No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - தனது மனைவியான கனகமாலையை விட்டு பிரிந்து சென்ற சீவகன்..!!

Mar 28, 2023   Ramya   126    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... தனது மனைவியான கனகமாலையை விட்டு பிரிந்து சென்ற சீவகன்..!!

🌟 தடமித்தன் என்ன அவசரம்? என்று கேட்க, அவசரம் தான் அரசே! எங்களுக்கு அல்ல. சீவகனின் தாய்க்கு என்று பதுமுகன் கூறினான்.

🌟 இதை கேட்டதும் சீவகன் பேச்சுக்கள் எதுவும் இல்லாமல் அமைதியுடன் திகைத்து நின்று கொண்டிருந்தான்.

🌟 என்னது! சீவகனின் தாய் இன்னும் உயிரோடு தான் இருக்கின்றாரா? என்று ஆச்சரியமாக அரசர் கேட்டார்.

🌟 அதற்கு பதுமுகன், ஆம் அரசே! சீவகனின் தாயும், சச்சந்தனின் மனைவியுமான விசையை அவர்களை வரும் வழியில் நாங்கள் சந்தித்தோம். விசையை தான் மத்திய தேசத்திற்கான வழியை காண்பித்தார். அவரிடம் நாங்கள் சீவகனை உடனே அழைத்து வருவதாக வாக்குறுதி கொடுத்திருக்கின்றோம் என்று கூறினான்.

🌟 சீவகன், நண்பர்களின் பேச்சுக்களின் மூலம் தனது தாய் உயிரோடு இருக்கின்றார் என்றும், அவரை பார்ப்பதற்கான தருணம் இப்பொழுது ஏற்பட்டு விட்டது என்றும் அறிந்து கொண்டு, நண்பர்களிடம் எனது தாயை நீங்கள் பார்த்தீர்களா? அவர் எங்கே இருக்கின்றார்? ஏன் என்னை பார்க்க இத்தனை நாட்களாக வரவில்லை? என்று கேட்டுவிட்டு, உடனே கிளம்புங்கள்! நாம் இப்பொழுதே செல்லலாம் என்று அவசரம் அவசரமாக நண்பர்களிடம் உரைத்து கொண்டிருந்தான்.


🌟 அப்பொழுது நண்பர்கள் அனைவரும் எதுவும் பேசாமல் நின்று கொண்டிருப்பதை பார்த்ததும், அவ்விடத்தில் இருந்து திரும்பி பார்த்தான். அங்கே சீவகனின் பிரிவினால் சோர்வடைந்த கனகமாலையின் முகம் அவன் கண்களுக்கு தென்பட, அவளிடம் நெருங்கி சென்று இறுக அணைத்து கொண்டு, கொஞ்ச நாள் மட்டுமே எனது பிரிவினை தாங்கி கொள். நான் எனது தாயை பார்த்துவிட்டு, செய்ய தவறிய சில கடமைகளை செய்து முடித்துவிட்டு, உன்னை வந்து அழைத்து செல்கின்றேன் என்று கூறினான் சீவகன்.

🌟 கனகமாலை, சீவகனுடைய தவிப்பை உணர்ந்து கொண்டு என்ன செய்வது? என்று புரியாமல் விழிகளில் இருந்த நீரை தடுத்து நிறுத்தி கொண்டும், பிரிவினால் ஏற்படக்கூடிய வலிகளை மறைத்து கொண்டும், சீவகனிடம் எப்பொழுதும் போல உங்களுடைய அனைத்து கடமைகளையும் விரைவாக முடித்துவிட்டு என்னை அழைத்து செல்லுங்கள் என்று கூறினாள்.

🌟 மனைவியிடம் இருந்து பிரியா விடைபெற்ற சீவகன் நண்பர்களோடு தனது தாயை காண சென்றான். அந்த பயணத்தின் நடுவே ஓரிடத்தில் காந்தருவதத்தை கொடுத்த ஓலையை எடுத்து படித்து பார்த்தான்.

🌟 அதில், பலரின் மனங்களை கவர்ந்த எனது மன்னவனுக்கு அவரின் மனதை கவர்ந்த மனைவியான காந்தருவதத்தை எழுதி கொள்வது, இங்கு பலவிதமான பிரச்சனைகள் தோன்றி கொண்டே இருக்கின்றன. எனது தந்தை நாம் எப்படி இங்கு வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்? என்பதை அறிந்து கொள்வதற்காக வித்யாதரனை அனுப்பியிருந்தார்.


🌟 நீங்களும், நானும் இங்கு தனித்து இருக்கின்றோம் என்பதும், சில காரணங்களுக்காக நீங்கள் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் என்பதும் எனது தந்தைக்கு தெரியக்கூடாது என்பதற்காக, வித்யாதரனிடம் மட்டும் உண்மையை கூறி தந்தையிடம் இந்த விஷயம் தெரியாத வண்ணத்தில் பார்த்து கொள்ள வேண்டும் என்று அவனிடம் சத்தியம் வாங்கி கொண்டேன்.

🌟 அதுமட்டுமல்லாமல் குணமாலை தினந்தினம் உங்களை எண்ணி அழுது கொண்டே இருக்கின்றாள். உணவையும் சரியாக எடுத்து கொள்வதில்லை. அவளுடைய உடல் நிலையும் மோசமாகி கொண்டே இருக்கின்றது. உங்களுடைய தாய், தந்தையர் இருவரும் நீங்கள் இன்னும் உயிரோடு இருக்கின்றீர்கள் என்பதே தெரியாமல் உங்கள் நிலைமையை எண்ணி கவலையுடன் இருக்கின்றார்கள்.

🌟 ஆனால், நீங்களோ இதை பற்றி கவலை கொள்ளாமல் உங்களின் விருப்பம் போல பல திருமணங்களை செய்து கொண்டிருக்கின்றீர்கள். உடனடியாக எந்த வேலையை முதலில் செய்ய வேண்டுமோ அதை செய்து முடித்துவிட்டு எங்களிடம் வந்து விடுங்கள்! என்று எழுதியிருந்தாள்.


Share this valuable content with your friends