No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சுரமஞ்சரியிடம் மாற்றத்தை ஏற்படுத்திய சீவகனின் பாடல்..!!

Apr 03, 2023   Ramya   150    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சுரமஞ்சரியிடம் மாற்றத்தை ஏற்படுத்திய சீவகனின் பாடல்..!!

🌟 ஒருவேளை நீங்கள் இளைஞனாக இருந்திருந்தால், உங்களால் இவ்வளவு தூரம் உள்ளே வந்திருக்க முடியாது வயதானவரே! என்று சுரமஞ்சரி சிரித்து கொண்டே கூறினாள்.

🌟 அந்த வயதானவர், இளைஞர்கள் உள்ளே வர முடியாத அளவில் என்ன தவறுகளை செய்து விட்டார்கள்? என்று கேட்க, சுரமஞ்சரியின் அருகில் இருந்த அவளுடைய தோழி, அவர்கள் எந்தவிதமான தவறுகளையும் செய்யவில்லை. ஒருவன் செய்த தவறினால் தான் அனைவரும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்றாள்.

🌟 அந்த வயதானவர், யார் அவன்? என்று கேட்க, அவன் பெயர் சீவகன் என்றாள் சுரமஞ்சரியின் தோழி. உடனே சுரமஞ்சரி அவளை அந்த நொடியிலேயே எரித்து விடுவது போல பார்த்தாள்.

🌟 அப்பொழுது, அட சீவகனா! அவன் தான் ஏற்கனவே இறந்து விட்டானே! இறந்தவனுக்காக இருக்கின்றவர்களை கெடுப்பது என்ன தர்மம்? மேலும் ஆடவர்களை வெறுத்து ஒதுக்கக்கூடிய தேவிக்கு சீவகன் மேல் மட்டும் ஏதோ தனிப்பட்ட ஆசை இருக்கின்றதோ! என்றார் அந்த வயதானவர்.

🌟 பின் சுரமஞ்சரி, பேச்சை குறைத்துவிட்டு பாட தொடங்குகின்றீர்களா! என்றாள்.

🌟 சரி என்று வயதான தோற்றத்திலிருந்த சீவகன் மீண்டும் பாட துவங்கினான். அந்த பாடலில் மறைமுகமாக தன்னை புகழ்ந்தும், தன்னை அடைவதற்கான வழியை குறித்தும் பாடினான்.

🌟 அந்த பாடலின் வரிகள் சுரமஞ்சரிக்கு தெளிவாக புரிந்தது. ஆனால் அங்கிருந்த மற்றவர்களுக்கு அதன் பொருள் என்னவென்றே புரியவில்லை.


🌟 பாடலை பாடி முடித்த வயதானவர் அவ்விடத்தில் இருந்து புறப்பட்டு சென்றார். அப்பொழுது சுரமஞ்சரி அந்த வயதானவரிடம் நீங்கள் கூறியபடி செய்தால் யாவும் நடைபெறுமா? என்று வினவினாள்.

🌟 நம்பிக்கையுடன் வழிபாடு செய்! நீ எண்ணியதை அந்த கடவுள் நிறைவேற்றி வைப்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை என்று கூறினார் அந்த வயதானவர்.

🌟 பின் சுரமஞ்சரி அடுத்த நாள் அதிகாலையில் கோயிலுக்கு செல்வதற்காக தயாராகிவிட்டு, உறங்கி கொண்டிருந்த தன்னுடைய தோழியை எழுப்பி, விரைவாக கிளம்பு நாம் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கூறினாள்.

🌟 உறக்கத்தில் இருந்து எழுந்த அவளுடைய தோழி, நீ இந்த வீட்டைவிட்டு வெளியில் சென்றதே இல்லையே! அப்படி இருக்கும் பொழுது இன்றைக்கு என்னவாயிற்று? என்று கேட்டாள்.

🌟 அதற்கென ஒரு காலம் வந்தால் யாவும் தானாக நடைபெறும் என்றாள் சுரமஞ்சரி. பின், பேசி கொண்டே இருந்தால் காலதாமதமாகிவிடும். ஆகையால் உடனே கிளம்பு என்று கூறி தன்னுடைய தோழியையும் அழைத்து கொண்டு சென்றாள்.


Share this valuable content with your friends