No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - நூறு மகன்களை இழந்த கட்டியங்காரன்...!!

Apr 12, 2023   Ramya   168    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... நூறு மகன்களை இழந்த கட்டியங்காரன்...!!

🌟 சீவகன், தன்னுடைய படை வீரர்களை கொண்டு, பத்ம வியூகத்தில் அடுத்து இருந்த குதிரை படை வீரர்களை நோக்கி அம்பு மழை பொழிய செய்தான். சீவகனுடைய இந்த அம்பு படை தாக்குதலினால் நிலை குலைந்த குதிரை படை வீரர்கள் குத்துயிரும் குலையுயிருமாக அவ்விடத்தில் இறந்தனர். அதிலிருந்து பிழைத்தோர் அவ்விடத்திலிருந்து தப்பித்து சென்றனர்.

🌟 சீவகன் மூன்றாம் கட்டத்திற்கு வந்து கொண்டிருக்கின்றான் என்பதை புரிந்து கொண்ட அரிச்சந்திரன் தன்னுடைய குதிரையில் சென்று சீவகனை தாக்க முற்பட்டான்.

🌟 தனது தந்தையை கொன்றவனை பழி தீர்ப்பதற்காக வந்து கொண்டிருக்கும் வெறிகொண்ட வேங்கையான சீவகனின் முன், அவனால் ஒரு நிமிடம் கூட நிற்க முடியவில்லை. அதாவது சீவகன் வந்த வேகத்தில் ஒரே ஒரு தாக்குதலிலேயே அவன் சிரமானது உடலை விட்டு தனியே சென்று விட்டது.


🌟 அரிச்சந்திரனை வென்று அடுத்த கட்டத்திற்கு சென்ற சீவகனுக்கு ஒரு பெரும் அதிர்ச்சி காத்து கொண்டிருந்தது.

🌟 அது என்னவென்றால் பெரியவர்களும், சிறியவர்களுமாக கட்டியங்காரனின் 100 மகன்கள் தன்னிடத்தில் போர் புரிவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தார்கள்.

🌟 சரியான போர் பயிற்சிகள் எதுவும் இல்லாமல், கரங்களில் வாளை கூட பிடிக்க தெரியாமல், தனது தந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே எண்ணத்திற்காக, எதை பற்றியும் யோசிக்காமல் சீவகன் படையை எதிர்க்க துவங்கினார்கள்.

🌟 இவர்களை பார்த்துவிட்டு, என்ன செய்வது? என்று தெரியாமல் நின்று கொண்டிருந்த சீவகனுக்கு, அவனுடைய குரு கூறியது தான் நினைவிற்கு வந்தது.

🌟 அதாவது போர்க்களத்தில் உன்னுடைய எதிரி தான் நீ எந்தவிதமான ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்கின்றான் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள் என்று அவனின் குரு பயிற்சியின்போது கூறியதை நினைத்தான்.

🌟 பின் தனது படை வீரர்களுக்கு அவர்களை எதிர்க்க உத்தரவு கொடுத்தான். நல்ல தேர்ச்சி பெற்று முறையான பயிற்சிகளுடன் இருக்கக்கூடிய படை வீரர்கள் முன்னிலையில் சிறிது நேரம் கூட கட்டியங்காரனின் மகன்களால் நிற்க முடியவில்லை. தனது தந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் போரிட்ட அனைவரும் இன்னுயிரை நீத்தார்கள்.

🌟 கட்டியங்காரனுக்கு அரணாக இருந்த அனைவரையும் கொன்ற சீவகன், கடைசியாக அவன் இலக்கான கட்டியங்காரன் இருக்கும் இடத்தை கண்டான்.


🌟 அந்த இடமே குருதியால் நிறைந்திருக்க, தன்னிடத்தில் இருக்கக்கூடிய சங்கை எடுத்து ஊதினான் சீவகன். அந்த சங்கில் இருந்து வெளிப்பட்ட ஒலியானது எதிரில் இருந்த கட்டியங்காரனுக்கு ஒருவிதமான பயத்தை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், அங்கு பிணங்களை உண்பதற்காக காத்து கொண்டிருந்த பறவைகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால் அவ்விடத்திலிருந்த பறவைகள் சில வினாடிகளில் அகன்று சென்று விட்டது.

🌟 தன்னுடைய எதிரில் இருப்பவன் தன்னை விட வலிமையாக இருக்கின்றான் என்பதை புரிந்து கொண்டாலும், அதை துளியும் வெளியே காட்டி கொள்ளாமல் இருந்தான். அதாவது சீவகனிடத்தில் மிகுந்த வெறியோடும், தனது புதல்வர்களை இழந்த வேதனையோடும் அசனி வேகம் என்ற பட்டத்து யானையின் மீது அமர்ந்திருந்தான் கட்டியங்காரன்.

🌟 சீவகன் கட்டியங்காரனின் அருகில் செல்ல, உடனே கட்டியங்காரன், என்ன சீவகா! என்னை வென்று விட்டதாக எண்ணி ஆனந்தம் கொள்கிறாய் போல இருக்கின்றது! இங்கு வெல்வதும், தோற்பதும் நமது வீரம் மட்டுமல்ல.... நாம் செய்த நல்வினைகளும், தீவினைகளும் தான்.

🌟 நாட்டை மறந்து, சுகபோகத்தில் ஆழ்ந்து, தீவினைகள் பல இழைத்த உனது தந்தையை, அவர் செய்த வினைக்காக தான் அன்று நான் கொன்றேன்.

🌟 அதற்காக தான் நீ இன்று என்னை பழி தீர்க்க வந்திருக்கின்றாய் என்றால், நீ செய்த தீவினைக்காகவும் உன்னை நான் கொல்ல போகின்றேன் என்று மிகுந்த ஆவேசத்துடனும், கோபத்துடனும் கூறினான்.

🌟 சிரித்து கொண்டே அவன் அருகில் சென்ற சீவகன், என்ன கட்டியங்காரா! போரில் தோற்றுவிடுவோம் என்ற பயம் வந்துவிட்டதோ! அதனுடைய வெளிப்பாடாக தான் இப்படி கூறிக் கொண்டிருக்கின்றாயா! அணைகின்ற விளக்கு எப்படி பிரகாசமாக எரியுமோ, அதை போல் நீ தெரிகின்றாய் என்று கூறினான்.


Share this valuable content with your friends


Tags