No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - மகிழ்ச்சியில் ஆழ்ந்த ராசமாபுர மக்கள்..!!

Apr 13, 2023   Ramya   112    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... மகிழ்ச்சியில் ஆழ்ந்த ராசமாபுர மக்கள்..!!

🌟 நம் நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் இந்நாட்டு மன்னர்களே! மேலும் ஒவ்வொருவருக்கும் நம் நாட்டினை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமும், அடுத்த தலைமுறையினர்களுக்கு நாம் சில வளங்களை சேமித்து வைக்க வேண்டும் என்ற கடமையும் இருக்கின்றது.

🌟 ஆகவே எனக்கும், இங்கு நிற்கின்ற அமைச்சர்களுக்கும் மட்டும் தான் அரசை காக்க வேண்டிய கடமை இருக்கின்றது என்று எண்ணாமல், மக்களாகிய நீங்களும் அந்த கடமையில் இருக்கின்றீர்கள் என்று எண்ணுங்கள் என தன்னுடைய கூற்றை கூறினான்.

🌟 உடனே மக்களிடத்தில் கரகோஷமும், ஆரவாரமும் அதிகரித்தது.

🌟 சீவகனின் கூற்றை கேட்ட, பதவி பெற்றவர்கள் அனைவரும் சீவகனுடைய முடிவுக்கும், எண்ணங்களுக்கும் தலைவணங்கி உங்களின் விருப்பப்படியே அனைவரும் செயல்படுவோம் என்று வாக்குறுதி கொடுத்தார்கள்.

🌟 நாட்டிற்கு புதிய மன்னன் பொறுப்பேற்றவுடன் மக்கள் அனைவரும் அன்றைய பொழுதை மகிழ்ச்சியுடன் கழித்தார்கள். அதற்கு அடுத்த நாள் முரசொலியின் ஓசை அனைவரின் செவிகளுக்கும் எட்டியது.

🌟 உடனே ஊர் மக்கள் அனைவரும் வெளியே சென்று பார்க்க முரசறிவிப்பவன், அரசரான சீவகனின் ஆணையின் பேரில், ஏமாங்கத நாட்டு மக்கள் அனைவருக்கும் அமைச்சராகிய பதுமுகன் அறிவிக்கும் அரச கட்டளைகளானது, முந்தைய அரசர்களால் சுரண்டப்பட்ட கோவில் நிலங்கள் மற்றும் ஆபரணங்கள் அனைத்தும் கோவில்களுக்கே மீண்டும் உரிமையாக்கப்பட போகின்றன. இதற்கு எதிராகவோ அல்லது அரச உத்தரவை மீறி செயல்பட்டாலோ தகுந்த தண்டனைகள் வழங்கப்படும்.

🌟 எந்தவித குற்றங்களும் செய்யாமல் அரசரை எதிர்த்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் குற்றவாளிகள் அனைவருக்கும் மறு வாய்ப்புகள் கொடுக்கப்படும். தவறுகள் மீண்டும் செய்யப்பட்டால் கடுமையான தண்டனைகள் வழங்கப்படும். இனிவரும் காலங்களில் சிறைச்சாலைகள் ஒன்று இல்லாமல் இருப்பதற்கான வாய்ப்புகளை நாம் உருவாக்க வேண்டும்.


🌟 மேலும் கண் பார்வையற்றவர்கள், உடல் ஊனமுற்றவர்கள், போரினால் கணவரை இழந்த மனைவியர்களுக்கு அவரவர்களின் திறமையின் அடிப்படையில் பொறுப்புகளும், அரச மானியங்களும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.

🌟 இன்று முதல் பதினாறு ஆண்டுகளுக்கு நாட்டு மக்கள் யாரும் அரசுக்கு எந்தவிதமான வரிகளையும் செலுத்த வேண்டாம். அதற்கு பதிலாக வேலையாட்களுக்கு பாதுகாப்பான இல்லறங்களையும், அடிப்படை தேவைகளையும் வழங்க வேண்டும். மேலும் இயற்கை வளத்தை மேம்படுத்துவதற்கான செயல்களையும் உருவாக்கி கொள்ள வேண்டும் என்று கூறினான்.

🌟 இதை கேட்ட ராசமாபுர மக்கள் அனைவரும் நாம் நல்ல ஆட்சியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இனி வர போகின்ற தலைமுறைகளும் நல்லாட்சியில் பிறப்பார்கள் என்பதை புரிந்து கொண்டார்கள்.

🌟 சிறிது நாட்களுக்கு பிறகு விசையை சீவகனின் சிறு வயது கதைகளை கேட்க விருப்பம் கொண்டு, அவனின் மற்றொரு தாயான சுநந்தையிடம் வினவினார்.


Share this valuable content with your friends