No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சோமவார பிரதோஷம் !!

Oct 23, 2018   Ananthi   499    ஆன்மிகம் 

🌟 சிவனுக்குரிய வழிபாடுகளில் சிவராத்திரியும், பிரதோஷமும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. பிரதோஷம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இப்பிரதோஷ காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.

🌟 பிரதோஷத்தில் சோமவாரம் (திங்கள்) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவபெருமானுக்கு உகந்த நாள், சோமவாரம் ஆகும். திங்கட்கிழமையைத் தான் சோமவாரம் என்று அழைப்பார்கள். சோம என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும். கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சந்திரன், தன் நோய் குணமாக வேண்டி சிவபெருமானை நினைத்து தவமிருந்தார்.

🌟 சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், சந்திரனின் நோயை நீக்கியதுடன், நவகிரகங்களில் ஒருவராக திகழும் வாய்ப்பையும் வழங்கினார். அப்போது சந்திரன், தனது வாரத்தில், மக்கள் விரதமிருந்து வழிபட்டால் தாங்கள் நல்ல பலனை வழங்க வேண்டும் என்று பரமேஸ்வரனை வேண்டிக்கொண்டார். அதன்படி தோன்றியதே சோமவார விரதமாகும்.

🌟 மேலும், இந்த பிரதோஷ நாளில் சந்திர திசை நடப்பவர்களும், சந்திரனை லக்னாதிபதியாக கொண்டவர்களும் கோவிலிற்கு சென்று பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் மன நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும்.

🌟 பிரதோஷ வேளை என்று சொல்லப்படும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான அந்த நேரத்தில் சிவபெருமானுக்கும், நந்திதேவருக்கும் விசேஷ அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள், அற்புதமான ஆராதனைகள் நடைபெறும். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். நல்ல எண்ணங்கள் மேலோங்கும்.

🌟 சோமவார பிரதோஷமான இன்று சிவன் கோவில்களில் அர்ச்சனைக்கு வில்வம் அளித்தும், நந்திதேவருக்கு செவ்வரளியும், அருகம்புல் மாலையும் வழங்கி வழிபட்டால் நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

🌟 எலுமிச்சை சாதமோ, தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ, வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு வழங்கினால் வாழ்க்கை வளமாகும்.


Share this valuable content with your friends


Tags

இந்த வாரம் எந்த ராசிக்காரர்களுக்கு யோகத்தை தரும்? அறியாமல் செய்த தவறுக்கு பரிகாரம் என்ன? புனர்பூ தோஷம் என்றால் என்ன? 2023 விருச்சக ராசி பலன்கள்.! short hand பறவைகள் Horoscope in pdf format அரச குமாரர் உலக வலசை போதல் தினம் பறவைகளின் முட்டைகளை கையில் வைத்திருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? விருச்சக ராசிக்காரர்கள் அணிய வேண்டிய ராசிக்கல் எது? daily rasipalan 23.01.2020 in pdf format பல்லி தலை மேலே ஏறி சென்றால் என்ன பலன்? மாமனிடமிருந்து பால் வாங்குவது போல் கனவு கண்டால் என்ன பலன்? பணம் திருடு போவது போல் கனவு கண்டால் என்ன பலன்? 22.08.2020 rasipalan in pdf format பயணங்கள் கைகூடும் தொலைந்த பொருளை தேடி கண்டுபிடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? வார ராசிபலன்கள் (20.12.2021 - 26.12.2021) PDF வடிவில்...!! தங்கம் வாங்க உகந்த நாட்கள்