No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




அன்னாபிஷேக தரிசனம்!!

Oct 23, 2018   Ananthi   540    ஆன்மிகம் 

🌟 உலகெங்கும் சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு அன்னப்பருக்கையிலும் சிவரூபம் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

🌟 உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த விழா நடக்கிறது.

🌟 தஞ்சாவூர் பெரியகோவில் பெருவுடையாருக்கு ஆயிரம் டன் சாதத்தால் அலங்கரித்து அந்த உணவை பிரசாதமாக கொடுப்பார்கள்.

🌟 தமிழகத்தின் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் அன்னாபிஷேகமும் ஒன்று.

யார் யாருக்கு அன்னதோஷம் ஏற்படும்?

🌟 பசியால் வாடும் பச்சிளம் பாலகர்களுக்கு சாப்பிட எதுவும் கொடுக்காதவர்களையும், வயதானவர்களையும், கர்ப்பிணிகளையும் சாப்பிடவிடாமல் தடுப்பவர்களுக்கு அன்னதோஷம் பிடிக்கும். பந்தியில் சாப்பிட உட்கார்ந்தவர்களை எழுப்புவதும் பாவமாகும்.

🌟 தான் உண்டது போக ஏராளமான உணவு கைவசம் இருந்தும், அதை யாருக்கும் பகிர்ந்து அளிக்காமல் குப்பையில் வீசுபவர்களையும், உணவுகளை வீணாக்குபவர்களையும் அன்னதோஷம் ஏற்படும்.

🌟 பெற்றவர்களுக்கு உணவு கொடுக்காதவர்களையும், பித்ருக்களுக்கு ஒழுங்காகப் பிண்டம் அளிக்காதவர்களையும் அன்னதோஷம் பிடிக்கும்.

🌟 அன்னதோஷத்தாலும், அன்ன துவேஷத்தலும் பாதிக்கப்பட்டவர்கள் ஐப்பசி பௌர்ணமி நாளில் அன்னாபிஷேக கோலத்தில் சிவபெருமானை தரிசனம் செய்வது மிகவும் நல்லது.

அன்னாபிஷேக தரிசனம் :

🌟 அன்னாபிஷேக நாளில் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பது மற்றும் அன்னாபிஷேகத்திற்கு தேவையான சந்திரனின் காரகம் பெற்ற அரிசி (பச்சரிசி) வாங்கி கோவிலில் கொடுப்பது மற்றும் குறைந்தது ஐந்து பேருக்கு அன்னதானம் செய்வது போன்றவற்றை செய்யலாம்.

🌟 ஸ்ரீ அன்னபூரணியை வணங்கிவர உணவு வீணாகுவது குறையும்.

மேலும், உணவு தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

🌟 இத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேக வழிபாட்டில் கலந்துக்கொண்டு இறைவனின் பரிபூரண அருளைப் பெற்று உங்களது குறைகளை நீக்கி நலமுடன் வாழுங்கள்.


Share this valuable content with your friends


Tags

ஜோஸ் டிசோஸா சரமாகூ நந்திதேவர் திருமண பத்திரிக்கை கொண்டு வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 3ல் ராகுவும் jothider question and asnwer 17.10.2019 Rasipalan in pdf format!! flower plant கோவில் கோபுரத்தில் சிவன் உருவம் தெரிவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 18.05.2019 Rasipalan in pdf format!! வாஷிங்டன் டி.சி விநாயகர் சிலைக்கு சூடம் காட்டுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பாழடைந்த கோவிலை அடிக்கடி கனவில் கண்டால் என்ன பலன்? உறவுகள் பிரிந்துப்போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? விருச்சிக ராசி. ஏழரை சனி முடிந்துவிட்டதா? cracker ரிஷப லக்னம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? 16.04.2019 Rasipalan in pdf format!! பொருட்களை கைமாற்றாக கொடுக்கலாமா? குளத்தில் பாம்பு மனிதனை சுற்றிக்கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்? jothdier question and answer