No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி... சுரமஞ்சரியின் தந்தையிடம் பெண் கேட்ட சீவகன்..!!

Apr 03, 2023   Ramya   114    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சுரமஞ்சரியின் தந்தையிடம் பெண் கேட்ட சீவகன்..!!

🌟 என்னது! எல்லாம் நன்றாக முடிந்ததா! என்று அதிர்ச்சியாக கேட்டான் புத்திசேனன்.

🌟 ஆமாம்.. எங்களுக்குள் காந்தர்வ விவாகம் இனிதே முடிந்தது. அதை பார்க்க உனக்கு தான் வாய்ப்பு கிடைக்கவில்லை. இன்னும் ஏதாவது உனக்கு என்னிடத்தில் சந்தேகம் இருக்கிறதா? என்று வினவினான் சீவகன்.

🌟 அதற்கு புத்திசேனன், எனக்கு உன் மீது எந்தவொரு சந்தேகமும் இல்லை என்று கூறினான்.

🌟 என் மீது உனக்கு சந்தேகம் இல்லையென்றால், எதற்காக என்னிடம் இந்த விளையாட்டை தொடங்கினாய்? என்று கேட்டான் சீவகன்.

🌟 உடனே புத்திசேனன் இது விளையாட்டு அல்ல. ஒரு பெண்ணின் ஆசையும், விருப்பமும் கூட. ஒருநாள் சுரமஞ்சரி இருக்கும் தெருவின் பக்கம் நான் சென்று கொண்டிருக்கும் பொழுது அந்த தெருவில் ஆடவர்கள் செல்ல அனுமதி இல்லை என்று கூறினார்கள்.

🌟 என்ன? என்று விசாரித்த பொழுது தான் உண்மை நிலையை நான் தெளிவாக புரிந்து கொண்டேன். அந்த பெண்ணிற்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று அப்பொழுது இருந்தே நினைத்து கொண்டிருந்தேன். அதற்கான வாய்ப்பு இப்பொழுது தான் கிடைத்தது. அதை சரியான முறையில் பயன்படுத்தி அந்த பெண்ணிற்கு இருந்த கவலையை நீக்கினேன் என்றான்.

🌟 மேலும், சீவகா! உன்னை பற்றி எனக்கு நன்றாக தெரியும். நீ எப்படியும் அவளை கவர்ந்து விடுவாய், அவளும் உன்னை கவர்ந்து விடுவாள் என்பதையும் நான் அறிவேன். அப்படி இருக்கும் பொழுது இதில் யாருக்கும் எந்தவித விரயமும் இல்லை அல்லவா! என்று சிரித்து கொண்டே கூறினான் புத்திசேனன்.

🌟 உடனே சீவகன், அந்த பெண்ணிற்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் என்னிடம் இந்த விளையாட்டை தொடங்கி இருக்கின்றாயா? என்று கேட்டான்.

🌟 அதற்கு பதில் தரும் விதமாக புத்திசேனன், ஆமாம் சீவகா! விளையாட்டை ஆரம்பித்தது நீ அல்லவா! அப்படி இருக்கும் பொழுது, முடிப்பதும் நீயாக தானே இருக்க வேண்டும்! என்றான்.


🌟 ஒரு வழியாக அன்றைய பொழுது இனிதே நிறைவுற்று, மறுநாள் சுரமஞ்சரியின் தந்தை இருக்கும் வீட்டிற்கு சீவகனும், புத்திசேனனும் சென்றார்கள்.

🌟 இங்கு சுரமஞ்சரியின் தந்தையோ சீவகனை மிகவும் ஆச்சரியமாக பார்த்தார். அதாவது, இறந்து போய் விட்டான் என்று நினைத்தவன், இப்பொழுது உயிரோடு இருப்பதை பார்த்ததும் சீவகனை இமைக்காமல் ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தார்.

🌟 நீங்கள் எதற்கும் அச்சம் கொள்ள வேண்டாம்! நான் உண்மையிலேயே சீவகன் தான். எந்தவொரு ஆவியும் இல்லை என்று சீவகன் கூறினான்.

🌟 அவன் கூறியதும் இயல்பு நிலைக்கு திரும்பிய சுரமஞ்சரியின் தந்தை, இல்லை.. இல்லை.. நான் ஐயம் கொள்ளவில்லை. இருந்தாலும் ஒரு சந்தேகம் தான் என்றார்.

🌟 அதற்கு சீவகன், உங்களிடத்தில் இருப்பது ஐயம் இல்லையென்றால் ஆச்சரியமாக தான் இருக்கும். நான் இப்பொழுது உங்களின் முன்னால் இருப்பது கூட யாருக்கும் தெரியாது. ஏன்? நான் உயிருடன் இருப்பது இன்னும் என் வீட்டில் இருப்பவர்களுக்கு கூட தெரியாது. யாரும் அறியா வண்ணமாக தான் இப்பொழுது நான் உங்களிடத்தில் பேசி கொண்டிருக்கிறேன். எனக்கு உங்களின் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பீர்களா? என்று கேட்டான்.

🌟 திடீரென்று எதிர்பாராத இந்த கேள்வியை கேட்டதும் சுரமஞ்சரியின் தந்தை, என்ன சொல்வது? என்று புரியாமல் நின்று கொண்டிருந்தார். சீவகன் போன்று அனைத்திலும் சிறந்தவனுக்கு தன் பெண்ணை கொடுப்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சி தான் அடைவார்கள். ஆயினும் தன்னுடைய பெண்ணோ யாரையும் மணந்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து கொண்டிருக்கின்றாளே என்று மனதில் எண்ணி கொண்டே, நான் என்ன கூறுவது? என்று புரியவில்லை சீவகா! என் மகள், ஆடவர்கள் மீது விருப்பமில்லை என்று என்னிடத்தில் முன்பே கூறிவிட்டாள். அப்படி இருக்கும் பொழுது, நான் எப்படி வாக்கு கொடுப்பேன்? என்றார்.


Share this valuable content with your friends