No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனை கண்டு அதிர்ச்சியடைந்த சுரமஞ்சரி..!!

Apr 03, 2023   Ramya   147    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனை கண்டு அதிர்ச்சியடைந்த சுரமஞ்சரி..!!

🌟 சுரமஞ்சரி கோயிலுக்கு வந்ததும் தன்னுடைய தோழியை பார்த்து, நீ இங்கேயே இரு. நான் மட்டும் உள்ளே சென்று இறைவனை வணங்கிவிட்டு வருகிறேன் என்றாள்.

🌟 நீண்ட நாட்கள் கழித்து கோயிலுக்குள் சென்ற சுரமஞ்சரி இறைவனை மனமுருகி வணங்கினாள். அதாவது, சீவகனை தவிர வேறு எந்தவொரு ஆண் மகனையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சூளுரைத்திருக்கின்றேன். நான் கூறியதை போலவே சீவகனை திருமணம் செய்து கொள்ள நீங்கள் அருள் புரிய வேண்டும் என்று வணங்கினாள்.

🌟 உடனே அக்கோயிலில், என்னிடம் என்ன நீ கேட்டாயோ, அது நிச்சயமாக நடக்கும்! அதில் சந்தேகம் என்பதே வேண்டாம்! அது இப்பொழுது உனக்காக உனது இல்லத்தில் காத்து கொண்டிருக்கின்றது என்று ஒரு குரல் கேட்டது.

🌟 தனக்கானவன் தனது இல்லத்தில் காத்து கொண்டிருக்கின்றான் என்பதை கேட்டதும் அவள் அடைந்த மகிழ்ச்சி எல்லையில்லாத அளவில் இருந்தது. பின் இறைவனை மனமுருகி பிரார்த்தனை செய்துவிட்டு, கோயிலின் வெளியே நின்று கொண்டிருந்த தோழியை பார்த்து, விரைவாக வீட்டிற்கு செல்ல வேண்டும்... வா போகலாம் என்று அவளையும் அழைத்து கொண்டு சென்றாள்.

🌟 சிறிது நேரம் சென்ற பிறகு, அக்கோயிலின் உள்ளே இருந்து சிரித்து கொண்டே புத்திசேனன் வெளியே வந்தான்.


🌟 வீட்டிற்கு செல்லும் வழியில், கோயிலில் கேட்டது நிகழ்ந்திருக்குமா? நிகழ்ந்திருக்காதா? அவ்வளவு காவலர்களை மீறி சீவகன் எப்படி உள்ளே வர முடியும்? என்று சுரமஞ்சரியின் மனமானது ஓரிடத்தில் நிலையில்லாமல் அவள் இருக்கும் வீட்டினை சுற்றியே அலைந்து கொண்டிருந்தது.

🌟 அவளுடன் வந்து கொண்டிருந்த தோழியோ இவளின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல், கொஞ்சம் பொறு சுரமஞ்சரி! என்ன அவசரம்? ஏன் இவ்வளவு வேகமாக சென்று கொண்டிருக்கின்றாய்? என்று கேட்டாள்.

🌟 உடனே சுரமஞ்சரி, எல்லாம் அவசரம் தான். சீக்கிரம் வா! காலத்தை வீண் செய்யாதே என்று கூறிவிட்டு முன்பு சென்ற வேகத்தை விட அதிக வேகத்துடன் செல்ல துவங்கினாள்.

🌟 ஒரு வழியாக வீட்டினை அடைந்து, கதவை திறந்து பார்த்தவளுக்கு அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. ஏனென்றால், இங்கு சீவகன் கட்டிலின் மீது அமர்ந்து சுரமஞ்சரியின் வருகைக்காக காத்து கொண்டிருந்தான்.

🌟 இது கனவா? அல்லது நிஜமா? என்பதே தெரியாமல் இருந்த சுரமஞ்சரி, அருகில் இருந்த தனது தோழியிடம் இங்கு சீவகன் இருக்கின்றாரா? என்று கேட்டாள்.

🌟 இதுவரை அவ்விடத்தில் எந்தவொரு ஆடவரையும் காணாத அவளுடைய தோழியும் அப்பொழுது தான் அதிர்ச்சியில் இருந்து மீண்டெழுந்தாள். பின் சுரமஞ்சரியை பார்த்து, ஆமாம்! இங்கு சீவகன் தான் நின்று கொண்டிருக்கின்றார் என்று கூறினாள்.


🌟 உடனே சுரமஞ்சரி மிகுந்த வேகத்துடன் ஓடி சென்று சீவகனை அணைத்து கொண்டாள். அப்பொழுது அவ்விடமானது எந்தவொரு சப்தமும் இல்லாமல் அமைதியாக இருந்தது. அந்நேரத்தில் அவ்விருவருக்கும் அந்த அமைதி மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

🌟 பின் சீவகன் சுரமஞ்சரியிடம், தான் பிறகு வருவதாக கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து செல்ல முற்பட, இப்பொழுது தானே வந்தீர்கள்! அதற்குள் என்னைவிட்டு மீண்டும் பிரிந்து செல்ல போகின்றீர்களா? என்று கேட்டாள் சுரமஞ்சரி.

🌟 அதற்கு சீவகனோ சுரமஞ்சரியை பார்த்து, நாளை உன் தந்தையிடம் பேச வருகின்றேன் என்று கூறி புறப்பட்டு சென்றான்.

🌟 அங்கிருந்து சென்றவன் நேராக புத்திசேனன் இருக்கும் இடத்திற்கு சென்று, அவனை பார்த்ததும் எல்லாம் நன்றாக முடிந்தது! என்று கூறினான்.


Share this valuable content with your friends


Tags

05.08.2019 rasipalan in pdf format!! ருத்ராட்சம் அணிந்து கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? குடும்பத்தில் சகோதரர்கள் இருவரும் ஒரே நட்சத்திரமாக இருக்கலாமா? மரண யோகத்தில் குழந்தை பிறந்தால் என்ன பலன் மற்றும் பரிகாரம் என்ன? குரு திசை நடந்தால் என்ன பலன்? வளர்பிறை சஷ்டி ஆடிப் பெருக்கு அன்று புதுத் தாலி மாற்றுவது ஏன்? 21.11.2020 Rasipalan in PDF Format!! சனி ஓரையில் jaathagam நிறைய பசு மாடுகளை கனவில் கண்டால் என்ன பலன்? இயற்பகையார் கடவுளை வணங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? வெள்ளி கொடுப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பெண்கள் தன்னை விட குறைந்த வயதுடைய ஆண் மகனை திருமணம் செய்து கொள்ளலாமா? பாதகாதிபதி நீச்சமாக இருந்தால் என்ன பலன்? தேவர்களை கனவில் கண்டால் என்ன பலன்? மிதுன ராசியில் சுக்கிரன் இருந்தால் கிடைக்கும் பலன்கள் முருகன் மற்றும் விநாயகரை கனவில் கண்டால் என்ன பலன்? 16.09.2019 rasipalan in pdf format