No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - அதிர்ச்சி அடைந்த சீவகனின் நண்பர்கள்..!!

Mar 29, 2023   Ramya   117    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... அதிர்ச்சி அடைந்த சீவகனின் நண்பர்கள்..!!

🌟 சீவகன் காந்தருவதத்தை எழுதிய ஓலையின் உண்மை நிலைகளை புரிந்து கொண்டு இனியும் ஓய்வெடுத்தல் கூடாது, செயல்படுத்துதலே அவசியம் என்பதையும் புரிந்து கொண்டான்.

🌟 மேலும், பலவிதமான இன்னல்களுக்கு இடையில் தன்னை ஈன்றெடுத்த தாயை, காண்பதற்கான வாய்ப்பு நீண்ட காலங்களுக்கு பிறகு இப்பொழுது தான் கிடைத்திருக்கின்றது என்பதை எண்ணி கொண்டே மிகுந்த எதிர்பார்ப்புகளுடன், நண்பர்களுடன் ஒன்றிணைந்து தனது பயணத்தை மிகுந்த வேகத்துடன் மேற்கொண்டான் சீவகன்.

🌟 அப்பொழுது பதுமுகன் சீவகனிடம் போருக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். சிறிது காலம் தாமதித்தாலும் முடிவுகள் மாறிவிடும் அல்லவா! என்றான்.

🌟 அதற்கு குதிரையை இயக்கி கொண்டிருந்த சீவகன், இந்த போரை நிறுத்துவதற்கு எந்தவொரு வாய்ப்பும் ஏற்படாதா? அல்லது இதை தவிர்க்க முடியாதா? என்று கேட்டான்.


🌟 உடனே பதுமுகன், போரை நிறுத்துவதற்கான வாய்ப்போ அல்லது தவிர்ப்பதற்கான சூழலோ இன்று வரை உனக்கு ஏற்படவில்லை. நிகழ்ந்து கொண்டிருக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளும் உன்னை போரினை நோக்கியே இழுத்து சென்று கொண்டிருக்கின்றன. உன்னை ஈன்றெடுத்த தாயை இவ்வளவு காலம் பிரிந்திருந்தாய்... அதுமட்டுமல்லாமல் உன் பிறப்பிற்கு ஆதாரமாக இருந்த உன் தந்தையை நயவஞ்சகமாக கொன்று உனக்கு கிடைக்க இருந்த உரிமைகள் அனைத்தையும் தட்டி பறித்து கொண்டான் அந்த கட்டியங்காரன்.

🌟 மேலும் மக்களுடைய எந்தவொரு நலனையும் கருத்தில் கொள்ளாமல் தன்னுடைய விருப்பத்திற்கு நாட்டை ஆட்சி செய்து, நாட்டின் செல்வத்தையும் அழித்து கொண்டு வருகின்றான். இப்படி இருக்கக்கூடிய அரக்கனை நீ அழிப்பது உனக்காக மட்டுமல்ல, இந்த மக்களுக்காக செய்யக்கூடிய தர்ம செயலும் கூட என்றான்.

🌟 பதுமுகன் கூறிய கூற்றிலும் உண்மை இருக்கிறது. நாம் போருக்கு உண்டான திட்டங்களையும், படைக்கு தேவையான வீரர்களையும் சேர்க்க வேண்டும். மேலும் தர்ம வழியில் நடக்கக்கூடிய மன்னர்களை நம் பக்கம் இணைக்க வேண்டும் என்றான் நந்தட்டன்.

🌟 அப்பொழுது தேவதத்தன், சீவகனிடம் நீ எப்படி மதனனின் சிறையிலிருந்து தப்பித்தாய்? எங்களுடைய உதவிகள் எதுவும் வேண்டாம் என்று ஏன் கூறினாய்? அதற்கான காரணத்தை இப்பொழுது வரை சொல்லவில்லையே! அதுமட்டுமல்லாமல் பயணம் மேற்கொண்ட ஒவ்வொரு ஊரிலும் உனக்கு திருவிழா போன்று மணவிழா நடந்தது. அதை பற்றியும் நீ எங்களிடம் இதுவரை சொல்லவில்லையே! என்று கேட்டான்.

🌟 ஆமாம், நீ கேள்விகளை மட்டுமே கேட்டு கொண்டிருக்கின்றாய். சீவகன் பேசுவதற்கான தருணத்தை நீ கொடுத்தால் தானே! அவன் என்ன நடந்தது? என்று சொல்வான் என்றான் புத்திசேனன்.

🌟 இதை மட்டும் நான் மறைக்கவில்லை. இதைவிட முக்கியமான ஒரு விஷயத்தையும் உங்களிடம் இருந்து நான் இவ்வளவு நாட்களாக மறைத்து விட்டேன் என்றான் சீவகன்.

🌟 உடனே அவனது நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அப்படி என்ன முக்கியமான விஷயத்தை எங்களிடம் மறைத்தாய்? என்று கேட்டனர்.

🌟 அதற்கு சீவகன், நான் சச்சந்தனின் ஒரே மகன் என்பதை நான் முன்னரே அறிவேன் என்றான்.

🌟 இதை கேட்டதும் சீவகனுடைய நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இந்த தகவலானது உனக்கு முன்னரே தெரியும் என்றால் ஏன் இவ்வளவு நாட்கள் எதையும் செய்யாமல் அமைதியாக இருந்தாய்? உனது குடும்பத்தை சீர்குலைத்த கட்டியங்காரனை இந்நேரம் நீ வீழ்த்தியிருக்க வேண்டும் அல்லவா! அதுமட்டுமல்லாமல் நீ தான் சச்சந்தன் அவர்களின் புதல்வன் என்று உனக்கு யார் கூறினார்கள்? என்று கேட்டனர்.


Share this valuable content with your friends