No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனுக்காக காத்துக் கொண்டிருந்த ரதம்..!!

Apr 05, 2023   Ramya   160    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனுக்காக காத்துக் கொண்டிருந்த ரதம்..!!

🌟 புத்திசேனன் கூறுவதில் இருக்கக்கூடிய உண்மையை புரிந்து கொண்ட சீவகன் அதற்கு ஒரு மாற்று வழியை யோசித்தான். சிறிது நேரத்திற்கு பிறகு தன்னுடன் பயணித்து வந்த நண்பர்கள் அனைவரையும் அழைத்து, புத்திசேனா! நீ கூறுவதிலும் ஒரு உண்மை மறைந்து தான் இருக்கின்றது. நாம் கடந்து செல்ல வேண்டிய நாடுகளை பற்றி நான் அறிவேன்.

🌟 ஒரு சில நாடுகளுக்கு நடுவே உள்ள நீரோட்டத்தின் வழியாகவும், ஒரு சில நாடுகளில் இருக்கக்கூடிய காடுகளின் வழியாகவும் யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல் நாம் சென்று விடலாம் என்று அதற்கான திட்டத்தை பற்றி நண்பர்களிடத்தில் தெளிவாக கூறினான்.

🌟 சீவகன் கூறியபடியே நீரோட்டத்தின் வழியாக படைகளை நடத்தி கொண்டு சென்றார்கள் அவனுடைய நண்பர்கள். அப்பொழுது குதிரையின் வேகமானது குறைய துவங்கி, யானையின் வேகமானது அதிகரிக்க துவங்கின. ஒரு வழியாக நீரோட்ட வழியில் பயணத்தை முடித்து, காட்டின் வழியாக அடுத்த பயணத்தை துவங்கினார்கள்.

🌟 இந்த படைகளுக்கு முன்பாக தனித்து சென்று அனைவரையும் வழி நடத்தி கொண்டிருந்தான் சீவகன். ஏனென்றால் இந்த காட்டின் வழியாக அவன் இரண்டு முறை சென்று வந்து விட்டான் அல்லவா! அதனால் தான் அவனே இவர்களை வழி நடத்தி கொண்டிருந்தான்.

🌟 பயணத்தின் இறுதி இலக்கான விதேய தேசத்தின் எல்லைகளை அவன் காண ஆரம்பித்தான். அப்பொழுது சீவகனின் மனதில் இருந்த கவலைகள் அனைத்தும் நொடி பொழுதில் காணாமல் போயின. அதாவது தனது தாயையும், மாமனையும் பார்ப்பதற்கான காலம் மிக குறைந்த அளவில் தான் இருக்கிறது என்பதை புரிந்தது கொண்டதும், அவனுள் புதிய உற்சாகம் பிறந்தது.

🌟 சீவகன் கோட்டையின் வாசலை பார்த்ததும், தனது படை வீரர்களிடத்தில் நான் வரும் வரை அனைவரும் இங்கேயே பாதுகாப்புடன் இருங்கள் என்று கூறிவிட்டு, தனது நண்பர்களுடன் கோட்டையை நோக்கி செல்ல முற்பட்டான்.

🌟 அப்பொழுது புத்திசேனன், படைகள் இங்கே காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை சீவகா! அனைவருமே விதேய நாட்டிற்குள் செல்லலாம் என்று எங்கேயோ பார்த்து கொண்டே கூறினான்.

🌟 திடீரென்று புத்திசேனன் இவ்வாறு கூறுவதை கேட்ட சீவகன், அவன் பார்த்த திசையை பார்க்க, அங்கே நாட்டின் எல்லையில் பெருங்கூட்டம் நின்று கொண்டிருப்பது தெரிந்தது. அதுமட்டுமல்லாமல் வெள்ளை கொடியுடன் ரதம் ஒன்று சீவகனின் படையை நோக்கி வந்து கொண்டிருந்தது.

🌟 அந்த ரதத்தில் இருந்தவர், ஏமாங்கத நாட்டின் மன்னனான சச்சந்தனின் ஒரே புதல்வனும்! விதேய நாட்டின் சொத்தும்! விசையையின் அன்பு புதல்வனுமான சீவகனை! விதேய நாட்டு மன்னனான கோவிந்தன் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கின்றார்!! என்று கூற, இதை கேட்ட பிறகே சீவகனும், அவனுடைய நண்பர்களும் அமைதி கொண்டனர்.

🌟 பிறகு குதிரையில் இருந்த சீவகன் இறங்கி அவனை அழைத்து செல்வதற்காக வந்திருந்த ரதத்தில் ஏறி அமர்ந்தான். அந்த ரதமானது பலவிதமான அலங்காரத்துடனும், எழிலுடனும் காட்சியளித்து கொண்டிருந்தது.


Share this valuable content with your friends