No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சாய்பாபா சிலையை கனவில் கண்டால் என்ன பலன்?

Jun 25, 2018   Suganya   10786    கனவு பலன்கள் 

1. வீடு தீப்பற்றி கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 வீடு தீப்பற்றி கொள்வது போல் கனவு கண்டால் இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலை அமையும்.

2. சாய்பாபா சிலையை கனவில் கண்டால் என்ன பலன்?

🌟 சாய்பாபா சிலையை கனவில் கண்டால் பெரியோர்களின் ஆதரவுகள் கிடைக்கும்.

3. என் கனவில் மனிதன் அல்லது மிருகம் துரத்துவது போல் வந்தது. நான் ஓடுகிறேன் அல்லது பறந்து செல்கிறேன். நான் எவ்வளவு வேகமாக ஓடினாலும் அவை என்னை நெருங்குகிறது. ஆனால் நான் பிடிபடவில்லை. இது நல்லதா? கெட்டதா?

🌟 இந்த மாதிரி கனவு காண்பது மனதில் நினைத்த செயலை முடிக்க பலவிதமான இன்னல்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.

4. நாவல்பழத்தை எடுப்பது போலவும், யாரோ ஒருவர் இது இன்னொருவருக்கு பிடிக்கும் என்று சொல்வது போலவும் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு காண்பது பிறரின் முன்னேற்றத்திற்கான உதவிகளை செய்வீர்கள் என்பதைக் குறிக்கிறது.

5. மாதுளைப்பழம் கனவில் வந்தால் என்ன பலன்?

🌟 மாதுளைப்பழம் கனவில் வந்தால் மகிழ்ச்சியான செய்திகள் உண்டாகும்.

6. என்னையும், என் கணவரையும் கோவிலில் நிறைய பேர் கத்தியை வைத்துக்கொண்டு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் வீண் செலவுகளால் பொருளாதார நெருக்கடி உண்டாகும்.

7. தாயின் கனவில் மகனை சில பேர் அரிவாளால் வெட்டி விட்டு சென்றது போலவும், மகன் பலத்த காயம் ஏற்பட்டு கட்டுப்போட்டு இருப்பது போலவும் கண்டால் என்ன பலன்?

🌟 இவ்வகையான கனவு அனுபவம் இல்லாத புதிய துறையில் ஈடுபட போவதைக் குறிக்கின்றது.

8. எங்கள் வீட்டில் கருப்பு உருவங்கள் நடமாடுவது போலவும், எங்களை பயமுறுத்துவது போலவும் அதிகாலை ஐந்தரை மணிக்கு கனவு கண்டேன். இது நல்லதா? கெட்டதா?

🌟 இந்த மாதிரி கனவு கண்டால் நெருங்கிய உறவினர்களிடம் இருந்து சுபச் செய்திகள் வரும்.


Share this valuable content with your friends