No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனின் நண்பர்களுக்கு அமைச்சர் பதவி..!!

Apr 17, 2023   Ramya   109    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனின் நண்பர்களுக்கு அமைச்சர் பதவி..!!

🌟 திருமணம் முடிந்த சில நாட்களுக்கு பிறகு கந்துக்கடனுக்கும், சீவகனுக்கும் இடையே ஒரு வாதம் தோன்றியது. அப்பொழுது கந்துக்கடன் சீவகனை பார்த்து, சீவகா! இப்பொழுது நீ செய்கின்ற செயலின் நன்மை, தீமை என்னவென்று அறிந்து தான் செய்கின்றாயா? என்று கேட்டார்.

🌟 ஆம் தந்தையே! இப்பொழுது நான் செய்கின்ற செயலின் நன்மை, தீமையை ஆலோசித்து தான் இந்த முடிவை எடுத்திருக்கின்றேன். நான் உங்களின் வம்சத்தில் பிறக்காமல் வேறு வம்சத்தில் மாறி பிறந்திருக்கலாம். ஆனால் இன்று நான் அரசனாக இருக்கின்றேன் என்றால் அதற்கு முழு காரணம் நீங்கள் தான். இப்பொழுது நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் எந்த விதமான கவலையும், துன்பமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருக்கின்றார்கள் என்றால் அதற்கு முழு காரணமும் உங்களின் வளர்ப்பு மட்டுமே என்றான் சீவகன்.

🌟 என்னுடைய வளர்ப்பு சரியாக இருந்தாலும், அதற்காக இவ்வளவு பெரிய பொறுப்பை என்னிடம் கொடுப்பதா? என்று கந்துக்கடன் கேட்க,

🌟 இதில் எந்தவொரு தவறும் இல்லை தந்தையே! நமது நாட்டின் ஆட்சி பொறுப்பை ஏற்று வழிநடத்தக்கூடிய திறமையும், தகுதியும் உங்களிடத்தில் இருக்கின்றது. திறமை இருப்பவர்களை எப்பொழுதும் நான் விடுவதில்லை. நீங்கள் என்னை பற்றி அறிந்திடாததா என்றான்.

🌟 உன்னை பற்றி உன்னை விட நான் நன்கு அறிவேன் சீவகா! ஆனால் நான் அரச வம்சத்தை சார்ந்தவன் அல்ல. நான் ஒரு சாதாரண வணிகன். வணிகன் அரசர் ஆகலாமா?

🌟 உடனே சீவகன், அதனால் என்ன தந்தையே! ஒரு வணிகனுக்கு வாடிக்கையாளர்களை கவருவதும், தன்னை நம்பியவர்களை காப்பாற்றுவதும் கைதேர்ந்தவையே. அப்படி இருக்கின்ற பொழுது நமது நாட்டை வழி நடத்த தேவையான ஆலோசனைகளையும், வழிமுறைகளையும் கூறுவது கூட வணிகர்களின் ஒருவித கடமை தானே. நாளைய யுகம் வணிகர்கள் கையிலும் இருக்கலாம் அல்லவா! என்று தன்னுடைய கூற்றை கூறினான்.

🌟 எவ்வளவு எடுத்து கூறியும் சீவகன் தன்னுடைய முடிவிலிருந்து பின் வாங்காமல் விடாப்பிடியாகவே இருந்தான். வேறுவழி இல்லாமல் கந்துக்கடனும் பொறுப்பை ஏற்க வேண்டிய சூழ்நிலையும் உருவானது.

🌟 அதன் பின் சீவகன், தன்னை வளர்த்து ஆளாக்கிய வளர்ப்பு தாயான சுநந்தையை ராஜ மாதாவுக்கு இணையாக பெருந்தேவி என்றே அழைத்தான். நந்தட்டனை இளவரசன் என்று மக்கள் முன்னிலையில் அழைத்தும், முரசு அறிவித்தும் அதை ஆணையாக மாற்றினான்.

🌟 அதுமட்டுமல்லாமல் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தனக்கு ஆதரவாக இருந்த நண்பர்களையும் அவன் மறக்கவில்லை. ஆகையால் தான் தனக்கு உதவிய அனைத்து நண்பர்களுக்கும் அவரவர்கள் திறமைகளின் அடிப்படையில் அமைச்சர் பதவிகளை கொடுத்தான். மந்திர, தந்திரங்களை தனக்கு கற்று கொடுத்த சுதஞ்சணனுக்கு பொன்னாலான ஒரு கோவிலை உருவாக்கி கொடுத்தான்.


🌟 மேலும் மக்களிடத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு குறைகளையும் கேட்டறிந்து, எந்த விதத்திலும் தீங்கு நேரிடாத வகையில் அனைத்தையும் சரியான முறையில் செய்து கொடுத்தான். எவரிடத்திலும் பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சமமாக கருதியே சீவகனின் ஆட்சி நடைபெற்றது.

🌟 சீவகன் எடுத்த இந்த முயற்சியினால் மக்களிடத்தில் இருந்து வந்த பேராசை முழுவதுமாக அழிந்து நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்து வந்தார்கள். நல்லவர்கள் வாழும் பூமியில் கருமேகமும் தவறாது தனது பணியை செய்யும் என்பது போல பருவம் தவறாது மழையும் பொழிய துவங்கியது. இதனால் விவசாயம் தழைக்க துவங்கியதும், கால்நடைகளால் மக்களின் வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது.

🌟 இதையெல்லாம் கண்ட கந்துக்கடன், சீவகனை பார்க்கும் பொழுதெல்லாம், சுடுகாட்டில் நான் உன்னை காண என்ன தவம் செய்தேனோ என்று எனக்கு தெரியவில்லையே! என எண்ணி அகம் மகிழ்ந்தார்.


Share this valuable content with your friends