No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - இராசமாபுரம் வந்தடைந்த சீவகனின் மனைவிகள்..!!

Apr 17, 2023   Ramya   315    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... இராசமாபுரம் வந்தடைந்த சீவகனின் மனைவிகள்..!!

🌟 சுநந்தையும் சீவகன் வளர்ந்த விதம், அவனுடைய தனிப்பட்ட திறமைகள் என அனைத்தையும் விசையையிடம் கூறினார். அதை கேட்ட விசையை மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

🌟 அதே சமயம் இங்கு சீவகன் குணமாலையை பார்த்து, நீ வந்த நேரம் எனக்கு இருந்த கவலைகளும், இன்னல்களும் நொடி பொழுதில் தீர்ந்து விட்டது பார்த்தாயா! உன்னை நான் கரம்பிடித்த பொழுது சாதாரண வணிகனின் மகனாக இருந்தேன். ஆனால் இப்பொழுது ஒரு சக்கரவர்த்தியாக உன் முன்னால் நின்று கொண்டிருக்கின்றேன். இப்பொழுது புரிகிறதா உனது ராசி எப்படி? என்று கேட்டான்.

🌟 அதற்கு குணமாலை, நீங்கள் இன்று சக்கரவர்த்தியாக இருந்தாலும் அதற்காக நீங்கள் அனுபவித்த வேதனைகள் என்னால் வந்தது தானே என்று கூறினாள்.

🌟 உழைப்பில்லாமல் உயர்வு இல்லை என்பதை புரிந்து கொள். அன்று நான் வனவாசம் சென்றதால் தான் இன்று சகலமும் நிறைந்தவனாக உன் முன்னால் நின்று கொண்டிருக்கின்றேன். அன்று வேண்டாம் என்று எண்ணியிருந்தால் இன்று மண்ணின் மேல் இருந்திருப்பேனா என்று கூட தெரியாது என கூறி குணமாலையை சமாதானம் செய்து கொண்டிருந்தான் சீவகன்.

🌟 ஆனால் சீவகனுடைய மற்ற நண்பர்கள் அனைவரும் ஒவ்வொரு திசைகளிலிருந்தும் அரண்மனையை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தார்கள்.

🌟 அதாவது உலோக பாலன் பல்லவ நாட்டிற்கு சென்று தன்னுடைய தங்கையான பதுமையை ராசமாபுரத்திற்கு அழைத்து வந்தான். நந்தட்டனும், குணமாலையும் அவளுடைய தோழியான சுரமஞ்சரியை அழைத்து வந்தார்கள்.


🌟 புத்திசேனன் தக்க நாட்டிற்கு சென்று கேமசரியை அழைத்து கொண்டு வந்தான். பதுமுகன் ராசமாபுரத்தின் எல்லையில் இருந்த விமலையை அழைத்துக் கொண்டு வந்தான். விசயன் மத்திய தேசத்திற்கு சென்று தன்னுடைய சகோதரியான கனகமாலையை அழைத்து கொண்டு ராசமாபுரத்திற்கு வந்தான். இவ்வாறு சீவகனின் மனைவியர்களை அழைத்து வர அவர்களுடன் காந்தருவதத்தையும் இணைந்து கொண்டாள்.

🌟 பின் சீவகனுக்கும், அவனுடைய மனைவிகளுக்கும் ஆரத்தி எடுக்க முற்பட்டார் சுநந்தை. இதை பார்த்த விசையை மகிழ்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்று கொண்டிருந்தார். மேலும் இந்த காட்சியை பார்க்க தன் கணவன் இல்லையே! என்று அவ்விடத்தில் ஏங்கினார்.

🌟 அப்பொழுது கோவிந்தனின் குரல் கேட்க திரும்பி பார்த்தார். அங்கு கோவிந்தன் தனது மருமகனை பார்த்து கொண்டே, இந்த இடத்தில் ஒன்று மட்டும் குறைகிறது என்று கூறினார்.

🌟 உடனே விசையை, என்ன குறைகிறது? என்று கேட்டார்.

🌟 அதற்கு கோவிந்தன், போர் நடைபெறுவதற்கு முன் போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் யார் பன்றியை கொள்கின்றார்களோ, அவர்கள் தான் என் மகளை திருமணம் செய்து கொள்ள முடியும் என்று முரசு அறிவித்திருந்தேன். அந்த போட்டியில் வெற்றி பெற்றது எனது மருமகனான சீவகன் தான். அவரும் இப்பொழுது பிரச்சனைகள் அனைத்தையும் முடித்துவிட்டு அரச பதவியும் ஏற்று கொண்டார். ஆனால் யாருக்கும் இதுவரை என்னுடைய மகள் இலக்கணையை பற்றி தோன்றவில்லையே! என்று சோகமாக கூறினார்.

🌟 இதை கேட்டதும் விசையைக்கு தன்னுடைய கணவன் இறப்பதற்கு முன் தோன்றிய கனவு நினைவிற்கு வந்தது. அதாவது எட்டு மணி மாலைகளுடன் வளர்ந்த அசோக மரம் நினைவிற்கு வந்தது. அப்பொழுது தான் அந்த அசோக மரம் சீவகன் என்றும், அதிலிருந்த எட்டு மணி மாலைகள் அவனுடைய மனைவிகள் என்றும் அவருக்கு புரிந்தது.


Share this valuable content with your friends