No Image
 Sun, Sep 29, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி... சீவகனை சந்தித்ததும் மனம் மகிழ்ந்த நந்தட்டன்..!!

Mar 23, 2023   Ramya   142    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனை சந்தித்ததும் மனம் மகிழ்ந்த நந்தட்டன்..!!

🌟 அங்கே சீவகனுக்கும், கனகமாலைக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்தன. அந்த திருமண விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவருமே நந்தட்டனை பார்த்து வியந்து நின்றனர்.

🌟 அப்பொழுது சீவகன் தன்னை பார்ப்பதற்காக தன்னுடைய தோற்றத்தில் வந்திருக்கக்கூடியவர் யார்? என்பதை நொடியில் அறிந்து கொண்டான். அதாவது, தன்னுடைய சகோதரன் தான் தன்னை காண வந்திருக்கின்றான் என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தான். அப்பொழுது சீவகனுடைய விழிகளில் இருந்து அவனையும் அறியாமல் கண்ணீர் துளிகள் வெளிவந்தன.

🌟 பின் திருமண சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்த பிறகு நந்தட்டனும், சீவகனும் நந்தவனத்தில் அமர்ந்து பல நாள் நிகழ்வுகளை பற்றி ஒருவருக்கொருவர் பேசி கொண்டிருந்தனர்.

🌟 அப்பொழுது சீவகன், நான் எவ்வளவு பெரிய துரதிர்ஷ்டசாலி என்று பார்த்தாயா! என்னால் எத்தனை பேர் துன்பத்தை அனுபவிக்கின்றனர். நம் நாட்டு மக்களிடம் கூட என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. ஏன் நம் குடும்பத்தினரிடமும் கூட நான் எங்கிருக்கின்றேன்? என்று சொல்வதற்கான அவகாசம் இல்லாத அளவு என்னுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டது. கட்டியங்காரனும், மதனனும் இணைந்து எனக்கு எவ்வளவு பெரும் துன்பத்தை செய்து விட்டார்கள் என்று பார்த்தாயா! அவர்களுக்கு பதிலடி கொடுப்பதற்கான நேரம் எனக்கு வரும். அப்பொழுது நான் யார்? என்று அவர்கள் புரிந்து கொள்வார்கள்.


🌟 உடனே நந்தட்டன், ஆமாம்.. உங்களிடம் ஒன்று கேட்க வேண்டும். நீங்கள் எப்படி சிறையிலிருந்து விடுபட்டீர்கள்? பொன்னும், பொருளும் கொடுத்தால் கூட கட்டியங்காரன் உங்களை விடுதலை செய்திருக்க மாட்டானே! அப்படி இருக்கும் பொழுது எப்படி சிறையில் இருந்து தப்பித்தீர்கள்? சொல்லியிருந்தால் நானும் உங்களுடனே வந்திருப்பேன். ஏன் உங்களுடன் தப்பித்து வருவதற்கான தகுதி கூட என்னிடம் இல்லை என்று எண்ணி விட்டீர்களா? என்று கேட்டான்.

🌟 என்ன நந்தட்டா! ஏன் என்னிடம் இப்படி பேசுகின்றாய்? நான் சிறையில் இருந்த பொழுது காந்தருவதத்தை தன்னுடைய மந்திரத்தால் என்னை விடுதலை செய்வதாக கூறினாள். ஆனால் சிறையில் இருந்து தப்பித்தால் நான் எங்கே செல்வது? என்று தெரியவில்லை. அதுமட்டுமல்லாமல் கட்டியங்காரனை கொல்வதற்கான நேரமும் அப்பொழுது என்னிடம் இல்லை. ஆகையால் தான் அவளின் உதவியை வேண்டாம் என்று கூறி சுதஞ்சணனிடம் உதவி கேட்டேன்.

🌟 சுதஞ்சணனுடைய மந்திர செயல்களின் மூலமாக என்னை அவனது இடமான சங்கவெண் மலைக்கு அழைத்து சென்றான். அங்கு இருக்க மனமில்லாமல் பல ஊர்களை தாண்டி இப்பொழுது நாம் இங்கு சந்தித்திருக்கின்றோம். இங்கு வருவதற்கான காரணமும் கூட சுதஞ்சணன் தான். அவன் தான் எங்கு செல்ல வேண்டும்? எப்படி செல்ல வேண்டும்? என்ற வழியையும், பாதுகாப்பிற்காக சில மந்திரங்களையும் என்னிடத்தில் கூறினான். விதி என்னுடைய வாழ்க்கையில் பல விளையாட்டுகளை வருகின்ற வழியில் நிகழ்த்தியிருக்கிறது என்று சொல்லி கொண்டே மனம் விட்டு சிரித்தான் சீவகன்.

🌟 அதற்கு நந்தட்டன், ஆமாம்.. அந்த விதியின் விளையாட்டுகளை தான் நான் பார்த்தேனே! என்று கூற இருவரும் சிரித்து விட்டனர்.

🌟 சரி சரி விடு நேரம் வரும்போது அதுவும் உனக்கு தெரியும். ஆமாம் வீட்டில் அனைவரும் நலமா? அம்மா, அப்பா நன்றாக இருக்கின்றார்களா? நண்பர்கள் எல்லோரும் எப்படி இருக்கின்றார்கள்? அவர்களிடத்தில் சொல்லாமல் வந்ததை எண்ணி என் மீது இன்னும் கோபமாக இருக்கின்றார்களா? என்று கேட்டான் சீவகன்.

🌟 உன் மேல் யாருக்கும் எந்தவிதமான கோபமும் இல்லை. ஆனால் உன்னை கொன்று விட்டார்கள் என்ற செய்தியை கேட்டதும் பெரும் போராட்டமும், போர்க்களமும் நிகழ்வதற்கான அனைத்து சூழலும் அந்த கணத்தில் உருவானது.

🌟 நண்பர்கள் அனைவரும் ஒன்றிணைந்தோம். அதில் பதுமுகன் கோபத்தோடு கட்டியங்காரனை எப்படியாவது அழித்தே தீர வேண்டும் என்று கூறி கொண்டிருந்தான். புத்திசேனனோ கோட்டையை அழித்து கட்டியங்காரனை ஒருவழி செய்ய வேண்டும் என்று கூறினான். அவர்கள் அனைவரும் என்னை மட்டும் இதில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறி விட்டனர். மேலும், அனைவருக்கும் கடைசி காரியங்களை செய்வதற்கு நீயாவது இரு என்று என்னை சொல்லி கொண்டிருந்தார்கள்.

🌟 அதற்கு சீவகன், அப்பொழுதே நினைத்தேன்... நான் சிறையிலிருந்து தப்பித்ததும் மதனன் இவ்விதமாக தான் என்னை பற்றிய வதந்திகளை பரப்புவான் என்றும், நீங்களும் இவ்விதம் தான் செயல்படுவீர்கள் என்றும் நினைத்தேன். நினைத்த மாதிரியே நடந்து விட்டது. ஏதாவது சண்டையை உருவாக்கினீர்களா? அல்லது அமைதி காத்தீர்களா? என்றான்.

🌟 மனதில் அவ்வளவு கோபத்துடனும், உக்கிரமாகவும் உரையாடி கொண்டிருந்த எங்களிடத்தில், நமது மற்றொரு நண்பனான தேவதத்தன் மட்டும் அந்த வகையில் பேசாமல் இருந்திருந்தால், இந்நேரம் நான் இங்கு இருந்திருப்பேனா? என்று எனக்கே தெரியாது என்றான் நந்தட்டன்.

🌟 என்னது! அப்படி உங்கள் அனைவரையும் அமைதி கொள்ளும் வகையில் அவன் என்ன பேசினான்? என்று கேட்டான் சீவகன்.

🌟 உடனே நந்தட்டன், தேவதத்தன் பேசியதை கூற ஆரம்பித்தான். அதாவது, அனைவரும் நான் கூறுவதை பொறுமையாக கேளுங்கள். சீவகன் போர் பயிற்சியையும், வாள் பயிற்சியையும் அதிகம் கற்றவன். நம்மை விட, ஏன்? நமது ஊரிலேயே மிக சிறந்தவனும் கூட. அவனை அவ்வளவு எளிதில் யாராலும் தோற்கடிக்கவோ, கொல்லவோ முடியாத பட்சத்தில், அரைகுறையாக தெரிந்த சில வித்தைகளை கொண்டு நம்மை ஆள்பவனும், அவனுக்கு உதவியாக இருப்பவனும் எப்படி சீவகனை கொன்றிருக்க முடியும்?


Share this valuable content with your friends