No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - பாசத்தை பரிமாறிக் கொண்ட சீவகனும் அவனது தாயும்..!!

Mar 29, 2023   Ramya   148    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... பாசத்தை பரிமாறிக் கொண்ட சீவகனும் அவனது தாயும்..!!

🌟 முதலில் நிகழ் உலகிற்கு வந்த விசையை, தனது மகனை இறுக அணைத்து கொண்டு, என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லையே! இத்தனை நாட்களாக உன்னை காண முடியாமலும், கொஞ்ச முடியாமலும் நான் எவ்வளவு தவித்து கொண்டிருந்தேன் தெரியுமா! பெற்ற மகனையே பார்க்க முடியாத நான் எவ்வளவு பெரிய பாவி தெரியுமா! என்று கூறினார்.

🌟 அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் அம்மா! நீங்கள் பாவி அல்ல... நானே பாவியாவேன். நான் பிறந்ததும் எனது தந்தையை கொன்றேன். என்னால் நீங்களும் எவ்வளவு துன்பத்தை அனுபவித்து இருக்கின்றீர்கள். நான் எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டசாலி என்றான் சீவகன்.

நீ துரதிர்ஷ்டசாலி அல்ல... உன்னால் தான் இன்று வரை நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். உன்னை காணும் காலம் வரும் என்ற நம்பிக்கையில் தான் என்னுடைய உயிரும் இந்த உடலில் உறைந்திருக்கின்றது என்றார் விசையை.

🌟 பின், இருவரும் தங்கள் மனதில் இருந்த எண்ணங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டார்கள். அங்கிருந்த சீவகனின் நண்பர்கள் அனைவரும் அவர்களையே மறந்து நின்று கொண்டிருந்தார்கள் இவர்களின் அன்பினால்...

🌟 உடனே விசையை அங்கிருந்த சீவகனின் நண்பர்களை பார்த்து, எனது மகனை அழைத்து வந்ததற்கு நன்றி! என்று கூறிவிட்டு அவர்கள் அனைவரையும், தான் இருக்கும் ஆசிரமத்திற்கு அழைத்து சென்றார்.


🌟 சில நாட்கள் தாயும், மகனும் ஒன்றாக பொழுதுகளை செலவு செய்து கொண்டிருந்தார்கள். நீண்ட நாட்கள் பிரிந்து இருந்தவர்களுக்கு அந்த நாட்கள் மிகவும் முக்கியமானதாக தென்பட்டது.

🌟 இவ்வாறு சென்று கொண்டிருந்த நாட்களில் ஒருநாள் சீவகன் தனது தாயிடம், கட்டியங்காரனை நாம் வீழ்த்த வேண்டுமா? என்று கேட்டான்.

🌟 இதை கேட்டதும் விசையை, ஏன் பயந்து விட்டாயா? நீ அவ்வளவு கோழையாக வளர்ந்து விட்டாயா? என்று கேட்டார்.

🌟 அப்படி எதுவுமில்லை அம்மா! மேலும், கட்டியங்காரனிடம் இருக்கக்கூடிய படை பலத்தை கண்டு நான் எள்ளளவும் பயம் கொள்ளவில்லை. ஆனால் உயிர்களிடத்தில் அன்பு கொள்ள வேண்டும் என்று அருகர் சுவாமி கூறியிருக்கின்றார் அல்லவா! அதனால் தான் சிந்தித்தேன் என்றான் சீவகன்.

🌟 சீவகா நீ கூறுவதும் எனக்கு புரிகின்றது. ஆனால் அரசனுக்கென்று சில குணங்களும், கடமைகளும் இருக்கின்றன. தீயவர்களுக்கு நாட்டு மக்கள் உதவலாம். ஆனால் அரசன் அவர்களுக்கு உதவி செய்யவும் கூடாது, மன்னிக்கவும் கூடாது. நாட்டு மக்களின் நலனையும், ஒற்றுமையையும் பாதுகாக்க வேண்டுமே தவிர, அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றார் விசையை.

🌟 அப்பொழுது தான் சீவகன், தனது தாய் கூறிய கூற்றுக்களில் இருக்கக்கூடிய பொருளையும், அர்த்தத்தையும் புரிந்து கொண்டான்.


Share this valuable content with your friends