No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - வனத்தில் தனது நண்பர்களை கண்டு மகிழ்ச்சியடைந்த சீவகன்..!!

Mar 28, 2023   Ramya   186    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... வனத்தில் தனது நண்பர்களை கண்டு மகிழ்ச்சியடைந்த சீவகன்..!!

🌟 வெள்ளை கொடியை ஆட்டிய வண்ணமாக பதுமுகனும், தேவதத்தனும் சிரித்து கொண்டே காட்டிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்கள். அவர்களின் பின்னால் கவர்ந்து வந்த பசுமாடுகளும், சிறு வீரர்களும் நின்று கொண்டிருந்தார்கள்.

🌟 நீண்ட நாள் கழித்து நண்பர்களை பார்த்த வாமனன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். உடனே வாமனன் முன்னேறி சென்று தனது நண்பர்கள் அனைவரையும் இறுகக் கட்டி அணைத்து கொண்டான். பின் நகரத்திற்குள் அழைத்து சென்றான்.

🌟 நந்தட்டனிடம் வாமனன், பார்த்தாயா இவர்களை! என்னை நாட்டின் வெளியே தனித்து கொண்டு வருவதற்காக எப்படியெல்லாம் சூழ்ச்சி செய்திருக்கின்றார்கள்? என்று கூறிவிட்டு, பின் நண்பர்களை பார்த்து ஒருவேளை உங்களை எதிர்க்க நான் வராமல் வேறு யாராவது படையெடுத்து வந்திருந்தால் நிலைமை என்னவாகி இருக்கும்? என்று கேட்டான்.

🌟 அதற்கு புத்திசேனன், ஒன்றும் ஆகி இருக்காது? படைகளை ஓட ஓட விரட்டியிருப்போம். இல்லையென்றால் நண்பனை தேடி வீர மரணம் அடைந்திருப்போம். அவ்வளவு தான் நடந்திருக்கும் என்று கூறினான்.

🌟 பின் நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கலகலப்பாக பேசி கொண்டிருந்தனர். அப்பொழுது பதுமுகன், காந்தருவதத்தை உன்னிடம் கொடுக்குமாறு ஒரு ஓலையை கொடுத்திருக்கின்றாள் என்று கூறி அதை வாமனனிடம் கொடுத்தான்.

🌟 ஓலையை வாங்கி படிக்கலாம் என்றவனுக்கு, அந்த தருணம் சரியாக இருப்பதாக புலப்படவில்லை. ஆகவே ஓலையை உடைக்குள் வைத்து மறைத்தான்.

🌟 நண்பர்களை பார்த்து பேசிய பிறகு, அரசர் முன்னிலையில் அனைவரையும் அழைத்து சென்று, பசுமாடுகளை கவர்ந்து சென்றவர்கள் இவர்கள் தான். இவர்கள் திருடர்கள் அல்ல. இவர்கள் அனைவரும் என்னுடைய நண்பர்கள். இவர்களை எனக்காக மன்னித்து விடுங்கள் அரசே! என்று வாமனன் கேட்டு கொண்டான்.

🌟 இவர்களை எதற்காக மன்னிக்க வேண்டும்? இன்று இவர்கள் கொண்டு வந்திருக்கக்கூடிய செய்தி எவ்வளவு பெரிய செய்தி தெரியுமா? அந்த செய்தியை அறிந்தவுடன் நான் அடைந்த மகிழ்ச்சி என்பது எல்லையில்லாத அளவில் இருக்கின்றது. நீங்கள் தான் சச்சந்தனின் ஒரே மகனா? என்று கேட்டார் அரசர்.

🌟 எவ்வளவு முக்கியமான செய்தியை தெரிவித்திருக்கின்றார்கள். இவர்களை எதற்காக மன்னிக்க வேண்டும்? இவர்களை நான் கௌரவிக்க வேண்டும் அல்லவா! என்றார் அரசர்.


🌟 அப்பொழுது கனகமாலையும் அரச சபைக்கு வந்திருந்தாள். ஆம் தந்தையே! இவர்கள் யாரையும் நாம் தண்டிக்கக்கூடாது. ஆனால் நம்மிடத்தில் இவ்வளவு நாட்களாக இருந்து கொண்டு, நம்மிடமே பொய்யுரைத்து வந்த இவரை மட்டும் தண்டிக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை உடனே செய்யுங்கள்! என்று கூறினாள்.

🌟 பிற்கால ஏமாங்கத நாட்டின் அரசராகக்கூடிய சீவகனுக்கு தண்டனை கொடுக்கும் அளவு, மத்திய தேசம் ஒன்றும் அவ்வளவு பெரிய தேசம் அல்ல கனகமாலை என்றான் விசயன்.

🌟 நான் இவரை பார்த்த பொழுதே கூறினேன் அல்லவா! இவர் வணிகரின் மகனாக இருக்க முடியாது என்று. அதற்கு தகுந்தாற் போலவே இவருடைய பயிற்சிகளும், மற்றவர்களை அடக்கி ஆளும் குணமும் அரசரை ஒத்திருந்தது. அன்றே எண்ணினேன் இன்று அது சரியாக தான் இருக்கின்றது. சரி! வந்திருக்கும் நமது விருந்தாளிகள் அனைவருக்கும் நல்ல உணவுகளையும், அவர்கள் தங்குவதற்கான இருப்பிடங்களையும் ஏற்பாடு செய்யுங்கள்! இன்னும் ஒரு வாரத்திற்கு நமது நாட்டில் இம்மகிழ்ச்சியை கொண்டாடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுங்கள்! என்று ஆணையிட்டார் தடமித்தன்.

🌟 அப்பொழுது ஸ்ரீதத்தன் ஒரு சிறு தயக்கத்தோடு முன்வந்து, அரசே! நாங்கள் அனைவரும் சீவகனோடு இப்பொழுதே புறப்பட வேண்டும் என்றான்.

🌟 இப்பொழுது தானே நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்தீர்கள். அதற்குள் என்ன அவசரம்? என்று தடமித்தன் கேட்டார்.

🌟 தடமித்தன் என்ன அவசரம்? என்று கேட்க, அவசரம் தான் அரசே! எங்களுக்கு அல்ல. சீவகனின் தாய்க்கு என்று பதுமுகன் கூறினான்.


Share this valuable content with your friends


Tags

ஜனவரி 26 இறந்தவர் உயிருடன் இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? பிறந்த நாள் மற்றும் நேரம் இல்லாமல் ராசி மற்றும் நட்சத்திரத்தை கண்டுபிடிக்க முடியுமா? பசுமாட்டுடன் பேசுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? இந்தியத் திரையுலகின் தந்தை nadijothidam வெள்ளைக் குதிரையில் வலம் வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்? கூற்றுவ நாயனார் ஐப்பசி மாதம் தொழிலுக்கான இடத்தினை மாற்றிக் கொள்ளலாமா? மச்சம் jasmine flower செவ்வாய்க்கிழமை பெண் பார்க்க செல்லலாமா? வாஸ்துப்படி... வீட்டில் பணத்தை இப்படிதான் வைக்க வேண்டும்? தண்ணீர் தொட்டி மாமரம் வளர்க்கலாமா? ஒரு குழந்தைக்கு வளையல் அணிவிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மதம் பிடித்த கட்டியங்காரனின் யானை அமாவாசையன்று அசைவ உணவு jothider kelvi pathigal சுக்கிரன் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்?