No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - போர்க்களத்தில் சீவகனும் கட்டியங்காரனும்..!!

Apr 12, 2023   Ramya   153    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... போர்க்களத்தில் சீவகனும் கட்டியங்காரனும்..!!

🌟 சீவகனுடைய இந்த பேச்சை கேட்டதும் மிகுந்த கோபத்திற்கு சென்ற கட்டியங்காரன், அவனை கொல்ல தன்னிடத்தில் இருந்த வில்லை பயன்படுத்தி அம்புகளை எய்தான்.

🌟 இதை சீவகனுக்கு பின்னால் இருந்து கண்ட வீரர்கள் அம்பை தொடுக்க முயன்றபோது, சீவகன் அவர்களை எதுவும் செய்ய வேண்டாம் என்று சமிக்கைகளை காட்டிவிட்டான். பின் தன்னிடத்தில் இருந்த வாளை பயன்படுத்தி தன்னை நோக்கி வந்த அம்புகளை இரண்டு பிளவுகளாக பிளந்தான்.

🌟 மேலும் அவ்விடத்திற்கு சீவகனுடைய நண்பர்கள் அனைவரும் விரைந்து சென்று அவனுக்கு பாதுகாப்பிற்காக வர, அவர்களையும் வர வேண்டாம் என்று சமிக்கைகளை காட்டினான் சீவகன். அவனின் உத்தரவுபடியே அவர்கள் அனைவரும் சீவகனை பார்த்த வண்ணமாக சற்று தள்ளி நின்று கொண்டார்கள்.

🌟 சீவகனை சூழ்ந்து பெரும் அரணாக அவனுடைய நண்பர்கள், தாய் மாமன், வீரர்கள் என அனைவரும் இருக்கின்றார்கள் என்பதை கூட கவனிக்காமல், மீண்டும் மீண்டும் வெறி கொண்டு சீவகனை நோக்கி பல அம்புகளை எய்து கொண்டே இருந்தான் கட்டியங்காரன்.

🌟 அவன் தொடுத்த ஒரு அம்பு கூட சீவகனை நெருங்க முடியவில்லை. இதனால் அளவில்லாத கோபத்தில் இருந்த கட்டியங்காரன் திடீரென்று வில் தாக்குதலை நிறுத்திவிட்டு, கரத்தில் வாள் ஏந்திய வண்ணமாக அசனி வேகத்தின் மேலிருந்து குதித்தான். இனி உன் உயிர் உன்னிடம் இருக்காது! இப்பொழுதே உன்னை உன் தந்தையிடம் அனுப்பி வைக்கின்றேன் என்று கூறி கொண்டே சீவகனை தாக்கினான்.


🌟 கோபத்தில் தாக்கிய அவனுடைய ஒவ்வொரு தாக்குதலையும் லாவகமாக தடுத்ததோடு மட்டுமல்லாமல், அதற்கு நிகரான மறு தாக்குதலையும் கொடுத்தான் சீவகன்.

🌟 விழிப்புடன் இருந்த கட்டியங்காரன், சீவகனின் தாக்குதலை சமாளித்து மீண்டும் மீண்டும் தாக்கி கொண்டே இருந்தான். சீவகனுடைய தாக்குதலின் வேகத்தை புரிந்து கொண்ட கட்டியங்காரன் இவனுடைய விவேகத்தை குறைக்க வேண்டும் என்று எண்ணி, அதற்கு உண்டான தாக்குதலையும் தாக்க துவங்கினான்.

🌟 அதாவது, என் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறுகின்றாய் போலிருக்கிறது. என்னை தாக்குவதற்கு உனக்கு போதிய அனுபவமும், பயிற்சியும் இல்லை சிறுவனே! உன் தந்தையை போன்றே, நீயும் போர் புரிய தகுதியில்லாதவன் என்று கூறினான்.

🌟 கட்டியங்காரனின் கூற்றை கேட்ட சீவகன், ஒரு நொடியிலேயே அவனின் நோக்கத்தை புரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் அவன் பயம் கொள்ளும் அளவிற்கு தாக்குதல் நடத்தினான். அதாவது கட்டியங்காரனின் தாக்குதலை தடுத்ததோடு மட்டுமல்லாமல், தனது வாளினை மிகுந்த வேகத்துடன் சுழற்றி அவன் வாளின் கூர்முனை பகுதிகள் உடையும் அளவிற்கு மறு தாக்குதலை தொடுத்தான். அந்த தாக்குதலில் கட்டியங்காரனுடைய வாள் இரண்டாக பிளவுற்றது.

🌟 இதை சற்றும் எதிர்பார்க்காத கட்டியங்காரன் என்ன செய்வது? என்று தெரியாமல் அந்த இடத்திலேயே நின்றான். அப்பொழுது சீவகனை பார்க்க, அவனுக்கு சீவகனாகவே தெரியவில்லை. சீவகனின் தந்தையான சச்சந்தனே அவ்விடத்தில் நிற்பதாக தெரிந்தது.


Share this valuable content with your friends