No Image
 Tue, Nov 05, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் !!

Oct 23, 2018   Ananthi   585    ஆன்மிகம் 

🌟 ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் தெய்வ பக்தி மிகுந்தவர்களாக இருப்பார்கள். தேசபக்தியும் அவர்களுக்கு இருக்கும்.

🌟 ஐப்பசி மாதத்தில் சிறப்புமிக்க பண்டிகைகளான தீபாவளியும், கந்தனுக்கு எடுக்கும் சஷ்டி விழாவும் வருவதால் கண்ணனையும், கந்தனையும் வழிபட்டு வந்தால், மன்னரைப் போன்ற வாழ்க்கை அமையும்.

🌟 ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அறிவில் சிறந்தவர்கள். மிகுந்த பொறுமைசாலிகள். குறிப்பிட்ட காரியங்களை குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்கும் ஆற்றல் உடையவர்கள்.

🌟 இம்மாதத்தில் பிறந்தவர்கள் எவ்வளவு கடினமான வேலைகளையும் நொடிப்பொழுதில் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உடையவர்கள். நேர்மையானவர்கள். இவர்கள் சிறு விஷயங்களுக்குக்கூட உணர்ச்சி வசப்படும் குணம் கொண்டிருப்பார்கள்.

🌟 வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். இவர்கள் பிறர் செய்த உதவியை மறக்க மாட்டார்கள்.

🌟 இவர்கள் தாங்கள் எடுக்கும் துறையாக கலைத்துறை, எழுத்துத் துறை, ஆடை, ஆபரண, அலங்காரப் பொருள் விற்பனை நிலையம் போன்ற தொழிலில் வளர்ச்சியைக் கூட்டிக் கொள்வார்கள்.

🌟 இவர்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதனால் இவர்கள் சிறு உபாதைகளைக் கூட பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

🌟 ஐப்பசியில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள, கண்ணன் வெண்ணெய் உண்ணும் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாம்.

🌟 இவர்கள் கண்ணனை வழிபட்டால் செய்யும் காரியங்களில் எளிதில் வெற்றி கிடைக்கும்.


Share this valuable content with your friends