No Image
 Mon, Jul 08, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பூர்வ ஜென்ம புண்ணியத்தை தரும் சித்திரை அமாவாசை வழிபாடு..!!

Apr 19, 2023   Ramya   173    ஆன்மிகம் 


சூரிய பகவானின் அருளை பெற்றுத்தரும் சித்திரை அமாவாசை..!!


🌑அமாவாசை என்பது வழிபாடுகளில் மிக முக்கியமான நாள். அமாவாசை, முன்னோர்களுக்கான நாள் என்றும், முன்னோர்களை வழிபடுவதற்கு உரிய நாள் என்றும் சொல்லப்படுகிறது.

🌑அமாவாசை நாளில் முன்னோர்களை வணங்கி, அவர்களுக்கு தர்ப்பணம் முதலான சடங்குகளை செய்ய வேண்டும். இந்த வருடம் (19.04.2023) புதன்கிழமை சித்திரை அமாவாசை நாளாகும்.

சூரிய வழிபாடு :

🌑 சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் காலமே சித்திரை. உடல் ஆரோக்கியம், கம்பீரம், அந்தஸ்து போன்றவற்றை தரும் சூரியபகவான் சித்திரை மாதம் முழுவதும் மேஷ ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த நாளில் விரதமிருந்து முன்னோர்களையும், சூரிய பகவானையும் வணங்கினால் நற்பலன்களை பெற்றிடலாம்.

முன்னோர் வழிபாடு :

🌑 சித்திரை மாத அமாவாசை தினத்தில் பித்ரு கடமை செய்வது மிகுந்த நற்பலன்களை தரும்.

🌑 அமாவாசை தர்ப்பணம் செய்பவர்கள் வீட்டிலேயே தர்ப்பணம் செய்யுங்கள்.

🌑 தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள், வீட்டிலேயே காக்கைக்கு எள் சாதம் வைத்து வழிபடுங்கள்.

🌑 அமாவாசை தினத்தில் முன்னோர்களை வழிபட்டு அன்னதானம் வழங்கினால் நன்மைகள் உண்டாகும்.

பலன்கள் :

🍀 பித்ரு சாபம் மற்றும் குலதெய்வ சாபங்களால் உங்களுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.

🍀 திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் நீடித்த தடை, தாமதங்கள் நீங்கும்.

🍀 உணவிற்கு கஷ்டப்படும் நிலை என்றென்றும் ஏற்படாமல் தடுக்கும். செல்வ நிலை உயரும்.


Share this valuable content with your friends


Tags

வீட்டின் முன்பகுதியில் வேப்பமரம் வளர்க்கலாமா? aagaasa karudan kilangu லக்னத்தை அடுத்து 2-ல் செவ்வாய் வளர்பிறை கோழி பட்சியில் பிறந்தவர்களா? இதோ உங்களுக்காக...!! 18.10.2018_PDF 2ல் சுக்கிரன் பராசரருக்கு சிவபெருமான் காட்சி அளித்தல் !! Wednesday rasipalan - 04.07.2018 உயிரோடு இருப்பவர்கள் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்? குழந்தைக்கு முதல் மொட்டை 15வது மாதத்தில் அடிக்கலாமா? கணவன் மார்கழி மாதம் கிணறு வெட்டலாமா? 3ம் இடமான கடக லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்? பிறந்த நட்சத்திரம் கிளிகள் பறந்து செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? கன்னி ராசியில் புதன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் மார்கழி மாதத்தில் திருமணம் பிங்கலி வெங்கய்யா நாவல் பழத்தை கனவில் கண்டால் என்ன பலன்? சனிக்கிழமை அன்று தங்கம்