகள் ஞாயிறு அல்லது வியாழன் கிழமையாக இருக்கும் பட்சத்தில் முடி வெட்டிக் கொள்ளலாம்.

7. அமாவாசை அன்று நகைகள் வாங்கலாமா?

🌟 அமாவாசையை விடுத்து மற்ற சுப திதிகளில் நகைகள் வாங்கலாம்.

8. லக்னத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன்?

🌟 சூரியன் பலமாக அமையப்பெற்றால் கௌரவமான பதவி கிடைக்கும்.

🌟 ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

🌟 கல்வியில் மேன்மை நிலை அமையும்.

🌟 பெரியோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

🌟 சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள்.


Share this valuable content with your friends