No Image
 Wed, Jul 03, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி - சீவகனின் பயிற்சியும்.. நான்கு அரச குமாரர்களின் திறமையும்...!!

Mar 22, 2023   Ramya   166    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகனின் பயிற்சியும்.. நான்கு அரச குமாரர்களின் திறமையும்...!!

🌟 அநங்க விலாசினி அரண்மனையில் இருந்து புறப்பட்டு சென்றவுடன், மன்னரான தடமித்தன் சிறிது நேரத்திலேயே பயிற்சி செய்யும் மகன்களை பார்க்க, எந்தவித அறிவிப்பும் இல்லாமல் போர் பயிற்சி சாலைக்கு வந்தார்.

🌟 மன்னருடைய வருகை அங்கு பலருக்கும் அதிர்ச்சியாகவே இருந்தது. அப்பொழுது அந்த இடத்தில் மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டிய குரு இல்லை என்பதை அறிந்து கொண்டார் தடமித்தன். பின் எங்கே உங்களுடைய குரு? அவரில்லாமல் நீங்கள் இங்கு என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? நீங்களே தனியாக பயிற்சி செய்து கொண்டிருக்கிறீர்களா? என்று கேட்டார்.

🌟 அதற்கு நால்வரில் ஒருவன், இல்லை.... தந்தையே! நாங்கள் அனைவரும் நாளை உங்களுக்கு முன்னால் செய்து காட்ட வேண்டிய வித்தைகளை தான் இப்பொழுது பயிற்சி செய்து கொண்டிருக்கின்றோம். எங்களுடைய குருவானவர் அதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக சென்றிருக்கின்றார் என்று கூறினான்.

🌟 அருகில் இருந்த சுழலும் மீன் பொறியை பார்த்த மன்னன் விசயனை அழைத்தார். சொல்லுங்கள் தந்தையே! இப்பொழுது நான் என்ன செய்ய வேண்டும்? என்றான் விசயன்.


🌟 இப்பொழுது சுழன்று கொண்டிருக்கும் மீனின் கண்களில் நீ சரியாக குறி பார்த்து அம்பு எய்வாயா? என்று கேட்டார். அதற்கு விசயன் எந்தவொரு பதிலும் சொல்லாமல் தனது கரங்களில் வில் ஏந்தி நொடிப்பொழுதில் தடமித்தன் கூறிய மீனின் கண்ணில் அம்பை எய்தினான்.

🌟 இதை பார்த்த தடமித்தனுக்கு மிகுந்த பிரமிப்பாக இருந்தது. சிறு மாம்பழத்திற்காக பல அம்புகளை எய்தவன், இன்று ஒரே அம்பில் இலக்கை அடைந்து விட்டானே! என்று ஆச்சரியத்துடன் இருந்தார்.

🌟 பின் அவனுக்கு அருகில் இருந்த கதம்பனை பார்த்து, கதம்பா! உன்னுடைய திறமை என்னவென்று இப்பொழுதே காட்டு? என்று கேட்க, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தனது கரத்தில் இருந்த வேலினால் ஒரு பெரும் மரத்தினை இரண்டாக பிளந்தான் கதம்பன்.

🌟 அப்பொழுது அவர்கள் பயிற்சி செய்த இடத்தில் கட்டிப்போடப்பட்ட யானை கட்டுப்பாடுகளை தகர்த்தெறிந்து தடமித்தனை நோக்கி ஆவேசமாக வந்து கொண்டிருந்தது.

🌟 தந்தையை தாக்க யானை வந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொண்ட கனகன், உடனே தன் அருகில் இருந்த குதிரையில் ஏறி யானையை தாண்டி யானையின் முன்னால் வேல் ஏந்தி அதை கொல்வதற்காக நின்றான். அதேசமயம் யானையின் வேகத்தை நொடியில் குறைத்து, மன்னரின் முன்னால் அதே யானையை தாழ்ந்து வணங்கும் படியான சூழலை உருவாக்கினான் அசலகீர்த்தி.

🌟 அந்த யானையின் மதம் போலி என்பதை கனகன் உணர்ந்ததால் சிறிது நொடியில் யானையின் உயிரும் தப்பித்தது.

🌟 மிக குறுகிய நாட்களிலே தன்னுடைய மகன்கள் நால்வரும் மாபெரும் வீரர்களாக மாறியதை கண்கூட பார்த்த தடமித்தனுக்கு, மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தாலும் அதனை வெளிக்காட்டி கொள்ளாமல் கோபத்துடன் இருந்தார்.

🌟 என்னிடத்தில் வணிக குலத்தை சேர்ந்தவன் என்றானே உங்களுடைய குரு! ஆனால் அவனது பயிற்சிகள் யாவும் வணிக குலத்தை சேர்ந்தது போல தெரியவில்லையே? என்னிடத்தில் பொய் உரைத்திருக்கின்றான். இவ்வளவு வித்தைகளையும் குறுகிய நாட்களுக்குள் மாணவர்களுக்கு கற்று தருவது சாதாரண காரியம் அல்ல. அவன் வணிக குலத்தை சார்ந்தவன் அல்ல.

🌟 நாளை தான் உங்களது குருவிற்கு கடைசி நாளாக இருக்கும். உங்களுடைய வித்தைகள் அனைத்தையும் செய்து முடித்தவுடன் அவனை சிறையில் அடைக்கின்றேன். எவ்வளவு தைரியம் அவனுக்கு இருக்க வேண்டும்? மன்னரிடத்திலே பொய் உரைத்திருக்கின்றான் என்று கூறி கொண்டே அவ்விடத்தில் இருந்து கோபத்துடன் கிளம்பினார் தடமித்தன்.

🌟 சிறிது நேரத்தில் சீவகன் அவ்விடத்திற்கு வந்த பொழுது நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் நான்கு அரச குமாரர்களும் கூறினார்கள். ஆனால் சீவகன் அவர்கள் கூறியதை கேட்டு எந்தவிதமான அதிர்ச்சியும் கொள்ளாமல் இயல்பாகவே இருந்தான்.


🌟 அந்த நால்வருக்கும் சீவகனுடைய இயல்பான நடவடிக்கைகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதை பொறுத்து கொள்ள முடியாத நால்வரும் சீவகனிடம் சென்று, நாளை உங்களுக்கு மன்னர் தண்டனை கொடுக்கப்போவதாக சொல்கின்றார். நீங்கள் அதை பற்றி கவலை கொள்ளாமல் எப்பொழுதும் போல இயல்பாகவே இருக்கின்றீர்களே! என்று வினவினார்கள்.

🌟 சீவகன் அவர்களை பார்த்து, மன்னர் எதை செய்தாலும் அதில் பலரின் நன்மைகள் அடங்கியிருக்கும். ஆகவே அவர் கூறிய எதையும் நினைவில் கொள்ளாமல், உங்கள் பயிற்சிகளில் கவனம் செலுத்துங்கள். மேலும் நாளை நடக்கவிருக்கும் நிகழ்வு அனைவரின் வாழ்க்கையிலும் பெரிய மாற்றத்தையும், தாக்கத்தையும் உருவாக்கலாம் என்று கூறினான்.

🌟 அந்த நால்வரும், குரு கூறியதில் ஏதோவொரு விஷயம் மறைந்திருக்கின்றது அது நாளை வெளிப்படலாம் என்பதை புரிந்து கொண்டு, நாளைய தினத்தை எதிர்பார்த்து கொண்டே, அவர்களுக்கான பயிற்சிகளை திறம்பட செய்து கொண்டிருந்தனர்.


Share this valuable content with your friends


Tags

பால் measham பரிவர்த்தனை என்றால் என்ன? படுத்துக்கொண்டு இருப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்? மாமனாரும் மகர லக்னத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? குழந்தை துள்ளி குதித்து விளையாடுவது போல் கனவு கண்டால் என்ன பலன்? மிதுனத்தில் கேது இருந்தால் என்ன பலன் ராமர் திருமணம் வீட்டின் முன் வேப்பமரம் மற்றும் ஆலமரம் இருப்பது நல்லதா? 18.10.2020 Rasipalan in PDF Format!! PDF 19.10.2018 vadai ஏகாதசி விரதம் பங்குனி மாதம் ஸ்ரீரங்கம் செல்வது நல்லதா? பெண்களுக்கு நீண்ட கூந்தல் இருப்பது நல்லதா? கெட்டதா? ருத்ராட்சத்தை கனவில் கண்டால் என்ன பலன்? உத்திரட்டாதி நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்? அறிஞர் அண்ணாதுரை VERAKU