No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பண கஷ்டம் தீர... வெள்ளிக்கிழமை வழிபாடு..!!

Apr 07, 2023   Ramya   211    ஆன்மிகம் 


பண கஷ்டம் தீர... வெள்ளிக்கிழமையில் இந்த வழிபாட்டை செய்யுங்கள்...!!


🌺 சில பேருக்கு நல்ல வருமானம் இருக்கும். ஆனால் வரக்கூடிய பணத்தை சரியான வழியில் செலவு செய்ய முடியாது. கையில் வாங்கிய சம்பளத்தை சந்தோஷமாக குடும்பத்திற்காகவோ, தனக்காகவோ செலவு செய்து கொள்ள முடியாத சூழ்நிலைகள் இருக்கும். சுக்கிர யோகம் கிடைக்க என்ன செய்வது? என பார்க்கலாம் வாங்க.

வெள்ளிக்கிழமை வழிபாடு :

🙏 வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஓரையில் ஒரு சிறிய துண்டு வெட்டிவேரை எடுத்துக் கொள்ளுங்கள்.

🙏 அதில் தீபம் ஏற்றும் திரியை நன்றாக திரித்து விடுங்கள். தீபமேற்றும் திரியையும், இந்த வெட்டிவேரையும் ஒன்றாக இணைத்து சுருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

🙏 பூஜை அறையில் ஒரு மண் அகல் தீபத்தை வைத்து விட்டு அதில் நெய் ஊற்றி தயார் செய்து வையுங்கள்.

🙏 இந்த வெட்டிவேர் திரியை வைத்து தீபம் ஏற்றி வைக்க வேண்டும். இந்த தீபத்திற்கு முன்பாக ஒரு மாதுளையை நைவேத்தியமாக வைக்க வேண்டும்.

🙏 அதன் பின்பு எப்போதும் போல உங்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி திருவுருவப்படத்திற்கு பூக்களால் அலங்காரம் செய்து வீட்டில் தீபத்தை ஏற்றி வெள்ளிக்கிழமையில் வழிபட வேண்டும்.

🙏 குறிப்பிட்ட இந்த வெட்டிவேர் தீபத்தை ஏற்றி வைத்து அதில் எரியும் தீபச்சுடரை பார்த்து, உங்களுடைய வேண்டுதலை வைக்க வேண்டும்.

🙏 இவ்வாறு வேண்டினால் வீட்டில் இருக்கும் பண கஷ்டத்திற்கு சீக்கிரம் விடிவுகாலம் பிறக்கும்.

பயன்கள் :

👉 மூன்று வாரம் தொடர்ந்து சுக்கிர ஓரையில் வெள்ளிக்கிழமை இந்த தீபத்தை ஏற்றுங்கள். நிச்சயம் வாழ்வில் நம்ப முடியாத சில நல்ல மாற்றங்கள் நிகழும்.

👉 முடிந்தால் உங்களுடைய வீட்டில் ஒரு துளசி செடியை வைத்து வளர்க்க வேண்டும்.

👉 அந்த துளசி செடிக்கு அருகில் சிறிய அளவில் மாதுளை செடியை வையுங்கள்.

👉 துளசி செடியும், மாதுளை செடியும் அருகில் இருக்கக்கூடிய வீட்டில் பண கஷ்டம் வராது.

👉 குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

👉 கணவன், மனைவிக்கிடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

👉 குடும்பத்தில் சந்தோஷமும், செல்வமும் குறைவில்லாமல் இருக்கும்.


Share this valuable content with your friends