No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - ராசமாபுரத்தில் சிறப்பாக நடைபெற்ற முடிசூட்டு விழா..!

Apr 13, 2023   Ramya   134    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... ராசமாபுரத்தில் சிறப்பாக நடைபெற்ற முடிசூட்டு விழா..!

🌟 சீவகனின் முடிசூட்டும் விழாவானது ஏமாங்கத நாட்டிற்கு அருகில் உள்ள அனைத்து தேசங்களுக்கும் முறையான விதத்தில் சொல்லப்பட்டது. முடிசூட்டும் நாளில், ஊர் முழுவதும் பந்தல்கள் அமைக்கப்பட்டு, தரையில் அழகிய கோலங்கள் யாவும் போடப்பட்டிருந்தன. அதுமட்டுமல்லாமல் புதுமையான விதத்திலும் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. புதிய மன்னனை பார்ப்பதற்காக மத்திய தேசம், தக்க தேசம், பல்லவ தேசம், விதேய தேசம், வித்தியாதர தேசம் என்று பல நாடுகளில் இருந்தும் மக்கள் வந்து கொண்டிருந்தார்கள்.

🌟 மேலும் சீவகனுக்கு முடிசூட்டும் இடத்தில் நடன கலைஞர்களும், இசை கலைஞர்களும் இணைந்து ஒரு புதிய சங்கமத்தையே உருவாக்கி இருந்தார்கள்.

🌟 ஆனால் சீவகனுடைய பரிவாரங்கள் அனைத்தும் அருகன் கோவிலில் இருந்தன. அரச கிரீடம் அருகன் கோவிலில் வைத்து பூஜிக்கப்பட சீவகனும், விசையையும் மனம் உருகி அருகனை வழிபட்டார்கள். பின், ஊர் மக்கள் அனைவரும் காணும் விதத்தில் கிரீடம் எடுத்து செல்லப்பட்டன.

🌟 திடீரென்று வேட்டு சத்தங்களுடன் வெடிகள் வெடிக்கப்பட்டது. அப்பொழுது அந்த வெண் புகையை பிளந்து கொண்டு வானத்தில் இருந்து அழகிய தேர் ஒன்று இறங்கியது.

🌟 பலவிதமான அலங்காரங்களுடனும், வித்தியாசமான தோற்றத்துடனும் இருந்த அந்த தேரில் இருந்து சுதஞ்சணனும், அவருடைய மனைவியர்களும் இறங்கினார்கள்.

🌟 இறங்கியவர்கள் புன்னகைத்து கொண்டே சீவகனின் அருகில் வர, அதே சமயம் பாதுகாப்பு வீரர்கள் அவர்களை தடுக்க முயற்சித்தார்கள். இதை கண்ட சீவகன் அவர்களுக்கு இடையூறு செய்யாமல் உள்ளே அனுப்புங்கள்! என்று கூற அவர்களும் சீவகனுடன் வந்து இணைந்து கொண்டார்கள்.


🌟 பின் சீவகனும், அவனுடைய நண்பர்களும் மற்ற நாட்டின் மன்னர்களும், அந்தணர்களும் கூடியிருந்த இடத்திற்கு சென்றதும் முரசுகள் கொட்ட, பூ மழைகள் யாவும் பொழிய சீவகனுக்கு கோவிந்தன் முடிசூட்டினார்.

🌟 சீவகன் முடிசூட்டிய பின், திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் ஒவ்வொரு துறைகளுக்கும் ஒருவரை கோவிந்தனும், சீவகனும் முடிவு செய்தார்கள். அதன்படியே ஒவ்வொரு துறை அமைச்சர்களும் அப்பொழுதே நியமனம் செய்யப்பட்டார்கள். இதை கண்ட சீவகனின் நண்பர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

🌟 பின் சீவகன், இங்கு இருக்கக்கூடிய ஒவ்வொரு அமைச்சர்களும் எனக்கு உதவினார்கள் என்ற அடிப்படையில் நான் அவர்களை நியமனம் செய்யவில்லை. அவர்கள் அந்த துறைக்கு தகுதியானவர்கள் என ஏற்கனவே என்னிடத்தில் பலமுறை நிரூபித்திருக்கின்றார்கள்.

🌟 அதுமட்டுமல்லாமல் பல புதிய துறைகளும், அதற்கான அமைச்சர்களும் இனிவரும் நாட்களில் நியமிக்கப்பட இருக்கின்றார்கள். திறமையும், மக்கள் சேவையை பிரதானமாக கருதும் ஒவ்வொருவரும் இங்கு அமைச்சராக இருக்கக்கூடியவர்கள் தான்.


Share this valuable content with your friends


Tags

weekly rasipalan (13.04.2020 - 19.04.2020) in pdf format பிறந்த நட்சத்திரம் புரட்டாசி மாதத்தில் குழந்தை பிறக்கலாமா நட்சத்திரம் உடைய ஆண் மகர ராசியில் ராகு இருந்தால் கிடைக்கும் பலன்கள் !! கணவன் இறப்பது போல் கனவு கண்டால் மனப்பக்குவம் அதிகரிக்கும் today horoscope in pdf format - 24.08.2018 தினசரி ராசிபலன்கள் (20.05.2020) அலெக்சாண்டர் பிளெமிங் ஒருவர் பாத்திரத்தில் பால் தருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? gold தசமியில் செய்ய வேண்டிய செயல்கள் என்ன? கடன் வறுமைக்கு இடுதான் காரணமா? monday rasipalan பங்குனி மாதம் சங்கடஹர சதுர்த்தி அன்று புதுவீடு மேற்கூரை மஹா சனிப்பிரதோஷ பலன்கள்!! வார ராசிபலன்கள் (28.10.2019 - 03.11.2019) PDF வடிவில் !! எல்லிஸ் ஆர்.டங்கன் வார ராசிபலன் (25.05.2020 - 31.05.2020) PDF வடிவில் !