No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - பிரிந்து சென்ற தாயை சந்தித்த சீவகன்..!!

Mar 29, 2023   Ramya   138    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... பிரிந்து சென்ற தாயை சந்தித்த சீவகன்..!!

🌟 நான் சச்சந்தனின் புதல்வன் என்பதை நம்முடைய குருநாதரான அச்சணந்தி அடிகள் தான், நம்முடைய பயிற்சி காலம் முடியும் தருணத்தில் என்னிடம் கூறினார். அவர் கூறியதோடு மட்டுமல்லாமல் ஒரு ஆண்டு காலத்திற்கு கட்டியங்காரனை பழி தீர்த்து கொள்வதற்காக நீ எந்தவொரு முயற்சியையும் மேற்கொள்ளக்கூடாது என்று வாக்குறுதியையும் வாங்கி கொண்டார்.

🌟 ஏன் உன்னிடம் அப்படியொரு வாக்குறுதியை வாங்கினார்? நமது குருநாதர். உன்னுடைய திறமையை பற்றி நன்கு அறிந்தவர் ஆயிற்றே என்றான் நந்தட்டன்.

🌟 அவர் என்னிடம் வாக்குறுதி பெற்ற பொழுது அதற்கான அர்த்தம் என்னவென்று எனக்கு புரியவில்லை. ஆனால் சிறையில் இருந்து தப்பித்து பல நாடுகளுக்கு நான் பயணம் சென்ற பின்பு தான் அவர் பெற்று கொண்ட வாக்குறுதியின் உண்மையான அர்த்தத்தை தெளிவாக புரிந்து கொண்டேன் என்றான் சீவகன்.

🌟 அப்படி என்ன புரிதலை நீ பெற்றுக் கொண்டாய்? என்று கேட்டான் பதுமுகன்.

🌟 நான் பயணம் மேற்கொண்ட ஒவ்வொரு நாட்டிலும் இருக்கக்கூடிய அரசர்கள் அனைவரும் எனக்கு இப்பொழுது உறவினர்கள். எனக்கு ஏதாவது ஒரு இன்னல்களோ அல்லது ஒரு போர் வருகிறது என்றாலோ அவர்கள் அனைவரும் என் பக்கம் துணை நிற்பார்கள். அதனால் நம்முடைய படை பலமும் அதிகரிக்கும் அல்லவா! என்றான் சீவகன்.

🌟 அவ்வாறு நண்பர்கள் அனைவரும் பேசிக்கொண்டே சென்றபோது ஒரு பொய்கையின் அருகில் வந்தார்கள். குதிரைகள் நீண்ட தூரம் பயணம் செய்ததன் காரணமாக அதை தண்ணீர் குடிப்பதற்காக அவிழ்த்து விட்டார்கள்.

🌟 அப்பொழுது இன்னும் எவ்வளவு தூரம் தான் செல்ல வேண்டும்? அருகில் வந்து விட்டோமா? அல்லது இன்னும் செல்ல வேண்டுமா? என்று கேட்டான் சீவகன்.

🌟 இன்னும் சிறிது தூரம் தான் இருக்கின்றது. இரண்டு நாழிகை பயணம் செய்தால் தண்டகாரணியம் வந்துவிடும் என்றான் பதுமுகன்.

🌟 சிறிது நேரத்தில் குதிரைகள் தயாராகியதும் சீவகனும், அவனுடைய நண்பர்களும் மீண்டும் பயணத்தை தொடர்ந்து, ஒரு வழியாக தண்டகாரணியத்தை அடைந்தார்கள்.

🌟 தன்னுடைய தாய் இருக்கும் ஆசிரமத்தை அடைந்ததும் சீவகன் வேகம் வேகமாக தனது தாயை பார்ப்பதற்கு முன்னோக்கி சென்றான். அப்பொழுது பதுமுகன் அவனை நிறுத்தி இவ்வளவு நாட்கள் பொறுத்து கொண்டாய் இன்னும் சிறிது நேரம் மட்டும் பொறுத்து கொள்! நான் சென்று உனது தாயிடம் எடுத்து கூறி அவர்களை இங்கு அழைத்து வருகின்றேன் என்று கூறினான்.

🌟 பதுமுகன் ஆசிரமத்தினுள் நுழைந்து மரமனையில் அமர்ந்திருக்கும் சீவகனின் தாயை கண்டான். விசையை, பதுமுகனை கண்டதும் தன்னை பார்ப்பதற்கு என் மகன் வந்து விட்டானா? எங்கே என்னுடைய மகன்? என்று கேட்டார்.

🌟 அதற்கு பதுமுகன், ஆசிரமத்திற்கு வெளியே உங்களை காண்பதற்காக சீவகன் காத்து கொண்டிருக்கின்றான் என்று கூறியதும், விசையை சீவகனை காண்பதற்காக வேகமாக விரைந்து சென்றார்.

🌟 இறுதியாக தாய், மகன் இருவரும் பார்த்து கொள்ளக்கூடிய அந்த பொன்னான காலமும் வந்தது. அப்பொழுது இருவரும் எதை பற்றியும் பேசி கொள்ளாமல், அவர்களையும் அறியாமல் விழிகளிலிருந்து நீர் வழிய ஒருவரையொருவர் பார்த்து கொண்டிருந்தனர்.


Share this valuable content with your friends