No Image
 Wed, Jun 26, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனின் பிறப்பு பற்றி அறிந்து கொள்ளும் நண்பர்கள்...!!

Mar 24, 2023   Ramya   275    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனின் பிறப்பு பற்றி அறிந்து கொள்ளும் நண்பர்கள்...!!

🌟 மயக்கத்தில் இருந்து விழித்தெழுந்த துறவியோ அவர்களை பார்த்து, எனது மகன் சீவகனுக்கு என்னவாயிற்று? மகனே! உன்னை இப்பொழுதும் தவற விட்டுவிட்டேனா? என்று கூறி அழுதார்.

🌟 என்னுடைய பார்வை உனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தானே உன்னை காணாமல், உனது நலனுக்காக இங்கே நான் தவம் இருக்கின்றேன். உன்னை மறுபடியும் பார்ப்பதற்கு கூட எனக்கு தகுதி இல்லையா? சீவகா! என்னை மன்னித்து விடுவாயா? நீ அரச குலத்தில் பிறந்து, அரச சூழ்ச்சியினால் சிறுவயதிலேயே தாய் அன்பில்லாமல் என்ன செய்து கொண்டிருக்கின்றாயோ? என்று நொடிக்கு நொடி பல வேதனைகளை அனுபவித்து கொண்டிருந்தேனே!

🌟 உன்னை ஒரு காலத்தில் நிச்சயம் காண்பேன். அப்பொழுது உன்னிடம் அனைத்தையும் கூறுவேன் என்று எண்ணி கொண்டிருந்தேனே! கனவுகள் அனைத்தும் கனவாகவே போய் விட்டதா?

🌟 இத்தனை இழப்புகளுக்கும் காரணமாக இருந்த அந்த நம்பிக்கை துரோகியான கட்டியங்காரன் இன்னும் இருக்கின்றானே? அவனை அழிக்க உன்னால் முடியும் என்று தானே எண்ணி கொண்டிருந்தேன். உனது தந்தையின் அழிவிற்கும், நாட்டின் அழிவிற்கும் காரணமாக இருந்தவனை நீ அழிப்பாய் என்று நினைத்து கொண்டிருந்தேனே! அதற்குள்ளாக காலம் உன்னையும் அழைத்து கொண்டதா? ஏன் எனக்கு மட்டும் இவ்வளவு துன்பங்கள் என்று உரக்க கூறி கொண்டே தன்னுடைய இயலாமையை எண்ணி அதிகமாக அழ துவங்கினார் அந்த பெண் துறவி.

🌟 பெண் துறவியின் அழுகையை பார்த்த பதுமுகன், நீங்கள் மகாராணி விசையையா? என்று தயங்கி கேட்டான்.

🌟 ஆமாம். என்னுடைய பெயர் விசையை. நான் சச்சந்தனின் மனைவியாவேன். ராசமாபுரத்தின் ராணியும் நானே. எனக்கும், மன்னருக்கும் பிறந்தவன் தான் சீவகன். அவர் உயிரிழப்பதற்கு முன்னதாகவே எங்களை மயிற் பொறியில் ஏற்றிவிட்டு, எதிரிகளிடம் அகப்படாமல் தப்பிக்க வைத்து விட்டார்.

🌟 அன்றைய நிலையில் என்னால் தனியாக சீவகனை காப்பாற்ற முடியவில்லை. அதனால் என்ன செய்வது? என்று புரியாமல் சுடுகாட்டில் இருந்தேன். அப்பொழுது அவனை காப்பாற்றும் விதமாகவே, கந்துக்கடன் அவருடைய இறந்த மகனை புதைப்பதற்காக அங்கு வந்திருந்தார். அவரை பார்த்ததும் சீவகன் பிழைப்பதற்கு ஒருவழி கிடைத்தது என்று எண்ணி, அவர் கண்களில் படும்படி சீவகனை நான் வைத்தேன். அவர் சீவகனை எடுத்து செல்வதை நான் அறிந்து கொண்டு, என்னுடைய மகன் கந்துக்கடன் வீட்டில் தான் வளர்கின்றான் என்று அமைதி கொண்டேன்.

🌟 சரியான காலம் வருகின்ற பொழுது சீவகனிடம் சென்று அனைத்தையும் கூறலாம் என்று எண்ணி கொண்டிருந்தேன். நான் என்ன பாவம் செய்தேன் என்று தெரியவில்லையே! இப்பொழுது இப்படி ஆகிவிட்டதே! என்று அழுது கொண்டே கூறினாள் விசையை.

🌟 தாயே! அவசரம் கொண்டு அழ வேண்டாம். ஏனென்றால் சீவகன் இன்னும் மரணிக்கவில்லை. அவன் உயிரோடு தான் இருக்கின்றான். அவனை தேடி தான் நாங்கள் அனைவரும் சென்று கொண்டிருக்கின்றோம் என்றான் பதுமுகன்.

🌟 இதை கேட்டதும் தான்... விசையை தனது இயல்பு நிலைக்கு வந்தாள். என்னது! சீவகன் இன்னும் உயிரோடு தான் இருக்கின்றானா? அவனை நான் இப்பொழுதே பார்க்க வேண்டுமே! அவனை அழைத்து வருவீர்களா... அவனிடம் நான் அனைத்தையும் கூற வேண்டும். என் மகன் இப்பொழுது எங்கே இருக்கிறான்? என்று கேட்டாள் விசையை.


Share this valuable content with your friends