No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சித்திரை மாதத்தின் பல்வேறு சிறப்புகள் என்னென்ன?

Apr 13, 2023   Ramya   115    ஆன்மிகம் 


சித்திரை மாத வரலாற்று சிறப்புகள் !!

🌟 வரலாற்றில் சித்திரை மாதத்திற்கு என பல்வேறு சிறப்புகள் உள்ளன. அவைகளை பற்றி இங்கு காண்போம்.

🌟 சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளே சித்திரை முதல் நாள் என்று கூறப்படுகிறது. சித்திரை மாதத்தை வசந்த ராகம் என்றும் கூறுவர்.

🌟 சித்திரை முதல் நாளை பிரம்மதேவன் படைத்ததாக புராணங்கள் கூறுகின்றன.

🌟 சித்திரை சுக்கில பட்ச அஷ்டமியில் அம்பிகை அவதரித்ததாக தேவி பாகவதம் கூறுகிறது.

🌟 மங்களம் பொங்கும் இந்த மாதத்தினை சைத்ரா என்றும், சைத்ர விஷு என்றும் போற்றுகிறார்கள்.

🌟 இந்த நாளன்றுதான் நான்முகன் இப்பூவுலகைத் தோற்றுவித்தார் என்று புராணம் சொல்கிறது.

🌟 சித்திரை மாத பௌர்ணமி நாளில் சிவபெருமான் தங்கப் பலகையில் சித்திரம் ஒன்றினை வரைய, அதிலிருந்து சித்திரகுப்தன் அதாவது, எமதர்மனின் கணக்கர் தோன்றினாராம். அதே மாதத்தில், சித்திரை நட்சத்திர தினத்தன்று தான் நீலாதேவி மற்றும் கர்ணிகாம்பா ஆகியோரை சித்ரகுப்தன் மணந்ததாகப் புராணம் சொல்கிறது.

🌟 ராம நவமியும், அனுமன் ஜெயந்தியும் சித்திரை திங்களில் தான் கொண்டாடப்படுகிறது.

🌟 திருமாலின் அவதாரமான பரசுராமன் இந்நாளில் தான் அவதரித்தாகக் கூறப்படுகிறது.

🌟 சித்திரை மாதத்தில் வளர்பிறை காலத்தில் மூன்றாவது பிறை தோன்றும் நாளே அட்சய திதியை என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில் தங்கம் வாங்கினால் இல்லத்தில் செல்வம் குவியும் என்ற ஐதீகமும் உண்டு.

🌟 சொக்கநாதர்-மீனாட்சியைத் திருக்கல்யாணம் செய்து கொள்ளும் விழா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறும்.

🌟 சித்ரா பௌர்ணமியன்று தான் தேவேந்திரன் சொக்கநாதரை வழிபட்டுப் பேறுகள் பெற்றதாக புராணத் தகவல் உண்டு.

🌟 இத்தகைய பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள சித்திரை தாயை நாமும் உவகையோடு வரவேற்று எல்லா வளமும், நலமும் பெற்று வாழ்வோம்.


Share this valuable content with your friends


Tags

நாய் கட்டை விரலை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? புதன் மாசி வெள்ளிக்கிழமை வழிபாடு என் மாங்கல்யத்தை கழட்டி தருமாறு ஆண் ஒருவர் கட்டாயப்படுத்துவது போல் கனவு கண்டால் என்ன பலன்? அடமானம் AYYAPPAN march 3 தங்கம் 7ல் சுக்கிரன் மற்றும் புதன் சேர்ந்திருந்தால் என்ன பலன்? 6ல் புதன் ராகு இங்கு இருந்தால்... குடும்பத்தின் மீது பாசத்தை அள்ளிக் கொட்டுவார்கள்...! பொறுமை குணம் மிகுந்தவர்கள் இவர்களே! நாரண.துரைக்கண்ணன் காளியம்மனை கனவில் கண்டால் என்ன பலன்? செப்டம்பர் மாத ராசிபலன்கள் PDF வடிவில் !! . thirumaal பெருமாளுக்கு அபிஷேகம் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வீட்டிற்கு முன் பூச்செடிகள் வைக்கலாமா? தனியநாள் ராகு காலத்தில் பெண் குழந்தை பிறக்கலாமா?