No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - துறவியை சந்தித்த சீவகன்..!!

Apr 20, 2023   Ramya   126    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... துறவியை சந்தித்த சீவகன்..!!

🌟 அருகர் கோவிலுக்கு சென்று, மனம் உருகி வழிபட்ட பின்பு வெளியே வந்து ஓரிடத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.

🌟 அப்பொழுது அந்த வழியாக சமண துறவிகள் பலர் சென்று கொண்டிருந்தார்கள். அதில் ஒரு துறவி மட்டும் சீவகனை அடையாளம் கண்டு கொண்டு. என்ன அரசே! ஆட்சி, அதிகாரம் அனைத்தும் இன்பத்தையும், சுகத்தையும் அளிக்கிறதா? என்பது போல வினவினார்.

🌟 இந்த கேள்வியை கேட்ட சீவகனுக்கு அந்த இடத்தில் மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் தன்னுடைய மனதில் இருந்த குழப்பத்தை நன்கு அறிந்தவர் போல், இவர் என்னிடத்தில் உரையாடுகின்றாரே? என எண்ணி கொண்டு இருந்தான் சீவகன்.

🌟 பின் சீவகனை பார்த்து சிரித்து கொண்டே, பல அதிசயங்கள் நிறைந்த பிறப்பு உங்களுடையது. உயிரினங்களில் உயர்ந்த பிறப்பு மனித பிறப்பு தான். அந்த பிறவியிலும் எந்தவிதமான குறைபாடுகளும் இல்லாமல் பிறப்பது என்பது மிகவும் அரிதாகும். அவற்றிலும் அரிது நன்மைகள் பல செய்யும் அரச குடும்பத்தில் பிறப்பதாகும்.

🌟 அப்படி பிறந்திருக்கக்கூடிய உங்களின் மனதில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை தீர்ப்பதற்கான வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கிறது என்றால் நாங்கள் பெரும் பாக்கியசாலிகள் அல்லவா! என்றார் அந்த துறவி.


🌟 உடனே சீவகன், அப்படியானால் இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்? ஏன் என் மனம் இவ்வளவு குழப்பங்களுக்கு ஆட்பட்டு இருக்கிறது? என்று கேட்டான்.

🌟 அரசே நாம் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய இந்த வாழ்க்கை நிலையானதும் அல்ல. நிரந்தரமானதும் அல்ல. ஆனால் ஒன்று மட்டும் நிரந்தரமாகும். அது தான் இறப்பு.

🌟 ஒருவேளை நாம் இப்பொழுது இவ்விடத்திலேயே இறக்கலாம் அல்லது இளமை நிரம்பி இருக்கக்கூடிய வாலிப பருவத்தில் போர்களிலும் இறக்கலாம் அல்லது நயவஞ்சகத்தினாலும், சூழ்ச்சிகளாலும் நாம் இறக்கலாம் அல்லது வயதாகியும் இறக்கலாம். ஆகையால் எப்பொழுது வேண்டுமானாலும் இறப்பு என்பது ஏற்படும் என்றார் அந்த துறவி.

🌟 அப்படியானால் இறப்பிற்கு பின்பு என்ன தான் நடக்கும்? என்பதை பற்றி கூறுங்கள் என்று கேட்டான் சீவகன்.


Share this valuable content with your friends