No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - அரசர் தடமித்தனை சந்தித்த நந்தட்டன்..!!

Mar 27, 2023   Ramya   201    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... அரசர் தடமித்தனை சந்தித்த நந்தட்டன்..!!

🌟 திருமண நிகழ்வுக்கு பிறகு அரசவைக்கு வந்த அரசர் அப்பொழுது தான் வாமனனுக்கு (வாமனனின் உண்மையான பெயர் சீவகன்) அருகில் இருந்த நந்தட்டனை பார்த்தார். பார்ப்பதற்கு வாமனனை போலவே இருக்கின்றாரே, இவர் யார்? இதுவரை நான் பார்த்ததில்லையே! என்று ஆச்சரியமாக கேட்டார் தடமித்தன்.

🌟 உடனே நந்தட்டன் பணிவாக எழுந்து நின்று அரசனை வணங்கினான். பின் நான் வெளியூரில் இருந்து வருகின்றேன். நான் வாமனனின் தம்பி என்றான்.

🌟 அதற்கு மன்னர், ஓ அப்படியா! நீங்கள் எந்த ஊரில் இருந்து வருகின்றீர்கள்? உங்கள் அண்ணன் தான் எதுவும் கூற மாட்டேன் என்று நிற்கின்றார். நீங்களாவது உண்மையை கூறுவீர்களா? என்றார்.

🌟 புன்னகைத்த வண்ணமாக, அரசே! ஏமாங்கத நாட்டில் உள்ள ராசமாபுரம் என்னுடைய ஊர் ஆகும் என்று கூறி கொண்டிருந்த பொழுது, சபையின் வாசலில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து கூச்சல் எழுப்பி கொண்டிருந்தார்கள்.

🌟 ஒரு நிமிடம் இருங்கள்! வெளியில் ஏதோ சத்தம் கேட்டு கொண்டிருக்கின்றது பார்த்துவிட்டு வருகிறேன் என்றார் தடமித்தன். நந்தட்டனும் தான் கூறுவதை நிறுத்தி கொண்டான்.

🌟 யார் அங்கே! அங்கு என்ன கூட்டமாக இருக்கிறது? என்று கேட்டார் தடமித்தன்.

🌟 அப்பொழுது அங்கிருந்த சேவகன் அரசரின் முன் சென்று, அரசே! சில திருடர்கள் நேற்றிரவு ஊருக்குள் புகுந்து பசுமாடுகளை கவர்ந்து சென்றிருக்கின்றார்கள். இடையர்கள் முயன்றும் அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று ஒருவிதமான பதற்றத்துடன் கூறினான்.


🌟 இதை கேட்டதும் அரசர் கோபத்தின் உச்சத்திற்கு சென்று, எனது நாட்டிற்குள் புகுந்து செல்வ வளத்தை திருடும் அளவிற்கு வீரமுள்ளவர்கள் இருக்கின்றார்களா? யார் அங்கே! உடனே படையை தயார் செய்யுங்கள்! காட்டிற்கு சென்று திருடர்கள் இருக்கும் இடத்தை அறிந்து, அவர்களை வெட்டி சாயுங்கள்! இனி எவரும் எனது நாட்டிற்குள் புகுந்து திருடுதலை செய்யவேக்கூடாது. இது இந்த நாட்டில் திருட வருகின்ற அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கட்டும்! என்று கர்ஜனை குரலுடன் கூறினார்.

🌟 அப்பொழுது அரச சபையில் இருந்த வாமனன் எழுந்து நின்று அரசரை வணங்கினான்.

🌟 என்ன வாமனரே! திடீரென்று என்னை வணங்குகின்றீர்கள். உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்டார் அரசர்.

🌟 அரசே! நான் சிறிது காலங்களாக இந்த மத்திய தேசத்தில் தான் இருக்கின்றேன். அதுமட்டுமல்லாமல் உங்களுடைய அன்பு மகளையும் திருமணம் செய்திருக்கின்றேன். உங்களது மகன்களுக்கு போர்க்கலைகளையும் கற்று கொடுத்திருக்கின்றேன் என்றான் வாமனன்.

🌟 அதற்கு அரசர், ஆமாம் வாமனரே! ஏன் திடீரென்று இதையெல்லாம் உரைத்து கொண்டிருக்கின்றீர்கள்? என்று கேட்டார்.

🌟 தொடர்பு இருக்கின்றது அரசே! நானும் இந்த நாட்டை சேர்ந்த குடிமகன் ஆவேன். இந்த நாட்டிற்கு ஏதேனும் களங்கம் ஏற்படுவதாக இருந்தால் அது எனக்கும் ஏற்படுவதாகும். ஆகவே, இந்த நாட்டிற்குள் புகுந்து பசுமாடுகளை கவர்ந்து சென்ற திருடர்களை பிடிக்கும் பொறுப்பையும், வாய்ப்பையும் எனக்கு தருமாறு கேட்டு கொள்கின்றேன். அவர்களை இன்று இரவிற்குள் பிடித்து உங்களிடம் ஒப்படைக்கின்றேன் என்றான் வாமனன்.


Share this valuable content with your friends