No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனை மீட்க திட்டம் தீட்டிய சீவகனின் நண்பர்கள்..!!

Mar 27, 2023   Ramya   166    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனை மீட்க திட்டம் தீட்டிய சீவகனின் நண்பர்கள்..!!

🌟 சீவகனை பற்றியும், நந்தட்டனை பற்றியும் ஒற்றர்கள் கூறி முடித்த பின், அவர்களை பார்த்து பதுமுகன், சரியான தகவல்களை சரியான நேரத்தில் தெரிவித்திருக்கின்றீர்கள். எங்களுக்கு எது தெரியாமல் இருந்ததோ, அந்த தகவல் தெளிவாக புரிந்து விட்டது என்று நன்றி தெரிவித்தான்.

🌟 ஒற்றர்கள் மூவரும் அவ்விடத்தில் இருந்து சென்றனர். உடனே ஸ்ரீதத்தன், ஆமாம்... இப்பொழுது தான் அனைத்து தகவலும் நமக்கு தெரிந்து விட்டதே! இருப்பினும் சீவகனை எப்படி வெளியே கொண்டு வருவது? என்று நண்பர்களிடத்தில் வினவினான்.

🌟 இது ஒன்றும் பெரிய காரியமாக எனக்கு தெரியவில்லை. நேராக நகரத்திற்குள் சென்று, மன்னரை பார்த்து சீவகனை பற்றி பேசுவோம். அவரே சீவகனை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்து தருவார். பிறகு வந்த வேலை எளிமையாக முடிந்து விட்டது என்று எண்ணி நம்முடைய நாட்டிற்கு திரும்பி செல்ல வேண்டியது தானே! என்றான் அசலன்.


🌟 இவனுடைய கூற்றுக்களை கேட்ட புத்திசேனன் மிகுந்த கோபம் அடைந்து, முட்டாள்தனமாக பேசுவதை முதலில் நிறுத்து. இப்பொழுது சீவகன் தன்னுடைய சொந்த பெயரையே பயன்படுத்தாமல் புதிய பெயரையும், அடையாளத்தையும் பயன்படுத்தி கொண்டிருக்கின்றான். அப்படியானால் அவனுக்கு இங்கு ஏதோ பிரச்சனைகள் இருக்கின்றது என்று தானே அர்த்தம்.

🌟 இப்பொழுது நாம் சீவகனை நேரடியாக சந்திப்பது முடியாத ஒன்றாகும். ஆகையால் வேறு விதமாக தான் சீவகனை சந்திக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் இவ்வளவு பேர் சேர்ந்து ஒரு நகரத்திற்குள் நுழைந்தால் என்ன நிகழும்? மன்னருடைய முடிவு எதிர்பார்ப்பது போல் இருக்காது... எதிர்பார்க்காததும் அங்கு நிகழும் என்றான்.

🌟 புத்திசேனன் கூறுவதும் சரி தான். நம்முடைய நண்பனை பற்றி நாம் அறியாதது என்ன இருக்கின்றது? இப்பொழுது அவனை மத்திய தேசத்திலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும். அவ்வளவு தானே, அதற்கும் ஒரு யோசனை இருக்கிறது. என்னுடைய திருமணம் நடந்த விதம் அனைவருக்கும் தெரியும் அல்லவா! அதை போலவே ஒரு சூழ்நிலையை உருவாக்கி, சீவகனை நகரத்திலிருந்து வெளியே தனித்து அழைத்து வரலாம் என்றான் பதுமுகன்.

🌟 அதற்கு தேவதத்தன், என்னது! அன்று அவர்கள் பசுமாடுகளை திருடியதை போன்றே, இன்று நாம் பசுமாடுகளை திருட வேண்டுமா? என்று அதிர்ச்சியாக கேட்டான்.

🌟 அதற்கு பதுமுகன், நாம் செய்ய போவது திருட்டு இல்லை... பசுமாடுகளை கவர்ந்து இழுத்து வருவதாகும். அதாவது இரவு வேளையில் சிறு படைகளாக சென்று, நாட்டில் இருக்கும் பசுமாடுகளை கவர்ந்து வருவோம். இந்த செய்தியானது எப்படியும் சீவகனின் செவிகளுக்கு செல்லும். அவன் பசுமாடுகளை மீட்க எப்படியும் வருவான் என்றான் பதுமுகன்.

🌟 ஒருவேளை சீவகன் வராமல் அரசர் வந்தால் என்ன செய்வது? என்றான் ஸ்ரீதத்தன்.

🌟 அரசர் வருவது மிகவும் குறைவு. ஒருவேளை அரசர் வந்தால் வீர மரணம் தான். வீரனுக்கு போர்க்களத்தில் மரணம் அடைவதை விட வேறு எதில் மதிப்பு இருக்கின்றது? என்றான் அசலன்.

🌟 ஒருவேளை சீவகன் வந்தாலும் அவனுடன் போர் புரிவதா? என்று கேட்டான் தேவதத்தன்.

🌟 சீவகனுடன் நாம் போர் புரிய மாட்டோம். ஆனால் அவனோடு போரில் நிற்போம் என்றான் பதுமுகன். அதற்கு தேவதத்தன், ஒன்றும் புரியவில்லையே! என்றான்.

🌟 உடனே புத்திசேனன், இங்கு நடப்பது எல்லாம் எனக்கு வியப்பாக இருக்கின்றது. இவ்வளவு தூரம் பயணித்து வந்து, இப்பொழுது பசுமாடுகளை திருட போகின்றோம்... என்று சிரித்து கொண்டே கூறினான்.

🌟 அவர்கள் திட்டமிட்டது போலவே இரவோடு இரவாக பசுமாடுகளை கவர்ந்து வந்தார்கள்.


Share this valuable content with your friends