No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




உங்களுக்குள் இருக்கும் பயம் விலக… இந்த பரிகாரத்தை செய்தாலே போதும்..!!

Mar 22, 2023   Ramya   142    ஆன்மிகம் 


உங்களுக்குள் இருக்கும் பயம் விலக என்ன செய்யலாம்?


🌺 நாம் வாழும் வீடு என்பது லட்சுமி கடாட்சத்துடன் இருக்க வேண்டும். நமது வீட்டில் எப்போதும் நேர்மறை அதிர்வுகள் இருக்க வேண்டும். இவ்வாறு நமது வீடு சுபிட்சத்துடனும், மகாலட்சுமி அம்சத்துடனும் இருந்தது என்றால் வீட்டிற்குள் வரும் தீயவர்களின் எண்ணமும், அவர்கள் செய்ய நினைக்கும் தீமையும் பலிக்காமல் போகும்.

🌺 ஒரு சிலருக்கு மன பயத்தின் காரணமாக இரவில் உறக்கம் வராது. யாரோ தன்னை பின் தொடர்வது போன்ற உணர்வு ஏற்படும். எப்பொழுதும் பதட்டத்துடனே இருப்பார்கள். தங்கள் வீட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கூட அவர்களின் மனது முழுமையாக ஈடுபடாது. இப்படி எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருப்பார்கள்.

🌺 இவ்வாறான பிரச்சனைகளில் இருந்து விடுபட நமது இல்லங்களில் வாரந்தோறும் கீழே குறிப்பிட்ட பரிகாரங்களை செய்தாலே போதும்.

பரிகாரம் 1 :

👉 செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தவறாமல் விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும். அதிலும் சாம்பிராணி புகை போட்டு வீடு முழுவதும் காண்பிக்க வேண்டும்.

👉 இவ்வாறு செய்வதன் மூலம் நமது வீட்டிலிருக்கும் எதிர்மறை அதிர்வுகள் அடியோடு அழிந்துவிடும்.

👉 அனைவரும் தங்கள் இல்லங்களில் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி வழிபடுவது வழக்கம் தான். ஆனால் வீட்டில் சுபிட்சம் நிலவவும், அதிர்ஷ்டம் வருவதற்கும் பஞ்சகவ்ய விளக்கை ஏற்றி வழிபட வேண்டும்.

👉 பஞ்சகவ்ய விளக்கு பல விதமான பொருட்களில் இருந்து செய்யப்பட்டது.

👉 இது பஞ்சபூதத்தின் சக்தியை கொண்டுள்ளது. பஞ்சபூதங்களின் சக்தி நமது இல்லங்களில் பரவி இருந்தால் எந்தவித துர்சக்தியும் நமது வீட்டில் இருக்க முடியாது.

👉 எனவே வாரந்தோறும் பஞ்சகவ்ய விளக்கு ஏற்றுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

பரிகாரம் 2 :

👉 ஒரு சிறிய மண் பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு, அதனை காலை சூரிய ஒளி படுகின்ற இடத்தில் வைத்துவிட வேண்டும்.

👉 பிறகு மாலை சூரியன் மறைந்ததும் இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விட வேண்டும்.

👉 இவ்வாறு செய்வதன் மூலம் அனைத்திற்கும் முதன்மையானவரான சூரிய பகவானின் அருள் பெற்ற இந்த நீர், வீடு முழுவதும் பரவியிருக்க, நமது வீடு தூய்மை அடைந்துவிடும். இதனை தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.


Share this valuable content with your friends