No Image
 Sat, Jun 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - நந்தட்டனுக்கு அறிவுரை கூறிய சீவகன்..!!

Mar 24, 2023   Ramya   186    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... நந்தட்டனுக்கு அறிவுரை கூறிய சீவகன்..!!

🌟 கோபம் வந்துவிட்டால் உனக்கு என்ன பேசுவது என்றே தெரியாது நந்தட்டா! எப்பொழுதும் இப்படி இருக்காதே, சூழ்நிலையறிந்து செயல்படு. மனதில் காயத்தை நொடியில் ஏற்படுத்தி விடலாம். ஆனால் அதை குணப்படுத்துவது அவ்வளவு எளிதானதல்ல என்றான் சீவகன்.

🌟 அதற்கு நந்தட்டன், சரி அண்ணா! இனி உங்கள் கூற்றுக்களின் படியே நான் நடக்கின்றேன் என்றான்.


🌟 இவ்வளவு துன்பம் நிறைந்த சூழ்நிலையிலும் உனது அண்ணி எனக்கு நன்மையை தான் செய்திருக்கின்றாள் என்று கூறினான் சீவகன்.

🌟 அப்படி என்ன நன்மை செய்திருக்கின்றார்? என்று கேட்டான் நந்தட்டன்.

🌟 கடந்த சில நாட்களாகவே பேச்சு துணைக்கு ஆளில்லாமல் தனித்திருந்தேன். யாராவது வரமாட்டார்களா? என்று எண்ணி கொண்டிருந்தேன். அப்பொழுது தான் சரியாக நீ வந்தாய். இனி எனக்கு எந்தவொரு கவலையும் இல்லை என்றான் சீவகன்.

🌟 அப்படியானால் நான் உங்களுக்கு பேச்சு துணைக்கு மட்டும் தானா? என்று சிரித்து கொண்டே கேட்டான் நந்தட்டன்.

🌟 நீ அதற்கு மட்டுமல்ல நந்தட்டா! சகோதரன் கூட இருப்பது ஒரு பெரும் பலம் அல்லவா! நான் கூறுவதை நீ சரியாக புரிந்து கொண்டாயா? என்று கேட்டான் சீவகன்.

🌟 நீங்கள் கூறியதை நான் சரியாக புரிந்து கொண்டேன் அண்ணா! நான் பேச்சு துணைக்கு மட்டும் தான் உங்களுக்கு உதவியாக இருப்பேன். மற்றபடி நான் எதற்கும் உதவியாக இருக்க மாட்டேன் அல்லவா! என்று கூறிவிட்டு சிரித்தான் நந்தட்டன்.

🌟 பின் சீவகன் நீ நீண்ட தூரத்தில் இருந்து வந்திருக்கின்றாய். அதனால் உடலில் களைப்பும், சோர்வும் ஏற்பட்டிருக்கும். இப்பொழுது இருவரும் தூங்க செல்லலாமா? என்று கேட்டான்.

🌟 அதற்கு நந்தட்டன், அண்ணா! நான் இங்கு மந்திரத்தின் மூலமாக தான் வந்தேன். ஆகையால் எனக்கு எந்தவிதமான களைப்பும் இல்லை. நீங்கள் நடந்ததை கூறுங்கள் நான் கேட்க ஆவலாக இருக்கின்றேன் என வேண்டுமென்றே கூறிவிட்டு சிரித்தான்.

🌟 அது எல்லாம் இப்போது வேண்டாம். அங்கே பார் கனகமாலை என்னை அழைக்கின்றாள். நாம் காலையில் சந்திப்போம் என்று வேகமாக சென்று விட்டான் சீவகன்.


🌟 இங்கு புத்திசேனனும், பதுமுகனும் குதிரையின் மீது நீண்ட தூர பயணத்தை மேற்கொண்டனர். அப்பொழுது குதிரைக்கு தண்ணீர் காட்டுவதற்காக குதிரைகளை குளத்தின் ஓரத்தில் விட்டனர். குதிரைகளும் தண்ணீரை கண்டதும் தேவையான அளவு தண்ணீரை குடித்து கொண்டிருந்தன.

🌟 குதிரை ஓய்வெடுத்து கொண்டிருந்த அந்த நேரத்தில் புத்திசேனன், பதுமுகனிடம் இன்னும் எவ்வளவு தூரம் தான் செல்ல வேண்டி இருக்கின்றது? எப்பொழுது தான் அந்த மத்திய தேசத்தை நாம் அடைவோம் என்று கேட்டான்.

🌟 அதற்கு பதுமுகன், நீ ஏன் இவ்வளவு கவலை அடைகின்றாய்? நாம் நீண்ட நெடுந்தூரத்தை கடந்துவிட்டோம். இன்னும் சிறிது தூரத்தை கடந்தால் மத்திய தேசத்தை அடைந்துவிடுவோம் என்றான்.

🌟 என்ன செய்வது பதுமுகா? சீவகனை காண வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் எனக்கு அதிகரித்து கொண்டே இருக்கின்றது என்றான் புத்திசேனன்.

🌟 பின் பதுமுகனும் கடந்த காலத்தை பற்றி எண்ணினான். அதாவது, மதனனுடைய அறிவிப்பினால் போர்க்களமே தோன்றிருக்கும். ஆனால் சிறு நிமிடத்தில் அனைத்தும் மாறிவிட்டது. இருப்பினும் சீவகனை தேடி பல ஊர்களுக்கும் அலைந்துவிட்டோம். எங்கு தேடியும் எந்தவொரு தகவலும் அவனை பற்றி கிடைக்கவில்லை. மனம் உடைந்து ஏமாங்கத நாட்டை அடைந்த பொழுது அவனுடைய உறவினர்கள் அனைவரும் மிகவும் சோர்ந்திருந்தனர். கவலைகள் முழுவதும் அவர்களிடத்திலே இருப்பது போலவே இருந்தார்கள்.

🌟 ஆனால் காந்தருவதத்தை மட்டும் எந்தவிதமான கவலையும் இல்லாமல் தன்னுடைய கணவன் வந்துவிடுவார் என்ற ஒரு நம்பிக்கையோடு மகிழ்ச்சியாக இருந்தாள். அந்த நிமிடம் நம் அனைவருடைய எண்ணத்தையும் மாற்றிவிட்டது அல்லவா! அவள் அன்று சீவகன் உயிரோடு இருக்கின்றான் என்பதை கூறாமல் இருந்திருந்தால் நாம் இங்கு வந்திருக்க முடியுமா? அதுமட்டுமல்லாமல் சீவகன் எங்கே இருக்கின்றான்? என்ற விவரத்தையும் அவள் தானே நம்மிடம் கூறினாள் என்று எண்ணினான்.

🌟 பதுமுகன் கடந்த காலத்தை பற்றி எண்ணி கொண்டிருக்க, அவனுடைய எண்ணத்தை தெளிவாக உணர்ந்து கொண்ட புத்திசேனன், அந்த காந்தருவதத்தை நம்மை மட்டும் அனுப்பாமல் நமக்கு முன்னரே நந்தட்டனை அனுப்பி இருக்கின்றாள். எல்லோரையும் மந்திரத்தின் மூலமாகவே அனுப்பி வைத்திருக்கலாம். ஆனால் நீ தான் இடையில் வந்து பயணம் மேற்கொள்கின்றோம் என்று கூறினாய். இப்பொழுது பயணத்தை மேற்கொண்டிருக்கின்றோம் என்றான்.

🌟 அதற்கு பதுமுகன், மந்திரத்தின் மூலமாக சென்றால் நம் அனுபவம் என்னாவது? நாம் போர் வீரர்கள். அனுபவத்தை பெற்றால் மட்டுமே எதிர்காலத்தை நம்மால் வரவேற்க முடியும். அவள் கூறிய வழிகளை நான் தெளிவாக கேட்டு கொண்டேன். அதில் எந்தவொரு தவறும் ஏற்படவில்லை என்று கூறிவிட்டு, காந்தருவதத்தையுடன் உரையாடியதை நினைத்து பார்த்தான். மத்திய தேசத்திற்கான வழியை கூறி முடித்த பின்பு காந்தருவதத்தையை பார்த்து, நீங்கள் சீவகனிடத்தில் ஏதாவது உரைக்க வேண்டுமா? என்று கேட்டான்.


🌟 உடனே காந்தருவதத்தை, நீங்களாவது என்னிடம் கேட்டீர்களே! என்று எண்ணி கொண்டே, ஆமாம்! என்றாள். பின் சீவகனுக்கும், காந்தருவதத்தைக்கும் மட்டும் புரியும் விதத்தில் ஓலை ஒன்றை எழுதி பதுமுகனிடம் கொடுத்தாள். அதை பெற்று கொண்ட பதுமுகன் அதை பாதுகாப்பாக வைத்திருந்தான்.

🌟 அப்பொழுது தான் அவர்கள் இருக்கும் இடத்தை கவனித்தான் புத்திசேனன். இது என்ன காடு என்றே தெரியவில்லையே? மிருகங்கள் கூட எதுவும் இங்கு இல்லை போலவே! இவ்வளவு அமைதியாக இருக்கின்றது என்று கூறி கொண்டிருந்தான்.

🌟 செல்கின்ற வழியில் ஒரு காட்டில் சமண முனிவர்கள் தவம் செய்து கொண்டிருப்பதாக காந்தருவதத்தை கூறினாள் அல்லவா! அந்த காடு இதுவாக தான் இருக்கும் என்றான் பதுமுகன்.

🌟 நீ கூறுவது உண்மை தான். இங்கே சில ஆசிரமங்கள் கூட தெரிகிறது என்று ஆசிரமங்கள் இருக்கும் இடத்தை காண்பித்தான் புத்திசேனன். அப்பொழுது ஒரு வயதான பெண் துறவி, அருகிலிருக்கும் நீர் ஓடையில் இருந்து நீர் எடுத்து வந்து கொண்டிருந்தார்.

🌟 பெண் துறவியை பார்த்த பதுமுகன், அவர் ஏதோ அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் போல தெரிகிறது. ஏதோ ஒரு சில பிரச்சனைகளினால் தான் இவர் துறவி நிலையை அடைந்திருப்பார் என்று எண்ணினான். இவரிடம் வழி கேட்கலாமா? என்று சிந்திப்பதற்குள்ளாகவே அந்த பெண் துறவி இவர்களின் அருகாமையில் வர துவங்கினார்.


Share this valuable content with your friends