No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




கிருத்திகை நட்சத்திர விரத பலன்கள்!!

Oct 25, 2018   Ananthi   713    ஆன்மிகம் 

🌟 ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

🌟 வேலனை வணங்குவதே நமது முதல் வேலை என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவர் குமரன்.

🌟 முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும். ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம் என்னும் ஆறு பகைவர்களை முருகன் அழித்தார்.

🌟 முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

🌟 கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரத்தை தினந்தோறும் அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

🌟 முருகப்பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை மாதம், திங்கள், செவ்வாய், ஆகியவை உகந்தவை.

🌟 முருகன் கங்கையால் தாங்கப்பட்டதால் காங்கேயன் என்றும், சரவணப் பொய்கையில் உதித்ததால் சரவண பவன் என்றும், கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் கார்த்திகேயன் என்றும், சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டார்.

🌟 அக்னி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவார். மலைகளில் குடிகொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றொரு பெயர் உள்ளது. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

🌟 முருகனின் துதியை போற்றுவோம். துன்பம் இல்லாமல் நன்மையை பெறுவோம்.

கிருத்திகை நட்சத்திர விரத பலன்கள் :

🌟 கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.

🌟 மேலும், இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தன்று காலையில் மீண்டும் நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி உணவுண்ண வேண்டும்.

🌟 ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் மற்றும் அர்ச்சனைகளிலும் பங்கு கொண்டு முருகனின் அருளை பெறலாம்.


Share this valuable content with your friends