No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ராம நவமி… ராமரின் வரலாறும் ராமரின் சிறப்புகளும்..!!

Mar 28, 2023   Ramya   185    ஆன்மிகம் 


ராம நவமி...!!


மகாவிஷ்ணுவின் தசாவதாரங்களில் ராம அவதாரம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது. ராமபிரான் இந்த பூலோகத்தில் அவதரித்த நாளை தான் ராம நவமி என்று கூறுகின்றோம்.

ராமர் பிறந்த வரலாறு :

🤱 அயோத்தியை ஆண்ட மன்னர் தசரத சக்கரவர்த்தி. இவருக்கு கோசலை, சுமித்திரை, கைகேயி என்ற மூன்று மனைவிகள் இருந்தார்கள். வெற்றிக்கொடி கட்டிப் பறந்த தசரத சக்கரவர்த்திக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை.

🤱 தசரத சக்கரவர்த்தி தனது குலகுருவான வசிஷ்ட முனிவரிடம் சென்று, குழந்தை பாக்கியம் பெற என்ன செய்யலாம்? என்று ஆலோசனை கேட்டார்.

🤱 முனிவர் சொன்ன ஆலோசனை படி தன்னுடைய அரண்மனையில் புத்ர காமேஷ்டி யாகத்தை நடத்த முடிவு செய்தார்.

🤱 யாகம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், யாகத் தீயிலிருந்து யக்னேஸ்வரர் தோன்றி, பாயசம் நிறைந்த ஒரு குடுவையை தசரத சக்கரவர்த்தியின் கையில் கொடுத்தார்.

🤱 அந்த குடுவையில் இருக்கும் பாயசத்தை மன்னரின் மனைவிகள் அருந்த வேண்டும் என்ற கட்டளையையும் இட்டார் யக்னேஸ்வரர்.

🤱 தசரதனின் மனைவிகளும் பாயசத்தை அருந்தினார்கள். அதன் பின்பு பங்குனி மாதம் நவமி தினத்தில் கோசலை ராமபிரானை பெற்றெடுத்தாள். கைகேயிக்கு பரதனும், சுமித்திரைக்கு லட்சுமணனும், சத்ருக்கனனும் மகனாக பிறந்தார்கள்.

ராமரின் சிறப்புகள் :

👸 ராமர் வசிஷ்ட முனிவரிடம் வித்தைகளை கற்றுத் தேர்ந்தவர்.

👸 ராம பானத்திற்கு இணை வேறு ஏதும் இல்லை.

👸 ராமர் வாழ்க்கையில் தனக்கு எத்தனை இன்னல்கள், கஷ்டங்கள் வந்தபோதிலும் நேர்மை தவறாமல் நடந்து கொண்டவர்.

👸 இந்த பூமியில் மனிதராக பிறப்பவர் எப்படி வாழ வேண்டும்? என்பதற்கான உதாரணமாகவும், ஆட்சியை நடத்தும் ஒரு மன்னன் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பதற்கு உதாரணமாகவும் வாழ்ந்து காட்டியவர் தான் ராமபிரான்.

ராமபிரான் எதற்காக நவமி திதியில் பிறந்தார் என்ற கதை உங்களுக்கு தெரியுமா?

🌟 பொதுவாக அஷ்டமி திதி அன்றும், நவமி திதி அன்றும் எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்ய மாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் ஒருநாள் மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டன.

🌟 விஷ்ணுபகவான் அவைகளுக்கு ஆறுதல் அளித்தார். உங்கள் இருவரையும் போற்றக்கூடிய நாள் வரும், அதுவரை நீங்கள் இருவரும் காத்திருக்க வேண்டும் என்று கூறினார். இதன்படியே எம்பெருமான் அஷ்டமி திதி அன்று கிருஷ்ண அவதாரத்தையும், நவமி திதி அன்று ராம அவதாரத்தையும் எடுத்தார்.

🌟 இதன் அடிப்படையில் நாம் எல்லோரும் கோகுல அஷ்டமியையும், ராம நவமியையும் அஷ்டமி, நவமி திதியில் கொண்டாடி வருகின்றோம்.


Share this valuable content with your friends