No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




சீவக சிந்தாமணி... சீவகன் தொடுத்த ரகசிய மாலை..!!

Mar 21, 2023   Ramya   172    சீவக சிந்தாமணி 


சீவக சிந்தாமணி... சீவகன் தொடுத்த ரகசிய மாலை..!!

🌟 உடனே விசயன் அம்பை எடுத்து, வில்லின் நாணில் பொருத்தி, மாங்கனியை குறி பார்த்து அடித்தான். மாங்கனியும் அவனது குறியில் சரியாக சிக்கியது. இதை பார்த்த சீவகன் இப்பொழுது நீ சுழலும் பொறிக்கு தயாராக இருக்கின்றாய் என்று கூறிவிட்டு, ஆட்களை அழைத்து உடனே சுழலும் பொறியை அமைக்க சொல்லி அனுப்பினான்.

🌟 அப்பொழுது சற்றும் எதிர்பாராத விதமாக மிகுந்த வேகத்துடன் குதிரையில் வந்தான் கனகன். குருவை கண்டதும் நொடியில் குதிரையின் வேகத்தை குறைத்து, குருவின் முன் பணிந்து நின்றான். குருவே இப்பொழுது குதிரைகள் எனது கட்டளைக்கு கட்டுப்பட்டு செயல்படுகின்றன என்று கூறினான்.

🌟 அதற்கு சீவகனும், ஆமாம் குதிரைகள் உன்னுடைய பேச்சுக்கு கட்டுப்பட்டு செயல்படுகின்றன என்பதை நானும் கவனித்தேன் என்றான்.

🌟 அதே சமயம் போர் பயிற்சி கற்று கொடுக்கும் இடத்தின் அருகிலிருந்த யானைக்கு திடீரென்று மதம் பிடித்து விட்டது. அங்கிருந்தவற்றை யானையானது நாசம் செய்து கொண்டிருக்க, அங்கிருந்த வீரர்களோ என்ன செய்வதென்று புரியாமல் நின்று கொண்டிருந்தனர். யானையும் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது.

🌟 அதை பார்த்த சீவகன் அந்த யானையை அடக்குவதற்கு பதிலாக அமைதியாக கவனித்து கொண்டிருந்தான். அங்கே யாரும் எதிர்பாராத விதமாக மதம் பிடித்த யானையானது நொடி பொழுதில் அமைதியானது. அப்பொழுது அந்த யானையின் காலுக்கு அடியில் மறைந்து நின்று அதை வழி நடத்திய அசலகீர்த்தி வெளிப்பட்டான்.

🌟 அங்கிருந்த அனைவருக்கும் அப்பொழுது தான் உயிர் வந்தது போல இருந்தது. என்ன இளவரசே? என்ன விளையாட்டு இது? நொடி தப்பினால் மரணமும் ஏற்படலாம் அல்லவா! என்றனர் அங்கிருந்த வீரர்கள்.

🌟 அதற்கு உடனே அசலகீர்த்தி, யானையை வழி நடத்தவும், மதம் பிடித்த யானையை அடக்கவும் எனது குருநாதர் சொல்லி கொடுத்திருக்கும் பொழுது, அவ்வளவு எளிதில் மரணம் என்னை தொட்டு விடுமா? என்று கூறிவிட்டு மீண்டும் தனது பயிற்சியை மேற்கொண்டான்.

🌟 நான்கு அரச குமாரர்களின் பயிற்சியையும் அமைதியாக கவனித்த சீவகன், கனகனிடம் நீங்கள் நான்கு பேரும் போர் பயிற்சியில் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபட்டிருக்கின்றீர்கள். நால்வரும் இணைந்தால் நீங்கள் தான் அதிர்ஷ்டக்காரர்கள் என்றும், அதுமட்டுமல்லாமல் நீங்கள் தான் என்னுடைய அதிர்ஷ்டம் என்றும் சீவகன் கூறி கொண்டே ஒரு மாலையை தொடுத்து கொண்டிருந்தான்.

🌟 அப்பொழுது அந்த நால்வரில் ஒருவன், என்ன குருவே எங்களுக்கெல்லாம் போர் கலைகளை கற்று கொடுக்கின்றீர்கள். ஆனால் நீங்களோ மாலையை தொடுத்து கொண்டிருக்கின்றீர்கள். இதையெல்லாம் பெண்கள் தானே செய்வார்கள். நீங்கள் ஏன் இதை செய்கின்றீர்கள்? என்றான்.

🌟 அதற்கு சீவகன், இது பெண்கள் தொடுக்கக்கூடிய சாதாரண மாலை அல்ல. இது வித்தியாசமான மாலை ஆகும். இதில் நான் பூக்களை மட்டும் தொடுக்கவில்லை. சில ரகசியங்களையும் சேர்த்து தொடுத்திருக்கின்றேன். அந்த ரகசியங்களை அனைவராலும் எளிதில் படித்து விட முடியாது. ரகசியங்களை படிப்பதில் யாருக்கெல்லாம் தேர்ச்சி இருக்கின்றதோ, அவர்களால் மட்டுமே இதை படிக்க முடியும். இது ஒரு வகையான ரகசியம் பரிமாற்று மாலை என்று கூட கூறலாம் என்றான்.


🌟 என்னது! இதில் கூட ரகசியங்களை பரிமாற்ற முடியுமா? பூக்களில் நீங்கள் என்ன ரகசியம் தொடுத்து வைத்திருக்கின்றீர்கள்? இதை எங்களுக்கும் கற்று கொடுக்கலாம் அல்லவா! என்றான் கனகன். அதற்கான காலம் வருகின்ற பொழுது உனக்கு நான் கற்று தருகிறேன் என்று கூறினான் சீவகன்.

🌟 அந்த வேளையில் கனகனுக்கு பின்புறம் இருந்த பணிப்பெண்ணான அநங்க விலாசினி, மாலை மிகவும் அழகாக இருக்கின்றதே! போர் கலைகளில் தேர்ச்சி பெற்ற ஒருவர் இப்படியொரு மாலையை தொடுக்க முடியுமா? என்றாள்.

🌟 மாலை அழகாக இருக்க தொடுப்பது மட்டும் காரணமாக இருக்காது. அதில் இருக்கக்கூடிய பூக்கள் நல்லவிதமாக இருக்க வேண்டும். அவ்விதம் இருக்கும் பொழுது மட்டுமே மாலையானது காண்பதற்கு அழகாகவும், தொடுத்தலையும் அழகுடன் காட்டும். இதில் என்ன உங்களுக்கு ஆச்சரியம் இருக்கின்றது? என்றான் சீவகன்.


Share this valuable content with your friends