No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனுக்கும் இலக்கணைக்கும் திருமணம்..!!

Apr 17, 2023   Ramya   113    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனுக்கும் இலக்கணைக்கும் திருமணம்..!!

🌟 விசையை, கோவிந்தா! சீவகனுக்கு இத்தனை திருமணங்கள் நடைபெற்று இருந்தாலும், நாம் ஒரு திருமணத்தை கூட பார்க்க கொடுத்து வைக்கவில்லை. இலக்கணை மற்றும் சீவகனின் திருமணத்தையாவது என்னுடைய கண்கள் குளிரும்படி நான் கண்டு ரசிக்க வேண்டும் என்று கூறினார்.

🌟 அப்படியே ஆகட்டும் அக்கா! அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் நான் செய்து விடுகிறேன். எனது மருமகன் என்ன சாதாரணமானவரா? ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அரசன்! இரண்டு பெரும் ராஜ்யங்கள் இணையப்போகும் இவ்விழாவில் பிரம்மாண்டத்தை உருவாக்கி, உன் மனம் மகிழும் விதத்தில் நான் இத்திருமணத்தை நடத்தி வைக்கின்றேன் என்று கூறினார் கோவிந்தன்.


🌟 இந்த நற்செய்தியானது ராசமாபுரம் முழுவதும் தெரிவிக்கப்பட்டது. மக்கள் அனைவரும் இந்த திருமணத்தை மிகுந்த மகிழ்ச்சியோடு தன் வீட்டில் நடக்கும் திருமணத்தை போன்று கொண்டாட துவங்கினார்கள்.

🌟 சிறந்த ஜோதிடர்கள் வரவழைக்கப்பட்டு திருமணத்திற்கு உகந்த ஒரு நாளை குறித்து கொண்டார்கள். பின் ராசமாபுர மக்களுக்கும், நட்பு நாடுகளுக்கும் திருமண நாள் தெரிவிக்கப்பட்டது.

🌟 சீவகனுக்கும், இலக்கணைக்கும் திருமணம் நடைபெறும் நாளில் வெவ்வேறு விதமான இசைகளை இசைக்கலைஞர்கள் வெளிப்படுத்த, நாடக கலைஞர்களோ அந்த இசைக்கு ஏற்ப சீவகன் இதுவரை கடந்து வந்த பாதைகளையும், அவன் செய்த வீர தீர செயல்களையும் மக்களுக்கு முன்னே நடித்து காட்டி கொண்டிருந்தார்கள்.

🌟 இவர்கள் இருவரையும் மிஞ்சும் விதமாக மணமேடையை அலங்கரிக்கும் கலைஞர்கள், மணமேடையை அலங்கரித்திருந்தார்கள். அதாவது இதுவரை எங்கும் காணாத அளவில் நேர்த்தியாக அலங்கரித்திருந்தார்கள்.

🌟 திருமணத்திற்கான மணமேடை மிகவும் அழகாக இருக்க, மணமக்களை அலங்கரிப்பதற்காக வந்திருந்த கலைஞர்கள் மணமக்களை இன்னும் அழகாக மாற்றினர்.

🌟 அதாவது இயற்கையாகவே அழகாக இருக்கும் சீவகனை மென்மேலும் அலங்காரம் செய்து அவனை ஒரு தேவனாக மாற்றினார்கள். நறுமணம் மிகுந்த மலர் மாலைகளாலும், விலை உயர்ந்த பொன் நகைகளாலும் அலங்காரம் செய்யப்பட்டு, பார்க்கும் கன்னிகள் அனைவரும் மயங்கும் விதமாக அழகாக இருந்தான் சீவகன்.

🌟 சீவகனுக்கே இவ்வளவு அலங்காரம் செய்ய, இலக்கணையை அலங்காரம் செய்ய வந்தவர்கள் அவளை அலங்கரிப்பதில் தங்களது திறன் முழுவதையும் பயன்படுத்தினார்கள். அதனுடைய வெளிப்பாடு மணவறையில் புலப்பட்டது.

🌟 அங்கிருந்த மக்கள் அனைவருக்கும் மணமக்களாக வந்திருப்பவர்கள் யார்? என்று தெரியாத அளவில் இருந்தார்கள். அதாவது, ஏதோ தேவலோகத்தில் இருந்து வந்திருக்கின்றார்களோ என்று என்னும் அளவிலும், காண்போரின் மனதை கவரும் விதத்திலும் இருந்தார்கள்.


🌟 திருமணத்திற்காக வளர்க்கப்பட்ட வேள்வியின் முன்னிலையில் அனைவரும் கூடியிருக்க, சீவகனும் அனைவருடைய ஆசீர்வாதங்களுடன் இலக்கணையை தனது துணைவியாக ஏற்று கொண்டான்.


Share this valuable content with your friends


Tags

ஆண்கள் யானை முடி மோதிரத்தை எந்த விரலில் அணியலாம்? ஒரே ராசி அகஸ் என்றால் என்ன? ஆடி மாதம் காது குத்து வைக்கலாமா? கோபால கிருஷ்ண கோகலே சந்திரன் நீசமாக இருந்தால் என்ன பலன்? cilinder 03.02.2019 Raipsalan in PDF Format !! yooni poruththam கடினமான வழிகளில் மிதிவண்டியில் செல்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? லக்னத்திற்கு 9ல் குருவும் சர்க்கரை விற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? திருடுப்போன பொருள் மீண்டும் கிடைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன் 06.11.2018 மனைவி கர்ப்பமாக இருக்கும்போது வீடு கட்ட தொடங்கலாமா? அடிக்கடி தேர்வு எழுதுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? valayalai kanavil kandal enna palan மைக்கல் ஜாக்சன் ரதி தேவி 06.09.2019 Rasipalan in pdf format!!