No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகன் மற்றும் விமலையின் திருமண வாழ்க்கை..!!

Mar 31, 2023   Ramya   134    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகன் மற்றும் விமலையின் திருமண வாழ்க்கை..!!

🌟 பொழுது சாய்ந்து இரவு பிறக்க சீவகனும், விமலையும் ஓர் அறையில் தனித்திருக்கப்பட்டனர். சீவகனோ, என்ன பேசுவது? என்று புரியாமல் அமைதியாக அமர்ந்து கொண்டிருக்க, விமலை சீவகனின் கால் பாதங்களை தொட்டு வணங்கினாள்.

🌟 அப்பொழுது சீவகன் விமலையை தூக்கிவிட்டு, நான் உன்னிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று கூறி முடிப்பதற்குள்... விமலை, நான் உங்களிடம் ஒரு விஷயத்தை கூற வேண்டும் என்று கூறினாள்.

🌟 என்ன கூற விரும்புகிறாய் விமலை? அதை தெளிவாக கூறு என்றான் சீவகன்.

🌟 என்னிடத்தில் இருந்துவந்த நீண்ட நாள் கவலைகளை முழுமையாக அகற்றியவர் நீங்கள் தான். நீங்கள் சிறு உதவியே செய்திருந்தாலும் அது எனக்கு மிக பெரியதாக இருக்கின்றது. ஏனென்றால் நான் பிறந்தது முதல் என் உறவினர்களும், அக்கம்-பக்கம் இருப்பவர்களும் என்னை எதற்கும் அதிர்ஷ்டம் இல்லாதவள் என்றும், ராசி இல்லாதவள் என்றும் கூறுவார்கள்.

🌟 என் சிறு வயதில் அதன் விவரம் தெரியாத பொழுது அவற்றின் வேதனைகள் எனக்கு பெரியதாக தெரியவில்லை. ஆனால் நான் வளர வளர அந்த வார்த்தைகளின் வடுக்களும், வலிகளும் என்னை உயிரோடு இருக்கும் ஒரு பிணமாக மாற்றியது என்றே கூறலாம்.

🌟 இதற்கு ஒரு காலம் வரும் என்று ஒரு ஜோதிடர் கூறியதாக என் தந்தை கூறினார். நீங்கள் வந்து எங்கள் வீட்டு திண்ணையில் அமர்ந்த பொழுது அந்த காலம் வந்துவிட்டது என்பதை நான் தெளிவாக உணர்ந்து கொண்டேன்.

🌟 ஒருவேளை நீங்கள் அந்த ஜோதிடர் கூறிய வாலிபன் இல்லையென்றாலும் இனி இருக்கக்கூடிய வாழ்க்கை முழுவதும் உங்களுடன் தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் காலம் அனைத்தையும் கணித்து விட்டது போல எல்லாம் சுகமாகவே முடிந்தது என்றாள்.

🌟 விமலையின் மனவலியை கேட்ட சீவகனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. ஏனென்றால் அவள் கூறிய வார்த்தைகளில் இருந்த வலிகளை அவன் உணர்ந்திருந்தான். ஆகையால் அவளிடம், தான் கூற வேண்டிய விஷயங்களை பிறகு கூறி கொள்ளலாம் என்று எண்ணி கொண்டு, விமலையிடம் எல்லாம் சரியாகிவிடும் என்று கூறினான்.

🌟 திருமண ஏற்பாடுகளில் உண்டான அலைச்சல்களால் விமலை படுத்ததும் உறங்கி விட்டாள். ஆனால் சீவகனோ தூக்கமின்றி அடுத்து தனக்கான கடமைகள் என்ன இருக்கின்றது? என்றும், இதனால் அது தடைபட்டு விடுமோ? என்றும் எண்ணி கொண்டிருந்தான்.

🌟 இரவோடு இரவாக சென்று விடலாமா என்று கூட எண்ணினான். ஆனால் விமலையின் நிலை இன்னும் கேள்விக்குறியாகி விடுமே என்று எண்ணி வருத்தம் அடைந்தான்.


🌟 பின்பு ஒரு முடிவாக அறையில் இருந்து வெளிவந்த சீவகன் தன் படை வீரர்களிடம், நாளை நாம் இங்கிருந்து புறப்பட போகின்றோம். இப்பொழுதில் இருந்தே புறப்படுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொள்ளுங்கள் என்று கூறினான்.

🌟 சிலர் சீவகனிடம் ஆலோசனைகள் கூறினாலும், அவன் அதை ஏற்று கொள்ளாமல் நமக்கான பணிகள் நிறைய இருக்கின்றது. முதலில் அதை முடிப்போம்! என்று கூறினான். அதற்கு மேலும் அவர்களால் எதுவும் பேச முடியவில்லை.

🌟 பொழுது விடிந்ததும் உறக்கத்திலிருந்த விமலையை எழுப்பினான் சீவகன். ஆனால் எழுந்திருக்க மனம் இல்லாமல் சோம்பலுடன் படுத்திருந்த விமலையோ, சிறிது நேரம் என்று கூற, சிறு நொடி கூட எனக்கு அவகாசம் இல்லை அன்பே! என்றான் சீவகன்.


Share this valuable content with your friends