No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




செவ்வந்தி பூக்களுக்கு இவ்வளவு மகிமைகள் உள்ளதா?

Apr 07, 2023   Ramya   161    ஆன்மிகம் 


செவ்வந்தியின் மகிமைகள்...!!


🌼 கோவிலிலும் சரி, வீட்டிலும் சரி இறைவழிபாட்டில் பிற பொருட்களை காட்டிலும் பூக்கள் தான் முக்கிய பங்கு வகுக்கின்றன.

🌼 பொன்னை வைக்க வேண்டிய இடத்தில் அதற்கான வசதியில்லையெனில் பூக்களை வைக்கலாம் என்பார்கள். பூ என்பது அத்தனை புனிதமானது.

🌼 புண்ணியம் செய்வோர்க்கு பூவுண்டு, நீருண்டு என்பது திருமுறை வாக்கு. இந்த மண்ணில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் இறைவனை நினைத்து தினமும் வழிபாடு செய்வது அவசியமானது. இறைவனுக்கு மிகவும் பிடித்தது தன்னை மலர்களால் அர்ச்சனை செய்வது.

🌼 மனதை சுண்டி இழுக்கின்ற அதன் வண்ணங்களும், மனதில் தெய்வீகத்தை பரப்புகின்ற அதன் மணமும் நம்மை மற்றொரு உலகிற்கு அழைத்து செல்லக்கூடியவை.

🌼 அதனால் தான் இறைவனை துதிக்கின்ற பூஜைகள், வழிபாடுகளில் மலருக்கு பெரும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஆனால் எல்லா விதமான மலர்களையும் எல்லா தெய்வத்திற்கும், எல்லா வழிபாடுகளிலும் பயன்படுத்தலாமா? என்றால் அவ்வாறு செய்ய இயலாது. குறிப்பிட்ட மலர்களை குறிப்பிட்ட கடவுளுக்குத்தான் அர்பணிக்க முடியும்.

🌼 உதாரணத்திற்கு துளசியை சிவனுக்கு அர்பணிக்க முடியாது. ஆனால் விஷ்ணு பெருமானுக்கு மாலையாக கட்டி வழிபடலாம். ஒரு வில்வ தளமானது லட்சம் பொன் மலர்களுக்கு சமம். ஒரு வில்வ தளத்தை பக்தியோடு சிவனுக்கு சமர்ப்பித்தால் எப்பேர்பட்ட பாவங்களும் விலகும்.

🌼 அந்த வகையில், கடவுளுக்கு அர்பணிக்கும் மலர்களில் தனக்கென ஒரு இடத்தை பெற்றிருப்பது செவ்வந்தி மலர் ஆகும். ஒருவர் தொடர்ச்சியாக இறைவனுக்கு செவ்வந்தி மலர்களை வைத்து வணங்குவதால் அவருடைய ஆணவம் மற்றும் அகங்காரம் மெல்ல மெல்ல அழியும் என்பது நம்பிக்கை.

🌼 அதை போலவே செவ்வந்தியின் தனித்தன்மை என்னவென்றால், மற்ற மலர்களை போல் அல்லாமல் அதனுடைய சொந்த இதழ்களை கொண்டே அதனால் மற்றொரு செடியை மரு உருவாக்கம் செய்ய முடியும்.


🌼 இது கர்மாவின் அடிப்படையை குறிக்கிறது. செய்யக்கூடிய செயல்களே கர்ம வினைகளாக மாறி பின் அதற்கு தகுந்தாற் போல மற்றொரு வடிவை எடுக்கிறோம் என்பதை உணர்த்துகிறது.

🌼 இந்த செவ்வந்தி மலர் அனைத்து விதமான தீய சக்திகளையும் தடுத்து நிறுத்தும்.

🌼 மேலும் இதனுடைய நறுமணமானது அதன் இதழ்கள் வாடினாலும் கூட புத்துணர்வுடன் வீசும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது தான் வருந்தினும் பிறருக்கு நன்மையை அளிக்கும் புனித தன்மையுடன் செவ்வந்தி உள்ளது.


Share this valuable content with your friends