No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - மகாராணி விசையை சந்தித்த சீவகனின் நண்பர்கள்..!!

Mar 24, 2023   Ramya   174    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... மகாராணி விசையை சந்தித்த சீவகனின் நண்பர்கள்..!!

🌟 சீவனை காண மத்திய தேசம் செல்லும் வழியில் ஆசிரமங்கள் இருக்கும் இடத்தை காண்பித்தான் புத்திசேனன். அப்பொழுது ஒரு வயதான பெண் துறவி, அருகிலிருக்கும் நீர் ஓடையில் இருந்து நீர் எடுத்து வந்து கொண்டிருந்தார்.

🌟 பெண் துறவியை பார்த்த பதுமுகன், அவர் ஏதோ அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் போல தெரிகிறது. ஏதோ ஒரு சில பிரச்சனைகளினால் தான் இவர் துறவி நிலையை அடைந்திருப்பார் என்று எண்ணினான். இவரிடம் வழி கேட்கலாமா? என்று சிந்திப்பதற்குள்ளாகவே அந்த பெண் துறவி இவர்களின் அருகாமையில் வர துவங்கினார்.

🌟 பின் பதுமுகன் என்ன நினைத்தானோ தெரியவில்லை, உடனே அவர்களை பார்த்து வணக்கம்! என்று கூறினான்.

🌟 யாரும் இல்லாத இந்த காட்டில் திடீரென்று புதியதாக இரண்டு நபர்களை பார்த்ததும் அந்த பெண்மணியோ திடுக்கிட்டார். சில நொடிகளுக்கு பின்பு, நீங்கள் யார்? இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? இந்த காட்டில் வெளியாட்களுக்கு அனுமதி இல்லையே! என்று கேட்டார் அந்த பெண் துறவி.

🌟 தாயே! நாங்கள் இங்கு தங்குவதற்காக வரவில்லை. சிறிது நேரத்திற்குள்ளாகவே இங்கிருந்து புறப்பட்டு விடுவோம். மேலும், நாங்கள் ராசமாபுரத்தில் இருந்து வருகின்றோம் என்று கூறினான் பதுமுகன். சரியாக அதேசமயம் சீவகனின் மற்ற நண்பர்களும் அவ்விடத்திற்கு வந்தனர்.


🌟 ராசமாபுரம் என்ற பெயரை கேட்டதும் மனதில் ஏற்பட்ட பழைய நினைவுகளினால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார் அந்த பெண் துறவி. பின் பதுமுகனிடம் ராசமாபுரத்தில் நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்? என்று கேட்டார்.

🌟 ஓ..! அப்படியானால் உங்களுக்கு ராசமாபுரத்தை பற்றி தெரியுமா? நீங்கள் அங்கு இருந்திருக்கின்றீர்களா? என்றான் பதுமுகன்.

🌟 ஆமாம், நான் ராசமாபுரத்தில் சிறிது காலம் இருந்திருக்கின்றேன். அதனால் தான் உங்களிடம் கேட்டேன் என்றார் அந்த பெண் துறவி.

🌟 மிக்க மகிழ்ச்சி தாயே! இதோ இருக்கின்றானே இவன் அமைச்சர் சாகரனுக்கும், குருதத்தைக்கும் பிறந்தவன். இவன் பெயர் ஸ்ரீதத்தன் என்றான். மேலும் மற்றவர்களை பார்த்து, இவன் பெயர் அசலன். இவன் பெயர் புத்திசேனன். என்னுடைய பெயர் பதுமுகன். இவன் பெயர் தேவதத்தன் என்று கூறிவிட்டு, நாங்கள் அனைவரும் ஒன்றாக விளையாடி, ஒன்றாக படித்தவர்கள். எப்பொழுதும் வணிகரான கந்துக்கடனின் வீட்டில் தான் இருப்போம் என்று கூறினான்.

🌟 உடனே அந்த பெண் துறவிக்கு, சின்னஞ்சிறு வயதில் இவர்களை குழந்தையாக பார்த்தது. இப்பொழுது எவ்வளவு வளர்ந்து விட்டார்கள். அடையாளமே தெரியவில்லையே! என்று மனதிற்குள்ளே ஆச்சரியப்பட்டு கொண்டார்.

🌟 மேலும் கந்துக்கடன் என்ற பெயரை கேட்டதும் பல நினைவுகள் அவளுடைய மனதில் ஏற்பட துவங்கியது. இவர்களிடம் ஒரு கேள்வியை கேட்கலாம் என்று தோன்றினாலும், அதை கேட்க மனமில்லாமல் அமைதி கொண்டார்.




🌟 அப்பொழுது பதுமுகன், நாங்கள் மட்டுமல்லாமல் எங்களுக்கு சீவகன் என்ற நண்பனும் இருக்கின்றான். அவன் எங்கள் அனைவரையும் விட போர்க்கலைகளில் சிறந்தவன். அதுமட்டுமல்லாமல் பலரை ஈர்ப்பதிலும் கைதேர்ந்தவன். அவனே கந்துக்கடனின் மூத்த மகனாவான். அவனுக்கும், மன்னன் கட்டியங்காரனுக்கும் இடையே ஏற்பட்ட சில பகைகளின் காரணமாக, சூழ்ச்சி செய்து அவனை கொல்வதற்காக ஆணையிட்டான் என்று கூறினான். 🌟 இதை கேட்டதும், என்னது! சீவகனை கொன்று விட்டார்களா? என கத்தி கொண்டே அந்த இடத்திலேயே மயக்கம் அடைந்தார் அந்த பெண் துறவி.

🌟 திடீரென்று பெண் துறவி மயக்கம் அடைந்ததும், நண்பர்கள் அனைவரும் என்னவாயிற்று? என்று குழம்பி கொண்டே இருக்க, அவர் கொண்டு வந்திருந்த நீரை எடுத்து அவருடைய முகத்தில் தெளித்தான் தேவதத்தன்.


Share this valuable content with your friends


Tags

நாவல் பழத்தை பறித்து சாப்பிடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? தினசரி ராசிபலன்கள் (30.04.2020) viratham தேவ 3 ல் சனி மற்றும் குரு இணைந்திருத்தால் என்ன பலன்? அறிமுகமில்லாதவரை சந்தித்து உரையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? விஜயலட்சுமி பண்டிட் தீபம் ஏற்றுவது போல் கனவு puththira dhosham accident பாவகங்கள்... பேச்சுல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல... யாரா இருப்பாங்க? theipirai அதிகம் மழை பொழிந்து சர்வதேச அமைதி காப்போர் தினம் went to thiruppathi temple ஆண் சிங்கத்தை கனவில் கண்டால் என்ன பலன்? சிவன் கோவிலில் சிவன் எனக்கு குங்குமம் வைப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மீன ராசியில் பிறந்தவர்களின் பொதுவான பலன்கள் ஜாதகம் கிழிந்து போவதாக கனவு கண்டால் என்ன பலன்? daily rasipalan 02.11.2018