No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - தனது நண்பர்களுடன் பயணம் மேற்கொண்ட சீவகன்..!!

Mar 31, 2023   Ramya   132    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... தனது நண்பர்களுடன் பயணம் மேற்கொண்ட சீவகன்..!!

🌟 திடீரென்று தன்னுடைய மன்னவன் இப்படி கூறியதும் எழுந்து நின்றவள் சீவகனை பார்த்ததும் ஆச்சரியமடைந்தாள். ஏனெனில் புறப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ததோடு மட்டுமல்லாமல் கையில் வில்லும், அம்பும் ஏந்திய வண்ணமாக நின்று கொண்டிருந்தான்.

🌟 இதை பார்த்து ஆச்சரியம் அடைந்த விமலை, என்ன அத்தான்? என்று மேலும் அவள் பேசுவதற்கு முன்பாகவே சீவகன்...

🌟 விமலை நேற்று இரவே உன்னிடம் கூற வேண்டும் என்று எண்ணினேன். ஆனால் நீ கூறிய உனது வலிகள் நிறைந்த அந்த வார்த்தைகள் தான் என்னை பற்றி உன்னிடம் கூற மறுத்து விட்டன. அதுமட்டுமல்லாமல் இரவோடு இரவாக சென்று விடலாம் என்று எண்ணியவனையும் உன்னிடத்தில் சொல்லிவிட்டு செல்ல வேண்டும் என்று எண்ண வைத்தது.

🌟 நான் ஒரு பெரிய கடமையுடன் தான் இந்த நாட்டை சுற்றி கொண்டிருக்கின்றேன். நான் இங்கு வருவேன் என்றோ அல்லது உன்னை திருமணம் செய்வேன் என்றோ சற்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த திருமணம் எனது பயணத்திற்கும், இலக்கிற்கும் எந்த விதத்திலும் தடையாக இருந்து விடக்கூடாது. அதுமட்டுமல்லாமல் என்னை என் வழியில் செல்ல விடு.

🌟 கூடிய விரைவில் மீண்டும் உன்னை வந்து அழைத்து சென்று, நாம் இருவரும் மகிழ்வுடன் இருப்போம் என்று கூறினான். இதற்கும், நீ பிறந்த நேரத்திற்கும் எந்தவித பொறுப்பும் இல்லை. மேலும் உன்னை பார்த்த பின்பு தான் எனது கடமை எனக்கு தெளிவாக புரிந்தது. அதை விரைவாக முடித்துவிட்டு வருகிறேன். நீ தைரியமாக இரு! என்று கூறிவிட்டு சீவகன் தனது படை வீரர்களுடன் இணைந்து அங்கிருந்து சென்றான்.


🌟 சீவகன் கூறிய வார்த்தைகளை கேட்ட விமலைக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், கண்ணீரானது விழியை நிரப்பினாலும், அதை வெளிப்படுத்தாது அவன் வழியில் அவனை செல்ல விட்டாள். அவன் சென்ற பின்பு அவனை பார்த்த வண்ணமாகவே நின்று கொண்டிருந்தாள்.

🌟 சீவகன் விமலையிடம் விடைபெற்று வெகு தூரம் சென்றிருந்தான். அப்பொழுது சீவகனின் நண்பர்கள் சிலர் அங்கே வந்தனர். அவர்களிடம் விமலையுடன் நிகழ்ந்த திருமணத்தை பற்றி கூறினான். பின் நண்பர்களுடன் இணைந்து பயணத்தை மேற்கொண்டான். அப்பொழுது விமலையின் வீடு இருக்கும் திசையை திரும்பி திரும்பி பார்த்தவாறே சென்றான்.

🌟 இதையெல்லாம் கவனித்த அவனுடைய நண்பர்கள் சீவகனை பார்த்து சிரித்து கொண்டே சென்றார்கள்.

🌟 அதில் புத்திசேனன் மட்டும், இப்பொழுது திருமணம் செய்து கொண்டாயே உனது புதிய மனைவியின் பெயர் என்ன? என்று கேட்டான்.

🌟 சீவகன், என் மனைவியின் பெயர் விமலை. அதில் என்ன உனக்கு சிரிப்பு இருக்கின்றது? ஏன் என்னை பார்த்தால் உனக்கு பொறாமையாக இருக்கின்றதா? என்று சிரித்துக்கொண்டே கேட்டான்.

🌟 இதில் எனக்கு என்ன பொறாமை இருக்கின்றது? ஒரு திருமணம் செய்தவர்களையும் பார்த்திருக்கின்றேன். பல திருமணங்கள் செய்தவர்களையும் பார்த்திருக்கின்றேன். அந்த பல திருமணங்கள் செய்தவர்களில் என் நண்பனும் ஒருவனாக இருக்கின்றான் என்று கூறினான் புத்திசேனன்.

🌟 நண்பனுடைய கூற்று உண்மையாக இருந்தாலும் அது சீவகனுக்கு ஒருவிதமான கூச்சமாகவே இருந்தது. இருப்பினும் அதை வெளிப்படுத்தாமல், இதில் உமக்கென்ன? என்று கேட்டான்.


🌟 இது வரையில் நீ பல பெண்களை திருமணம் செய்திருக்கின்றாய். அதாவது ஒரு பெண்ணை யாழிசை போட்டியில் வென்றும், இன்னொரு பெண்ணை யானை மிதியிலிருந்து காப்பாற்றியும், மற்றொரு பெண்ணை நாட்டின் நலனுக்காகவும் என உனது திருமணங்கள் அனைத்தும் மற்றவர்களுக்காக மட்டுமே நடைபெற்றது. மேலும் உன்னுடைய திருமணங்கள் அனைத்தையும் பெண்ணை பெற்றவர்கள் தான் முடிவு செய்தார்கள். உனக்கு அவர்கள் வாய்ப்பினை கொடுக்கவே இல்லை. அது தானே உண்மை என்றான் புத்திசேனன்.

🌟 ஆமாம் அது தான் உண்மை. இதில் இப்பொழுது உமக்கென்ன பிரச்சனை? என்று மீண்டும் கேட்டான் சீவகன்.


Share this valuable content with your friends