No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - வெற்றியுடன் அரண்மனைக்கு திரும்பிய சீவகன்..!!

Apr 13, 2023   Ramya   121    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... வெற்றியுடன் அரண்மனைக்கு திரும்பிய சீவகன்..!!

🌟 பட்டத்து அரசி இறந்ததை கண்ட கட்டியங்காரனின் மற்ற மனைவியர்கள் அரசியை சூழ்ந்து அழுது கொண்டே இருந்தார்கள்.

🌟 அப்பொழுது சீவகன் அவர்கள் அனைவரையும் பார்த்து, நீங்கள் யாரும் எங்களை பார்த்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை. நீங்கள் இங்கேயே இருக்க விரும்பினீர்கள் என்றாலும் இருக்கலாம் அல்லது ஒருவேளை வேறு இடத்திற்கு செல்ல விரும்பினாலும் தாராளமாக செல்லலாம் என்றான்.

🌟 சீவகனுடைய பெருந்தன்மையான குணத்தை பார்த்த அந்தப்புரத்தில் இருந்த வீரர்களும், சீவகனின் படை வீரர்களும் வியந்து நின்றனர். பின் சீவகனும், அவனுடைய படைகளும் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு அரண்மனையை நோக்கி சென்றனர்.

🌟 இங்கு சீவகனுக்காக அரண்மனையில் காத்து கொண்டிருந்தவர்கள் சீவகன் வருவதை கண்டதும் மலர் தூவி ஆனந்தத்தை வெளிப்படுத்தினார்கள்.

🌟 சீவகன் அவர்களுடைய அன்பையும், மரியாதையும் ஏற்று கொண்டு, மனதில் இருந்த கவலைகள் அனைத்தும் நீங்கிய வண்ணமாக அரண்மனையின் மேல் மாடத்தில் தனது தாயுடன் நின்று, ராஜ்யத்தை பார்த்து கொண்டிருந்தான்.

🌟 அப்பொழுது, இன்று நிலவு மிகவும் அழகாக இருக்கிறது அல்லவா! என்று தனது தாயிடத்தில் கூறினான் சீவகன்.

🌟 அவனுடைய எண்ணத்தினை தெளிவாக புரிந்து கொண்ட விசையை, நீண்ட நாட்கள் கழித்து நீ நிம்மதியாக உறங்க நேரம் வந்துவிட்டது என்று எண்ணுகிறேன் சீவகா! இப்பொழுது நாம் உறங்க செல்வோம்! என்று கூறி தாயும், மகனும் கீழே அவர்களின் அறைக்கு சென்றார்கள்.

🌟 அதிகாலை முதலே அரண்மனையானது மிகுந்த பரபரப்புடன் இயங்க துவங்கியது. சீவகனை துயில் எழுப்புவதற்கு அனைவரும் தயாராக இருந்தாலும், அவன் உறக்கத்தை கலைப்பதற்கு யாருக்கும் மனம் வரவில்லை.

🌟 அதே சமயம் வெளியில் இருந்துவந்த நந்தட்டன், நேரமாகி கொண்டே இருக்கிறது சீவகனை எழுப்பலாமா? என்று கேட்டான்.

🌟 உடனே பதுமுகன், வேண்டாம்.. வேண்டாம்.. அவன் கடந்த ஓராண்டு காலமாக சரியான உறக்கம் இல்லாமல் ஊர் ஊராக சுற்றி கொண்டிருந்தான். அந்த உறக்கத்தை எல்லாம் இப்பொழுது சேர்த்து வைத்து உறங்கி கொண்டிருக்கின்றான். ஆகையால் அவன் நன்றாக உறங்கட்டும். நாம் அனைவரும் சிறிது நேரம் காத்திருப்போம் என்று கூறி எந்தவித சத்தங்களையும் எழுப்பாமல் அமைதியாக அனைவரையும் அறையில் இருந்து வெளியே வருமாறு சைகை செய்தான்.

🌟 அப்பொழுது சீவகனை பார்ப்பதற்காக வந்திருந்த கோவிந்தன், நண்பர்கள் அனைவரும் அறையிலிருந்து வெளிவருவதை பார்த்ததும், என்ன சீவகன் எழுந்து விட்டானா? என்று கேட்டார்.

🌟 இல்லை... சீவகன் உறங்கி கொண்டிருக்கின்றான். அதனால் தான் நாங்கள் அனைவரும் உங்களை பார்க்க வந்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார்கள்.

🌟 என்னது! நீங்கள் அனைவரும் என்னை பார்க்க தான் வந்து கொண்டிருக்கிறீர்களா! என்ன விஷயம்? என்று கேட்டார் கோவிந்தன்.

🌟 சீவகனுக்கு முடிசூட்டும் வைபவத்தை எப்பொழுது வைக்க வேண்டும்? எந்த நாள் சரியாக இருக்கும்? என்பதை பற்றி ஆலோசனை பெற தான் உங்களை பார்க்க வந்திருக்கின்றோம் என்று கூறினார்கள் சீவகனின் நண்பர்கள்.

🌟 உடனே கோவிந்தன், நல்ல வேளையாக எனக்கு நினைவுபடுத்தினீர்கள். எல்லா மன்னர்களும் இப்பொழுது இங்கே தான் இருக்கின்றார்கள். ஆகையால் கால விரயமும் இருக்காது. உடனே ஜோதிடரை அழைத்து முடிசூட்டுவதற்கான நேரத்தை குறித்து கொள்ளலாம் வாருங்கள்! என்று அழைத்தார்.

🌟 அப்பொழுது சீதத்தன், சீவகன் உறங்க போவதற்கு முன் சில கட்டளையிட்டிருக்கின்றார். அதாவது, போரில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு சரியான அளவில் மானியங்களும், பாதுகாப்பும் அளித்த பின்பு தான் நான் முடிசூட்டி கொள்வேன் என்றும், இது என்னுடைய கட்டளை என்றும் கூறிவிட்டு சென்றார் என்றான்.


🌟 இதை கேட்ட கோவிந்தன், அவ்வளவு தானே, அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விடுவோம் என்று கூறினார்.

🌟 உடனே புத்திசேனன், அதற்கு முன்னால் நல்ல பொற்கொல்லர்களை அழைத்து வந்து, இதுவரை யாரும் அணியாத கிரீடம் ஒன்றை நாம் தயார் செய்ய வேண்டும் என்று மகிழ்ச்சி பொங்க கூறினான்.

🌟 பின், சீவகன் முடிசூட்டி கொள்வதற்கான சிறந்த நாளும் ஜோதிடர்களால் குறிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் புத்திசேனன் கூறியபடியே, இதுவரை யாரும் பார்த்திராத அளவில் கண்களை கவரும் விதமாக சீவகன் அணிந்து கொள்ளக்கூடிய கிரீடமும் தயார் செய்யப்பட்டது.

🌟 மேலும் சீவகனின் முடிசூட்டும் விழாவானது ஏமாங்கத நாட்டிற்கு அருகில் உள்ள அனைத்து தேசங்களுக்கும் முறையான விதத்தில் சொல்லப்பட்டது.


Share this valuable content with your friends


Tags

பரணி நட்சத்திரத்தில் பிறந்த ஆண் குழந்தைக்கு எந்த எழுத்துக்களில் பெயர் வைக்கலாம்? வெள்ளிக்கிழமையில் வீடு காலி செய்யலாமா? ஆடி 18 அன்று வீடு கிரகப்பிரவேசம் செய்யலாமா? ஜன்னல்களின் முக்கியத்துவம் கழிவறை பிறகு தூக்குவது போலவும் கனவு கண்டால் என்ன பலன்? வகுப்பறையில் அமர்ந்து பாடம் கற்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? என்னென்ன அமைப்புகள் இருந்தால் கடன் வரும்? Wednesday Horoscope - 27.06.2018 பல்லி வலது கையின் மேல் ஏறி சென்றால் என்ன பலன்? வீரபாண்டிய கட்டபொம்மன் ஆனி 02.04.2021 Rasipalan in PDF Format!! வார ராசிபலன் (22.06.2020 -28.06.2020) PDF வடிவில் கடைக்கு சென்று உப்பு வாங்கி வருவதாக கனவு கண்டால் என்ன பலன்? செப்டம்பர் 19 deebam பாம்பு துரத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? முயல் கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? சகோதரி இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?