No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - திருடர்களை பிடிக்க காட்டுக்குச் சென்ற சீவகன்..!!

Mar 28, 2023   Ramya   167    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... திருடர்களை பிடிக்க காட்டுக்குச் சென்ற சீவகன்..!!

🌟 இல்லை வாமனரே! இப்பொழுது தான் உங்களுக்கு திருமணமாகி இருக்கின்றது. அதனால் தான்... என்று மன்னர் தன்னுடைய மகளின் மீது கொண்ட அன்பினால் கூற,

🌟 இல்லை அரசே! இது தவறு. போர்க்களத்தில் நிற்கின்றவர்களில் திருமணமானவர்களும் இருக்கின்றார்கள். திருமணமாக போகின்றவர்களும் இருக்கின்றார்கள். ஆகவே அனைவரும் இங்கு சமமே. யாருக்கும் எதுவும் ஆகாமல் திருடர்களை நான் பிடித்து வருகிறேன்! என்றான் வாமனன்.

🌟 அதன் பிறகு மன்னர், வாமனனிடம் எதுவும் பேச முடியாமல், சரி இன்று ஒருநாள் மட்டும் உங்களுக்கு அவகாசம் கொடுக்கின்றேன். இன்று இரவிற்குள் அவர்கள் அனைவரையும் பிடித்து வர வேண்டும் என்று கூறி அரச சபையில் இருந்து எழுந்து சென்றார்.

🌟 வாமனன் திருடர்களை பிடிப்பதற்காக, அவர்கள் தஞ்சம் புகுந்த காடு எங்கே இருக்கின்றது? என்றும், அந்த காட்டின் அமைப்பை பற்றியும் தெளிவாக புரிந்து கொண்டான். பின் காட்டின் நான்கு பக்கங்களில் இருந்தும் உள்ளே இருப்பவர்கள் வெளியே தப்பித்து செல்லாத வகையில் அரண் போன்ற அமைப்பை ஏற்படுத்திவிட்டு சரியான தருணத்திற்காக காத்திருந்தான்.


🌟 காட்டில் இருந்த அவனுடைய நண்பர்கள் அனைவரும் ஒற்றனின் மூலமாக, வாமனன் தான் தங்களை எதிர்க்க வந்திருக்கின்றான் என்பதை தெளிவாக புரிந்து கொண்டனர்.

🌟 இங்கு வாமனன், காட்டில் இருக்கும் திருடர்களுக்கு, தான் படையுடன் வந்திருப்பதை தெரியப்படுத்தும் விதமாக சங்கை எடுத்து ஊதி அழைப்பு விடுத்தான்.

🌟 வாமனன் சங்கை ஊதியும் காட்டிலிருந்து எந்தவொரு பதிலும் கிடைக்காமல் இருக்க, வாமனன் குதிரையில் இருந்த வண்ணமாக, படை வீரர்களுக்கு முன்னேறி செல்லலாம் என்று ஆணையிட்டான்.

🌟 அப்பொழுது வாமனனுடைய குதிரைக்கு முன்பு ஒரு அம்பு ஓலையுடன் வந்து விழுந்தது.

🌟 எதிர்பாராத நேரத்தில் வந்த அம்பின் காரணமாக படை வீரர்கள் அனைவரும் முன்னேறி செல்லலாம் என்று வேகம் எடுக்க, வாமனன் மட்டும் வீரர்களை பார்த்து, நீங்கள் அனைவரும் இங்கேயே இருங்கள்... நான் மட்டும் சென்று பார்க்கின்றேன்... எனது ஆணைக்காக இங்கேயே காத்திருங்கள்! என்று கூறிவிட்டு, அம்பு வந்த திசையை நோக்கி சென்றான்.

🌟 அந்த அம்பு வந்த வேகமும், விழுந்த இடமும் தன்னை கொல்வதற்காக அல்ல என்பதை தெளிவாக புரிந்து கொண்டான். அதுமட்டுமல்லாமல் அந்த அம்பின் நுனியில் ஏதோ ஒரு ஓலை இருப்பதையும் பார்த்து கொண்டான். மேலும் தற்காப்பிற்காக கையில் கேடயத்தை ஏந்திய வண்ணமாக அம்பின் அருகில் சென்றான்.

🌟 அம்பின் அருகில் சென்று அந்த ஓலையை எடுத்து பிரித்து பார்த்த வாமனனுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது.

🌟 அதாவது வந்திருந்த ஓலையில், தன்னிகரற்ற திறமை கொண்ட ஏமாங்கத நாட்டின் சக்கரவர்த்தியான சச்சந்தனின் ஒரே வாரிசான வாமனனுக்கு, நண்பர்களுடைய இனிய வணக்கங்கள்! என்று அதில் எழுதப்பட்டிருந்தது. இந்த விஷயம் இவர்களுக்கு எப்படி தெரியும்? யார் இவர்கள்? என்று வாமனன் எண்ணி கொண்டிருந்த பொழுதே எதிரில்...


Share this valuable content with your friends