No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - வரனுக்கான போட்டியை நடத்த ஆணையிட்ட மன்னன்..!!

Apr 07, 2023   Ramya   190    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... வரனுக்கான போட்டியை நடத்த ஆணையிட்ட மன்னன்..!!

🌟 கட்டியங்காரன், மன்னா! நான் தெய்வமாக எண்ணி கொண்டிருந்த எனது மன்னனை கொன்ற அந்த பட்டத்து யானையை என்ன செய்திருக்கின்றேன்? என்று நீங்களே பாருங்கள் என்று கூறி, அந்த யானையை அடைத்து வைத்திருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றான். பெரும் குழி ஒன்றில் வருடக்கணக்காக எந்தவிதமான உணவுகளையும் அளிக்காமல், பட்டினியுடன் இருந்த யானையை காட்டி, இது தான் எனது மன்னரை கொன்ற பட்டத்து யானை என்றான்.

🌟 இதை கேட்டு கொண்டிருந்த கோவிந்தனுக்கோ, கோபம் அளவுக்கு அதிகமாக வந்தது. அப்பொழுது கட்டியங்காரனிடம் எனக்கு ஒரு உதவி நீங்கள் செய்ய வேண்டுமே? என்று வினவினார் கோவிந்தன்.

🌟 என்ன உதவியை நான் உங்களுக்கு செய்ய வேண்டும்? என்று கட்டளையிடுங்கள் கோவிந்தரே! உங்கள் விருப்பப்படியே அனைத்தையும் செய்து முடிக்கின்றேன் என்றான் கட்டியங்காரன்.


🌟 அது ஒன்றுமில்லை எனது மகளான இலக்கணைக்கு ஒரு வீர அரசனை மணமுடித்து வைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக காத்து கொண்டிருக்கின்றேன். அதற்கான ஏற்பாடுகளையும் நான் செய்தேன். அதில் ஒரு சிறு பிரச்சனையும் ஏற்பட்டது. நான் எல்லா நாட்டு அரசர்களுக்கும் தகவலை அனுப்பினாலும், விதேய நாட்டிற்கு நட்புறவு கொண்ட அரசர்கள் மட்டும் தான் வருகின்றார்கள். மற்ற நாட்டு அரசர்கள் யாரும் வருவதே இல்லை என்றார்.

🌟 கட்டியங்காரன், அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்று எனக்கு புரியவில்லையே என்றான்.

🌟 எனது மகளுக்கான மணமகனை கண்டுபிடிக்க நடைபெறும் போட்டியானது ராசமாபுரத்தில் நடைபெற்றால் அனைத்து மன்னர்களும் இங்கே வந்து கலந்து கொள்வார்கள் அல்லவா! நான் இங்கே வந்திருப்பதால் எனது நாட்டு நட்பு அரசர்களும் இங்கே வருவார்கள். அதுமட்டுமல்லாமல் இங்கு போட்டி நடைபெறுகின்ற காரணத்தினால் உங்கள் நாட்டு நட்பு அரசர்களும் வருவார்கள். ஆக மொத்தத்தில் அனைத்து அரசர்களும் ஒரே இடத்தில் இணைந்து இருக்கலாம்.

🌟 இது ஒன்றும் புதிய நிகழ்வாக எனக்கு தோன்றவில்லை. ஏற்கனவே ஒரு முறை நீங்கள் யாழ் போட்டி நடத்துவதற்காக அனைத்து அரசர்களையும் ஒருங்கிணைத்து இங்கு வர வைத்தீர்கள் அல்லவா! ஆகையால் இது உங்களுக்கு கடினமானதாக இருக்காது என்று எனக்கு தோன்றுகின்றது என்றார் கோவிந்தன்.

🌟 ஏமாங்கத நாட்டில் நிகழ்ந்த போட்டியானது கோவிந்தனுக்கு எப்படி தெரியும் என்றால், சீவகன் விதேய நாட்டில் இருந்த பொழுது, ஒருநாள் கோவிந்தனும், சீவகனும் தனிப்பட்ட முறையில் உரையாடி கொண்டிருந்தார்கள்.

🌟 அப்பொழுது கோவிந்தன் சீவகனிடம் என் மகளை வீரம் மிகுந்த ஒருவனுக்கு தான் திருமணம் செய்து வைப்பேன் என்று கூறினார். சீவகனுக்கோ திடீரென்று மகளின் திருமணத்தை பற்றி கூறுகின்றாரே என்று யோசித்து கொண்டிருந்த பொழுது, நீ எப்படி காந்தருவதத்தையை மணந்து கொண்டாய்? என்று கேட்டார் கோவிந்தன்.


Share this valuable content with your friends


Tags

பணவரவு அதிகரித்தல் murder உலக வேசெக்டொமி தினம் குழந்தைப்பேறு கிடைக்கும் ஜனவரி மாதம் வளைகாப்பு செய்ய உகந்த நாட்கள் என்னென்ன? குருவுடன் சனி சேர்ந்திருந்தால் பெண்ணிற்கு இடது உள்ளங்காலில் மச்சம் இருந்தால் என்ன பலன்? புரட்டாசி மாதம் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? poruthangal வீட்டில் பூக்கள் பூப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? march 22 rasipalan fruend சூரியன் உங்கள் ஜாதகத்தில் இந்த இடத்தில் இருந்தால்... பாராட்டுக்கள் குவியும்...!! விநாயகர் காது குத்தலாமா ராசிபலன் entha varusa arttāṣṭama saṉi.! நான் சிம்ம லக்னம். தனுசு ராசியில் குரு இருந்தால் என்ன பலன்?< காது குத்தாமல் திருமணம் செய்யலாமா? கோவில்களை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்?