No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - கட்டியங்காரனை வீழ்த்திய சீவகன்..!!

Apr 12, 2023   Ramya   200    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... கட்டியங்காரனை வீழ்த்திய சீவகன்..!!

🌟 எதிரியாக இருந்தாலும் ஆயுதம் எதுவும் இல்லாமல் நிற்கதியாய் நிற்கின்றவனை கொல்வது ஒரு வீரனுக்கு அழகல்ல! என்று கூறி, பிடி வாளை! என்று தன்னுடன் சண்டையிட மீண்டும் வாளை கொடுத்தான்.

🌟 அப்பொழுது கட்டியங்காரன், இவனை சிறுவன் என்று தவறாக நினைத்து விட்டோமோ! என்று எண்ணியபடியே தனக்கான வாளை எடுத்து கொண்டு சீவகனை எதிர்க்க துவங்கினான்.


🌟 கட்டியங்காரனின் ஒவ்வொரு தாக்குதலும் சீவகனால் உருக்குலைக்கப்பட்டன. அதாவது சீவகனுடைய ஒவ்வொரு தாக்குதலும் கட்டியங்காரனுக்கு பெரும் அடியாகவும், அவன் எழுந்திருக்க முடியாத வகையிலும் இருந்தது.

🌟 இறுதி தாக்குதலாக சீவகன் தனது தந்தையை மனதில் எண்ணி கொண்டு கட்டியங்காரனை வேகமாக தாக்கினான். அந்த தாக்குதலில் முற்றிலுமாக நிலை குலைந்த கட்டியங்காரன், சீவகனின் வாளை எதிர்க்க முடியாமல் மார்பில் வாள் இறங்கிய வண்ணமாக உயிரை நீத்தான்.

🌟 உடனே போர்க்களத்தில் சீவகனுக்கு பின்னால் இருந்த படை வீரர்களும், அவனுடைய நண்பர்களும் மகிழ்ச்சியுடன் சீவகனை தூக்கி ஏமாங்கத நாட்டின் சக்கரவர்த்தியே! சீவகன் வாழ்க! என்று கூறிக்கொண்டு படை வீட்டிற்கு சென்றார்கள்.

🌟 செல்லும் வழியில் கூட்டங்கள் யாவும் அலை மோத, சீவகனுக்கு வாழ்த்துக்கள் கூறினார்கள்.

🌟 பின் சீவகன் நண்பர்களிடத்தில், என்னை கீழே இறக்குங்கள். நான் செய்ய வேண்டிய வேலைகள் இன்னும் நிறைய இருக்கின்றது என்று கூறினான்.

🌟 உடனே பதுமுகன், இன்னும் என்ன வேலை இருக்கின்றது? என்று கேட்டான்.

🌟 அதற்கு சீவகன், கட்டியங்காரன் சதிகள் பல செய்து நம்மை ஆண்டு கொண்டிருந்தாலும், அவனுடைய மனைவியர்கள் என்ன பாவம்? செய்தார்கள். அவர்களுக்கு போர்க்களத்தில் என்ன நடந்தது? என்று தெளிவாக கூற வேண்டும் அல்லவா! அதை நான் தான் முறைப்படி செய்ய வேண்டும் என்றான்.

🌟 சீவகனின் கூற்றை கேட்ட அவனுடைய நண்பர்கள் அனைவரும் அமைதியாக இருக்க, சீவகன் கட்டியங்காரனின் அந்தப்புரத்தை நோக்கி சென்றான்.

🌟 இங்கு அந்தப்புரத்தில் இருந்த காவலர்கள் சீவகன் படையுடன் வருவதை கண்டதும் உயிர் மீது கொண்ட பயத்தினால் அனைவரும் பயந்து ஓட துவங்கினார்கள்.

🌟 காவலர்கள் ஓடுவதை கண்ட சீவகன், அவர்கள் அனைவரையும் பிடியுங்கள்! ஆனால் அவர்களை துன்புறுத்தவோ, பயமுறுத்தவோ, அடிக்கவோ செய்யாதீர்கள்! என்று கட்டளையிட்டான்.

🌟 படை வீரர்கள் காவலர்களை பிடித்து வந்ததும் அவர்களிடம் கட்டியங்காரனின் பட்டத்து மனைவி எங்கே இருக்கின்றார்? என்று வினவினான் சீவகன்.

🌟 அதற்கு அவர்கள் எதுவும் கூறாமல், ஒருவரையொருவர் பார்த்து கொண்டு என்ன கூறுவது? என்று புரியாமல் நின்று கொண்டிருந்தார்கள்.


🌟 சீவகன் அவர்களுடைய தயக்கத்தை புரிந்து கொண்டு, பட்டத்து ராணியை எதுவும் செய்யமாட்டேன்! அவர் எங்கே இருக்கின்றார்? என்று வினவினான்.

🌟 அதிலிருந்த ஒரு காவலன், பட்டத்து ராணி மூன்றாம் மாளிகையில் இருக்கின்றார் என்று கூறினான்.

🌟 உடனே சீவகன் மூன்றாம் மாளிகைக்கு சென்றான். அவன் செல்லும் வழியில் எந்தவிதமான சத்தமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. அரசி போர்க்களத்தில் என்ன நடந்தது? என்று தெரியாமல் இருந்திருந்தாலும், போரின் போக்குகளை நன்கு அறிந்திருந்தார்.

🌟 அரசியை கண்டதும், சீவகனுக்கு போரில் கிடைத்த வெற்றியானது ஒரு நொடியில் கானல் நீர் போல மாறியது. அவரிடத்தில் என்ன கூறுவது? என்று புரியாமல் நின்று கொண்டிருந்தான்.

🌟 அந்தப்புரத்திற்கு தன்னுடைய கணவருக்கு எதிராக போர் புரிந்தவன் வந்திருக்கின்றான் என்றால், போரில் என்ன நடந்தது? என்பதை அவரால் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.

🌟 அப்பொழுது சீவகனின் படையில் இருந்த ஒருவன், ராசமாபுரத்து எல்லையில் நடந்த போரில் சீவக சக்கரவர்த்தி கட்டியங்காரனையும், அவனுடைய நூறு மகன்களையும் வீர சொர்க்கத்திற்கு அனுப்பி வைத்தார் என்று கூறினான்.

🌟 இதை கேட்டதும் அரசியின் மனமானது, இனி நாம் இருப்பதினால் என்ன பயன் என்று எண்ணியதோ தெரியவில்லை! சிறு நொடிகளிலேயே அவரும் உயிரை விட்டு விட்டார்.


Share this valuable content with your friends


Tags

நெல்சன் மண்டேலா Direction திருமணபொருத்தம் 11ல் கேது இருந்தால் தண்ணீரில் நடப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெண்ணின் வலது கை சுண்டு விரலில் மச்சம் இருந்தால் என்ன பலன்? யானையை கனவில் கண்டால் வீட்டின் முன்பு பூவரசன் மரம் இருக்கலாமா? கார்த்திகை நட்சத்திரத்திற்கு எத்திசையில் வீடு இருத்தல் வேண்டும்? 2023 Tulām rāsi palaṉgaḷ.! வளர்பிறை ஏகாதசி ஆனி மாதம் வெள்ளெருக்கு பட்டை குல்சாரிலால் நந்தா gold வில்லியம் ஹென்றி பிக்கெரிங் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க தேவையான வழிமுறைகள் என்னென்ன? ஐப்பசி மாதம் வீடு கட்ட ஆரம்பிக்கலாமா? நட்சத்திரம் உள்ளவரை திருமணம் செய்து கொள்ளலாமா? சிந்தனைகள் மேம்படும்