No Image
 Mon, Jul 01, 2024
 முகப்பு சீவக சிந்தாமணி விக்ரமாதித்தன் கதைகள் வார ராசிபலன் சனிப்பெயர்ச்சி 2023-2025 சிவபுராணம் இன்றைய ராசிபலன் ஜோதிடர் பதில்கள் வாஸ்து கனவு பலன்கள் ஆன்மிகம் வரலாற்றில் இன்று  தொடர்புக்கு




பங்குனி அமாவாசை.. முன்னோர்களின் ஆசி கிடைக்க வழிபாடு…!!

Mar 21, 2023   Ramya   190    ஆன்மிகம் 


பங்குனி அமாவாசை...!!


🌑 12 மாதங்கள் கொண்ட தமிழ் மாதத்தில் இறுதியாக வரும் மாதம் பங்குனி மாதமாகும். பங்குனி மாதம் என்பது பல ஆன்மிக திருவிழாக்கள் கொண்டாடப்படும் ஒரு மாதமாக இருக்கிறது.

🌑 இந்த மாதத்தில் வரும் தினங்கள், திதிகள் அனைத்தும் சிறப்பானதாகும். இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. குளிர்காலம் முடிந்து கடும் கோடைகாலம் தொடங்குவதற்கான மாதமாக பங்குனி மாதம் இருக்கிறது. அந்த வகையில் "பங்குனி மாத அமாவாசை" தினத்தின் சிறப்புகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

வழிபடும் முறை :

🍙 பங்குனி மாத அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, உங்கள் ஊரில் இருக்கும் ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் வேதியர்களை கொண்டு மறைந்த முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தர வேண்டும்.

🍙 சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அமாவாசை திதியில், தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைக்க வேண்டும்.

பலன்கள் :

🍀 குழந்தை பேறில்லாமல் தவிப்பவர்கள் இந்த தினத்தில் அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட அந்த அம்மனின் அனுக்கிரகத்தால் நிச்சயம் புத்திர பாக்கியம் உண்டாகும்.

🍀 தொழில் மற்றும் வியாபாரங்களில் ஈடுபடுபவர்கள் பங்குனி அமாவாசை தினத்தில் திருஷ்டி பூசணிக்காய் வாங்கி தொழில் மற்றும் வியாபார இடங்களை திருஷ்டி கழித்து அதற்குரிய நேரத்தில் உடைக்க வேண்டும்.

🍀 பங்குனி அமாவாசை வழிபாடானது, இந்த ஆண்டு ஏற்பட்ட தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, அடுத்து பிறக்கும் தமிழ் புத்தாண்டு காலத்தில் வளமையை பொங்க செய்யும்.

🍀 பித்ரு சாபம் மற்றும் குலதெய்வ சாபங்களால் உங்களுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.

🍀 திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் நீடித்த தடை, தாமதங்கள் நீங்கும்.

🍀 உணவிற்கு கஷ்டப்படும் நிலை என்றென்றும் ஏற்படாமல் தடுக்கும். செல்வ நிலை உயரும்.


Share this valuable content with your friends