No Image
 Fri, Jul 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி... 30 ஆண்டுகளுக்கு பிறகு சீவகனை சந்தித்த நந்தட்டன்..!

Apr 19, 2023   Ramya   114    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... 30 ஆண்டுகளுக்கு பிறகு சீவகனை சந்தித்த நந்தட்டன்..!!

🌟 30 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென்று ஒருநாள் அரசரான சீவகன், நந்தட்டனை பார்க்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

🌟 சற்றும் எதிர்பாராத இந்த திடீர் அழைப்பு எதற்கு? என்று தெரியாத நந்தட்டன் மிகுந்த அவசரமாகவும், பதட்டமாகவும் மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளுடன் அரசரை பார்க்க அரச சபைக்கு வந்தான்.

🌟 அரச சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த சீவகன், நந்தட்டன் வந்ததை பார்த்ததும் அமருங்கள் இளவரசே! என்று கூறி, அவன் அமர்வதற்கான இருக்கையை காட்டினான்.

🌟 ஏற்கனவே பதட்டத்தில் இருந்த நந்தட்டனுக்கு இன்னும் பதட்டமானது அதிகரித்தது. ஏனெனில் முப்பது ஆண்டுகால ஆட்சியில் அரசர் ஒரு முறை கூட தன்னை இளவரசர் என அழைத்தது இல்லையே! அப்படி இருக்க இன்று என்ன நிகழ்ந்தது? என்று எண்ணினான்.

🌟 பின் அரசரை பார்த்து, திடீரென்று அரச முறைப்படி என்னை அழைத்திருக்கின்றீர்கள். ஏதாவது இன்னல்கள் ஏற்பட்டு விட்டதா? என்று கேட்டான்.

🌟 உடனே சீவகன், அரச முறைப்படி அழைத்தால் ஏதேனும் இன்னல்கள் தான் ஏற்பட்டிருக்க வேண்டுமா? என்று கேட்டான்.

🌟 அதற்கு நந்தட்டன், அப்படியெல்லாம் எதுவும் இல்லை அரசே! என்றான்.

🌟 இன்னும் எதற்காக என்னை அரசர் என்று அழைத்து கொண்டிருக்கின்றாய்? நான் எப்பொழுதும் உன்னுடைய அண்ணன் சீவகன் தான். உன்னிடம் பேசி பல நாட்களாயிற்று. அதனால் தான் உன்னை வர சொல்லி அனுப்பினேன். ஆமாம்! நாட்டு மக்கள் எப்படி இருக்கின்றார்கள்? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கின்றதா? நிதி வருவாய் மற்றும் விவசாய பணிகளெல்லாம் எப்படி நடந்து கொண்டிருக்கின்றது? என்று வினவினான் சீவகன்.


🌟 உங்களுடைய ஆட்சியில் நாட்டு மக்கள் எப்படி இருக்கின்றார்கள்? என்பதை ஒற்றர்கள் மற்றும் தூதுவர்களின் மூலம் நீங்கள் அறிந்து கொண்டு தான் இருக்கின்றீர்கள் என்பதை நான் அறிவேன்!

🌟 அதுமட்டுமல்லாமல் துறை ரீதியாக ஒவ்வொரு அமைச்சர்கள் இருந்தாலும், அவர்களை விட ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளது? மேலும் எவ்வளவு இன்னல்கள் இருக்கின்றது? என்பதை தெளிவாக அறிந்தவர் நீங்கள் தான். இருந்தாலும் நீங்கள் கேட்பதினால் நான் கூறுகிறேன். உங்கள் ஆட்சியில் மக்கள் எந்தவித கவலையும் இல்லாமல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள் என்று கூறினான் நந்தட்டன்.


Share this valuable content with your friends